வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

தரையிறங்கிய வானில்.. - ‘தி இந்து’ காமதேனு இதழில்..

4 ஆகஸ்ட் 2019, ‘தி இந்து’ காமதேனு இதழில்.. 
பக்கம் 47, ‘நிழற்சாலை’ பகுதியில்..

தரையிறங்கிய வானில்..

வானம் தரையிறங்கியது ஓர் நாள்
பாரம் தாளாது.
விரிந்த கம்பளத்தில்
சிதறிக் கிடந்த நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றிலிருந்தும்         
மெளனமாக வெளிவருகின்றன
ஆயிரக்கணக்கான ஆசைகளும்
சொல்லப்படாத கதைகளும்.
தாலாட்டுகளால் நன்றிகளால்
ஒளியேற்றப்பட்ட நிலவோ 
பிரகாசித்துக் கிடந்தது ஒரு மூலையில்
கவனிப்பாரின்றி.
வெளிச்சத்தை அருளி வந்த சூரியன்
வெந்தணலாய்த் தகிக்கிறது
கோபமான சாபங்களால்.
துரோகங்களைத் தாங்கவியலா
குமுறல்களால்
கருத்து உருளுகின்றன
கணக்கிலடங்கா மேகங்கள்.
ஏன் எனக்கு மட்டும்..
எதனால் இப்படி.. போன்ற
வருத்தங்களும் கேள்விகளும்
மழைத் துளிகளாக
சந்தேக விதைகளின் மேல் விழுந்து
செழித்து உயர்ந்து
பூத்துக் குலுங்குகின்றன மரங்களாக.
தீராதத் தேடல் காற்றில் உதிர்ந்து
பாதையை நிறைத்த அம்மலர்கள்
பாதங்களை வருடுபோது
பார்க்கிறோம்
நம்மால் உருவானவையாக
அவற்றில் சில.
*

படம்: இணையத்திலிருந்து..
**


நன்றி காமதேனு!


***

16 கருத்துகள்:

  1. சொல்லப்படாத கதைகள் அழகிய பூக்களாக உருவாக உதவிய சூரியனுக்கு நன்றி.

    கவனிக்கப்படவில்லை என்றாலும் நிலாவும், பூக்களும் தன்னளவில் எப்போதும் அழகு தானே!

    வாசிப்பவரது கற்பனையைத் தூண்டும் உவமானங்கள்.

    அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கவிதை. காமதேனுவில் வெளியீடு - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மிக சிறப்பு ...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு