ஞாயிறு, 2 டிசம்பர், 2018

மகிழ்ச்சியைத் தேடாதே

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 42

#1
“நீங்கள் தனியாகக் காணும் கனவு கனவாகவே இருந்து விடக் கூடும். 
மற்றவரோடு சேர்ந்து காணும் கனவு நிச்சயம் நனவாகும்” 
_  ஜான் லெனான்

#2
"உண்மையை அமைதியில்தான் அறிந்து கொள்ள முடியும். 
அசைவற்றுக் கவனித்து அறிந்திடுங்கள்."
_ லியோனார்ட் ஜேக்கப்சன்

#3
“வாழ்வில் நல்ல திருப்பங்களைக் கொண்டு வர
 ஒவ்வொரு நொடியும் ஒரு வாய்ப்பே.”


#4
“கவலைகள் நாளையத் துயரங்களை ஒருபோதும் களையப் போவதில்லை, 
மாறாக இன்றைக்கு இருக்கும் சக்தியைக் காலி செய்து விடுகின்றன.”
_கொர்ரி டென் பூம்


#5
“மகிழ்ச்சியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை.
நன்றியுணர்வை வளர்த்துக் கொண்டால் 
அதுவே நாடி வரும்.”
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]
***

24 கருத்துகள்:

  1. சிறப்பான தொகுப்பு.

    படங்கள் ஒவ்வொன்றும் கவர்கின்றன. தொடரட்டும் உங்களுக்கான தொகுப்பும் எங்களுக்கான பகிர்வும்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எல்லாம் அழகு.
    தொகுப்புகள் மிக அருமை.
    வாழ்வியல் சிந்தனைகள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான சேமிப்புகள் படங்கள் வழக்கம் போல் கொள்ளை அழகு

    பதிலளிநீக்கு
  4. நன்றாக இருக்கு. ஒரே பூ இரண்டு படங்களின் வந்திருக்கிறது. முதல் படம் மிக அழகாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. அழகிய வரிகள். பொருத்தமான அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மனதில் இருத்த வேண்டிய படிப்பினை வரிகள். சிறு குருவிகள், அணில், இலை, மொக்கு, பூக்களுடன் அழகிய தோட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. ஆம், அழகிய தோட்டம் அதன் விருந்தாளிகளால் மேலும் அழகாகிறது.

      நீக்கு
  7. வழக்கம்போலவே அசத்தலான படங்களும் பொன்மொழிகளும். முதல் படம் ரொம்பவே அழகு.

    பதிலளிநீக்கு
  8. முதல் படம் அட்டகாசமா இருக்கு.. இத்தனை குருவிகளா உங்கள் இடத்தில் வருகிறது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரி.

      ஆம், ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு வகைக் குருவிகளின் வரவு அதிகமாய் இருக்கும்.

      நீக்கு