ஞாயிறு, 24 நவம்பர், 2019

புதிய ஆரம்பங்கள்

#1
'பிரபஞ்சம் உங்களுக்கு வெளியே இல்லை.
உங்களுக்குள்ளேயே நீங்கள் பாருங்கள்; 
உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ, 
ஏற்கனவே நீங்கள் அதுவாக இருக்கின்றீர்கள்!'
_ரூமி

#2
"எப்படி வாழ வேண்டுமென்பதை 
நான் கற்றுக் கொண்டு விட்டதாக நினைக்கும் கணத்தில், 
வாழ்க்கை மாறத் தொடங்கி விடுகிறது."
_ Hugh Prather

#3
"அன்புதான் விடை, அது உங்களுக்கு நன்றாகத் தெரியும்;

வெள்ளி, 22 நவம்பர், 2019

காடு மல்லேஸ்வரர் - கல்கி தீபம் இதழில்..

5 டிசம்பர் 2019, கல்கி தீபம் இதழில்..


பெங்களூரின் மல்லேஸ்வரம் பகுதியில் புராதானக் கோவில்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் முக்கியமானது காடு மல்லேஸ்வரர் ஆலயம். இங்கே சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மல்லிகார்ஜூன் பெயராலேயே இப்பகுதிக்கு மல்லேஸ்வரம் எனப் பெயர் வந்திருக்கிறது. ‘காடு’ எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப் படுகிறது. 

பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லேயால்

ஞாயிறு, 17 நவம்பர், 2019

கேட்க கேட்க கண்கள் கேட்க!

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (62) 
பறவை பார்ப்போம் - பாகம் (46)
#1
“நம் இருப்பு மிகச் சரியான இடத்தில் அமையுமாறு 
பார்த்துக் கொண்டோமேயானால், 
மற்றவற்றைச் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பார்த்துக் கொள்ளும்.”

#2
“சுற்றி நடக்கும் விஷயங்களைக் கொண்டு, 
நகர முடியாமல் நன்றாக மாட்டிக் கொண்டோம் என 
ஒருபோதும் அனுமானிக்காதீர்கள்.
 வாழ்க்கை மாறுகிறது, உங்களாலும் முடியும்.”

_ Ralph Marston.

#3
“வாழ்க்கையொன்றும் 
நாம் நினைக்கிற அளவுக்குக் கடுமையானதல்ல.”

புதன், 13 நவம்பர், 2019

சொர்க்கம் தந்த மலர்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்!

‘பூமி தன் களங்கமின்மையைக் 
குழந்தைகளின் சிரிப்பில் வெளிப்படுத்துகிறது.’
#1


#2



‘ஒவ்வொருவர் வாழ்விலும் இனிய பருவமென்பது 
குழந்தைப் பருவமே.’

ஞாயிறு, 10 நவம்பர், 2019

நம்பிக்கைப் பறவை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (61) 
பறவை பார்ப்போம் - பாகம் (45)

#1
"உண்மையிலேயே, என்னால் முடியும்"

#2
"நீங்கள் சொல்லும் உண்மை
மற்றவரை சிறிது நேரம் வருந்த வைக்கலாம். 
ஆனால் பொய் வாழ்நாளும் முழுவதும் வருந்த வைக்கும்.”

வியாழன், 7 நவம்பர், 2019

ஹொஸ்கொடே ஏரி, பெங்களூரு

#1
பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில், (ஓல்ட் மெட்ராஸ் ரோட்) பழைய சென்னை  சாலையில் இருக்கிறது ஹொஸ்கொடே எனும் தொழில் நகரம். இந்நகரின் நடுவே ஓடுகிற தக்ஷிண பினகினி நதியின் நீர்பிடிப்புப் பரப்பாக இருக்கிறது ஹொஸ்கொடே ஏரி.  

#2

கடும் குளிர் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் உலகின் வட பகுதிகளிலிருந்து குறிப்பாக சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவை நோக்கி வருகின்றன.  தென்னிந்தியாவில் பல பெரிய ஏரிகளைக் கொண்டிருப்பதால்  பெங்களூரை நாடி வரும் பறவைகள் அதிகம்.   மிகப் பெரிய ஏரியான ஹொஸ்கொடே ஏரியைப் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கிறார்கள். ஏனெனில் பெலந்தூர் மற்றும் வர்த்தூர் ஏரிகளைப் போல் ஆலை மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகள் கலக்காமல் சுத்தமான நீருடன் விரிந்து பரந்து இருக்கிறது இந்த ஏரி.  பறவைகளின் புலம்பெயர் பருவத்தில் சுமார் 70 வகைப் பறவைகளை இங்கே பார்க்க முடியும் என்கிறார்கள்.

#3

ஞாயிறு, 3 நவம்பர், 2019

சமுதாயம் என்ற ஒன்று

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (60) 
பறவை பார்ப்போம் - பாகம் (44)
#1
"உங்கள் மதிப்பை உணருங்கள். 
உங்கள் தகுதிக்குக் குறைவான எதையும் 
ஏற்றுக் கொள்ளாதீர்கள்."
[Indian Grey Hornbill - இந்திய சாம்பல் இருவாச்சி]

#2
உரக்கச் சொல்லுங்கள்
உண்மையை
உணர்த்த விரும்பும் போது”