ஞாயிறு, 17 அக்டோபர், 2021

மனத் திட்பம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 116

#1
"இதயம் என்பது என்ன? 
ஒரு பூப் பூப்பது." 
_Rumi


#2
‘அழகிய மலர்களைக் கண்டு களிக்க 
முதலில் அவை பயிரிடப்பட வேண்டும்.’


#3
'நாம் கேட்கின்ற ஒவ்வொன்றும் 
ஒரு கருத்தே அன்றி 
மெய் அன்று. 
நாம் பார்க்கின்ற ஒவ்வொன்றும்

வெள்ளி, 15 அக்டோபர், 2021

தொட்டது துலங்கட்டும்..! - விஜயதசமி வாழ்த்துகள்..!

முப்பெரும் தேவியர்



டந்த இரண்டு வருடங்களாக அவரவர் வீட்டில் சிறிய அளவில் கொலு வைத்து யாரையும் அழைக்க வழியின்றி எங்கு செல்லவும் வழியின்றி நவராத்திரியை வழிபாட்டினைச் செய்தவர்கள் இந்த வருடம் ஆசுவாசமாகி கொண்டாட்ட மனநிலைக்கு வந்திருப்பது ஆரோக்கியமான நேர்மறை அதிர்வலைகளைப் பரப்பியுள்ளது (positive vibes) என்றே சொல்ல வேண்டும்.

நான் சென்று பார்த்த கொலுக்களின் படங்களில் சில முன்னோட்டமாக இந்தப் பதிவில், விஜயதசமி வாழ்த்துகளுடன்..!

தங்கை வீட்டுக் கொலு

கடந்த ஐந்து வருடங்களாகக் கொலு வைத்து வருகிறார் தங்கை.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

சொல்வனம்: இதழ் 255 - புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி? - கோபால் ஹொன்னல்கரே கவிதை

 


புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி?


வற்றை ஒன்றாக விட்டு வைக்காதீர்கள்
அவற்றை ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ள அனுமதிக்காதீர்கள்
அவை தொழிற்சங்கம் அமைக்கக் கூடும்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவற்றை 
சுவர்க் கடிகாரம், சட்டப் புத்தகங்கள், நாட்காட்டி, தேசியக் கொடி,
காந்தியின் உருவப்படம் அல்லது செய்தித் தாளின் அருகே வைத்து விடாதீர்கள்.
சுதந்திரம், சத்தியாகிரகம்,
விடுமுறைகள், வேலை நேரம், குறைந்தபட்சக் கூலி, லஞ்சம்
ஆகியவற்றைப் பற்றி அவை அறிந்திடக் கூடும்.