ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

உலகம் ஒரு நாடக மேடை - வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 36

#1
 “நாம் யாரென்பது நமக்குத் தெரியும், 
ஆனால் யாராகக் கூடுமென்பது நமக்குத் தெரிவதில்லை”


#2
 “இயற்கையினுடான ஒரு தொடுதல் 
மொத்த உலகையும் நமக்கு நெருக்கமானதாக ஆக்குகிறது.”

#3
 “உங்கள் ஆன்மாவுக்கேனும் 
நீங்கள் உண்மையாய் இருங்கள்” 


#4
“நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க விடுங்கள், 
என்னை மாற்றிட முயன்றிடாதீர்கள்”

#5
“அனைவரையும் நேசி, 
சிலரை மட்டுமே நம்பு, 
எவருக்கும் தீங்கு இழைக்காதே” 

#6
“நான் சொல்கிறேன், அறியாமைதான் இருக்கிறதே தவிர 
இருளென்று ஏதுமில்லை!”

#7
உலகம் மொத்தமும் ஒரு நாடக மேடை. எல்லா ஆண்களும் பெண்களும் அதில் வெறும் நடிகர்கள். காட்சிகளில் தோன்றி மறைகின்றவர்கள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றான்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்
**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும், தொகுப்பது தொடருகிறது..
***

18 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் சிந்தனைகளும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்தலும்.....

    பதிலளிநீக்கு
  3. படங்களையும் வாசகங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. முதல் ஐந்து வாசகங்களும் மனதுக்கு மிக நெருக்கமாக உள்ளது. யாராக கூடுமெனத் தெரிந்து இருந்தாலும் சோம்பல், அலட்சியம், நிர்விசாரம், பெலவீனங்கள் (weakness) இலக்கை அடையத் தடையாக உள்ளது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உலகமே ஒரு நாடக மேடை என்றால் உடை மாற்றும் க்ரீன் ரூம் எங்கே

    பதிலளிநீக்கு
  6. ஷேக்ஸ்பியரின் வரிகளை இன்று காலை நினைத்தேன். படமும் பொன்மொழிகளும் பொருத்தம். :)

    பதிலளிநீக்கு