ஞாயிறு, 21 ஜூலை, 2019

பிடிமானம் - [ ஓணான் - என் வீட்டுத் தோட்டத்தில்.. பாகம் (56) ]


#1
"நீங்கள் பொருட்படுத்தவில்லை எனில் 
அது ஒரு பொருட்டே இல்லை."
 - Jack Benny


#2
"பிடிமானத்தைப் பெறுங்கள்,
வாழ்க்கையைப் பெறுங்கள்,
கடந்து மேலே வாருங்கள்."
_ Justin Johnson


#3
"என்றைக்கும் தலையைத் தாழ்த்தாதீர்கள். 
நிமிர்ந்தே இருங்கள். 
உலகை அதன் கண்களுக்குள் நேருக்கு நேராகச் சந்தியுங்கள்." 

_ Helen Keller


#4
"நாங்கள் முன்னேறிச் செல்வோம், 
நாங்கள் மேல் நோக்கிச் செல்வோம், 
ஆம், 
தொடர்ந்து சென்றபடியே இருப்போம்."
_ Dan Quayle

#5
 “போதும் என்ற உணர்வு விருந்துக்குச் சமமானது”
_ Henry Fielding
[இரையாகக் கிடைத்த எறும்புக் கூட்டத்தைக் கண்டு
குதூகலிக்கும் ஓணான்]

#6

”தற்போது உங்களைக் கீழே இழுப்பது எதுவானாலும் 
அவற்றைக் கடந்து எழும்பி நிற்க வைக்கும் 
உங்களுக்குள் இருக்கிற சக்தி.”


**

என் வீட்டுத் தோட்டத்திற்கு வருகை தந்த வேறு சில வகை ஓணான்கள் கீழ் வருபவை. முன்னர் சில பதிவுகளில் பகிர்ந்து விட்டிருக்கிறேன் என்றாலும் ஓணான் வகைகளின் சேமிப்புக்காக இணைப்புகளாக இங்கே:



***

12 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை வகைகள் இவற்றில். பாண்டிச்சேரியில் நான் எடுத்த ஓணான் படம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஆகா! அழகிய படங்களும் கருத்துகளும்.

    என்னிடமும் எங்கள் வீட்டுக்கு வரும் ஓணான்கள் படம் இருக்கிறது.
    ஓணான்களை எல்லோருக்கும் பிடிக்குமோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. விதம் விதமாக வரும் போது படம் எடுக்கத் தோன்றுகிறது. சரிதானே:)?

      நீக்கு
  3. ஓணான் என்றதும் நம்மவர் படம் நினைவுக்கு வருகிறது!

    படங்களும்,அதற்குப் பொருத்தமான வரிகளும் அருமை.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். நீண்ட காலத்திற்கு முன் பார்த்த படம். சரியாக நினைவில் இல்லை:).

      நீக்கு
  4. படங்களும் அதற்கான வரிகளும் பிரமாதம் இதே பிரிவைச் சேர்ந்ததுதானே உடும்பும் திருச்சியில் என் இளைய மகன் ஒரு உடும்பை பிடித்திருக்கும் போது படமாக்கினேன் அதை தேடவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடும்பின் படம் கிடைத்தால் பகிர்ந்திடுங்கள். நன்றி GMB sir.

      நீக்கு
  5. ஓணான் படம் மாயவரத்தில் பாதையில் எடுத்த ஓணான் படம் முகநூலில் பகிர்ந்தேன்.
    பசங்க ஓணானை அடித்து கையில் தூக்கி வைத்து இருப்பதையும் படம் எடுத்து இருக்கிறேன்.
    நீங்கள் எடுத்து பகிர்ந்த ஓணான் படமும், அதற்கேற்ற வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறியாமையால் சிறுவர்கள் செய்யும் தவறு. புறாக்களைப் பிடிப்பதும், தூக்கணாங்குருவிக் கூடுகளைக் கைப்பற்றக் கம்பால் அடிப்பதும் பார்த்திருக்கிறேன்.

      கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. வாசகங்கள் யாவும் சோர்ந்திருக்கும் மனத்துக்கு புத்துணர்வு அளிக்கின்றன. படங்கள் அனைத்தும் பிரமாதம். எதையும் மிகுந்த அர்ப்பணிப்போடு செய்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு