புதன், 26 மே, 2021

ஃப்ளிக்கர் நாலாயிரம்.. சூரிய ஒளிவட்டம்.. - தூறல்: 40

டைவிடாது ஒன்றில் குறையாத ஆர்வத்துடன் ஈடுபடுவதும், அதைத் தொடர முடிவதும் கொடுப்பினை. நாலாயிரம் என்பது ஒரு இலக்கம், அவ்வளவே. நிச்சயமாக எண்ணிக்கை என்றும் இலக்கு அல்ல. 2008_ஆம் ஆண்டு ஆரம்பித்த ஃப்ளிக்கர் கணக்கின் ஒளிப்பட ஓடையில்  51,75,000++ பக்கப் பார்வைகளைப் பெற்று  4000 படங்களைப் பதிந்து முடித்துக் கடந்து கொண்டிருக்கிறேன். சுற்றியுள்ள உலகம் பெரும் சோர்வைத் தந்திருக்கும் இவ்வேளையில் மனதிற்கு சிறு வெளிச்சம் தருகின்றது கடந்து வந்த இப்பாதை.

எனக்கான சேமிப்பாகவும்
உங்களுடனான பகிர்வாகவும்..:)!

நாலாயிரமாவது படமாகப் பதிந்த சூரிய ஒளிவட்டம். நேற்று முன் தினம் 24 மே அன்று,

ஞாயிறு, 9 மே, 2021

சரியான பாதை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (100)
பறவை பார்ப்போம் - பாகம்: (67)

#1

“உலகத்திலேயே மிக முக்கியமான நேரம், 
நீங்கள் உங்களுக்காக செலவிடும் நேரம்.”


#2

"கடந்த கால கசப்புகளைத் திரும்பிப் பார்க்கும் ஆர்வம் வற்றி விட்டால்

சனி, 1 மே, 2021

மே தினம் 2021 - பாதுகாப்பு.. ஆரோக்கியம்..

 #1

1 மே, சர்வதேச உழைப்பாளர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் தம் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தினம் உதவி வருகிறது. சென்ற வருடம் நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன், பல இலட்சம் உழைக்கும் மக்களைக் கால்நடையாக தம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வைத்தது. இந்த வருடம் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை அவர்களை மேலும் கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆண்டு மே தினத்தின்பேசு பொருளாக உழைக்கும் மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று, லாக் டவுன், வேலையின்மை பிரச்சனைகளிலிருந்து உலகம் மீண்டு வரப் பிரார்த்திப்போம். இரவும் பகலுமாக கொரானா நோயாளிகளுக்காக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களைப் போற்றுவோம்.

உழைப்பாளர்களைப் போற்றும் விதமாகச் சில படங்கள்:

#2


#3