ஞாயிறு, 20 ஜூன், 2021

கண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்..

பூனைகள்.. பூனைகள்..

#1

ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், 
அது உங்களிடத்தில் எந்த  மாற்றத்தையும்  ஏற்படுத்தாது.

#2

எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்திராத வரையில், 
என்னை மதிப்பிட முயன்றிடாதீர்கள்! 

#3

“உங்கள் காதுகள் கேட்பது ஒன்றாகவும், 
உங்கள் கண்கள் பார்ப்பது வேறாகவும் இருக்கையில், உங்களது மூளையைப் பயன்படுத்துங்கள்.”
Frank Sonnenberg


#4

சலனங்களுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே, 
உள்ளுக்குள் அமைதி காத்திடுங்கள். 

#4

மூடியிருக்கும் கண்கள் யாவும் தூங்கிக் கொண்டிருப்பதில்லை. 
திறந்திருக்கும் கண்கள் யாவும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.

#5

உங்கள் கனவுகளைப் பற்றிக் கொண்டிருங்கள். 
ஒரு நாள், அவை பலிக்கும்.
_Sri Sri Ravi Shankar

**

படம் ஒன்றைத் தவிர்த்து மற்றன.. என் வீட்டுத் தோட்டத்தில்.. பாகம்: 103

**

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..

***

8 கருத்துகள்:

  1. அழகிய பூனைகள்,  அர்த்தமுள்ள வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஹையோ பூனைகள் அனைத்தும் அழகு. அதனோடு வந்த வரிகளும் அதில் மூடியிருக்கும் கண்கள்.......அந்த வரிகள் செம.

    ஸ்ரீராம் வீட்டு பூனாச்சு நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அழகிய பூனைகள் படம்.
    நானும் நிறைய பூனைகள் எடுத்து வைத்து இருக்கிறேன். உங்களஒ போல் அழகாய் எடுக்கவில்லை.
    தூரத்திலிருந்து எடுத்த பூனைகள் படம் இருக்கிறது. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. பூனைகள் போஸ் கொடுக்கத் தயங்குவதில்லை:).

      நீக்கு
  4. ஆஹா... இந்த வாரம் பூனைகளா? அனைத்து படங்களும் அழகு. தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த வாசகங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு