ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)

#1
 “முடிவில் நான் கற்றுக் கொண்டதெல்லாம் 
தனிமையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டுமென்பதையே”

#2
“நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. 
பெரிய மனிதர்களையே வளர்க்கிறோம்.”

#3
குழந்தை சொல்லாததையும் புரிந்து கொள்பவள் தாய்

#4
"மகள் என்பவள் 
நீங்கள் சேர்ந்து சிரிக்கும், கனவு காணும், 
மனதார நேசிக்கும் 
ஒருவள்"


#5
“சாலைகள் சில நேரங்களில் கரடு முரடாக இருப்பினும் 
உங்கள் பயணத்தில் நம்பிக்கை வையுங்கள்"

#6
"ஒரு பெண்ணின் கண்களில் மிளிரும் ஒளி, 
வார்த்தைகளை விடவும் வலிமை வாய்ந்தவை."

**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..
***

24 கருத்துகள்:

  1. சிறப்பான சிந்தனைகள். அழகான படங்கள். தொடரட்டும் உங்கள் சேமிப்பு பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள். அனைத்தும் பேசும் படங்கள்தான்.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. 1) இடம் விட்டே அமர்ந்திருக்கிறேன்..
    துணையாக
    நீ வருவாய் என...

    2) வாருங்கள்
    வாழ்க்கை ஆற்றை
    நீந்தக் கற்றுத்தருகிறேன்

    3) என் சின்னப் பதிப்பே
    செம்பவள முத்தே..

    4)
    5) மரத்தையே கட்டி இழுத்துக் கட்டி எடுத்துச் செல்கிறார்களோ!
    6) பெருமிதப்புன்னகை!

    பதிலளிநீக்கு
  4. அத்தனையும் அழகு. பெருமிதம் பொங்கும் படங்கள்.

    பனையைப் பற்றிப் படித்தேன்.
    நீங்கள் படம் கொடுத்துவிட்டீர்கள்.
    மனம் நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. முதல் சிந்தனை முத்து இன்றைய வாழ்க்கைச் சூழலில் மிக நிதர்சனம்.
    பல இல்லங்களில் முதியவர்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு வாழ்வதே ஒரு மாத விடுமுறைக்கு வரும் பேரப் பிள்ளைகளின் வரவுக்காகவே.

    சில படங்கள் முந்தையப் பதிவுகளில் பார்த்தது போல் இருக்கிறது. குறிப்பாக கடைசிப் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் குறித்த கருத்துக்கு நன்றி. இன்று, 1 அக்டோபர் உலக முதியோர் தினமும் கூட.

      வாய்ப்பே இல்லை:). பயணப் பதிவுகளைத் தாமதமாகப் பதியும் போது தவிர்க்க முடியாமல் ஏற்கனவே பகிர்ந்த சில படங்கள் இடம் பெறுவதுண்டு. சிந்தனைத் தொகுப்புகளில் எந்தப் படமும் மீண்டும் இடம் பெற்றதில்லை. அதற்காகத் தனிக் கவனமும் எடுத்து வருகிறேன். ஆயினும் தங்கள் நினைவாற்றல் பாராட்டுக்குரியது. படங்கள் 3,4_லிருக்கும் தாயும் மகளும் வேறு படங்களில் பார்த்திருக்கிறீர்கள். அதே போல கடைசிப் படத்திலிருக்கும் பெண்மணி வேறு கோணத்தில், உடையில் இங்கே https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/32858358604/ தோன்றியிருக்கிறார். அந்தக் கருப்பு வெள்ளைப் படத்தையே வேறு பதிவில் இங்கு பார்த்திருக்கிறீர்கள்:).

      நீக்கு
    2. என் நினைவாற்றல் சரி என்றால் "சிறிய வினா-பெரிய வினா" போன்ற சிந்தனை தூண்டும் கவிதைகள் வாசித்தும் பல மாதங்கள் கடந்து விட்டது.:)

      நீக்கு
    3. உண்மைதான்:(. படைப்பிலக்கியத்தில் சமீபமாகக் கவனம் செலுத்த முடியவில்லை. சொல்லி வைத்தாற்போல நேற்று நண்பர் ஸ்ரீராம், சிறுகதைகள் எழுதாததைச் சுட்டிக் காட்டினார். மீண்டும் கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, வாசிப்பனுபவம் எனக் கவனம் எடுக்க வேண்டும். நன்றி:).

      நீக்கு
  6. அழகான சிந்தனைகள் & ரசனையான படங்களின் தொகுப்பு... அனைத்தையும் ரசித்தேன். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. தேர்ந்த ஓவியங்கள் போல ஒவ்வொரு புகைப்படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது! இரண்டாவது புகைப்படம் அழகிய உணர்வுகளின் பிரதிபலிப்பு போல் இருக்கிறது!

    பதிலளிநீக்கு