ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

உன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்

#1
“பிரபஞ்சத்திலுள்ள யாவும் உன்னுள்ளேயே உள்ளன. 
தேவையான எல்லாவற்றையும் உன்னிடமே கேட்டுப் பெறு.”


#2
“வார்த்தைகளைப் பயன்படுத்தாதக் குரலொன்று உள்ளது. 
கவனியுங்கள்”


#3
“எதையும் ஆத்மார்த்தமாகச் செய்யும் போது 
மனதுள் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணருவீர்கள்!”

#4
“உங்கள் சுயத்தின் சுயநலத்தை நீங்கள் வெல்லும் போது 
உங்களைச் சூழ்ந்திருக்கும் எல்லா இருளும் 
ஒளியாக மாறும் " 

#5
 “குரலை உயர்த்தாதீர்கள், 
மாறாக வார்த்தைகள் வலிமையானதாய் இருக்கட்டும். 
இடி அல்ல, மழையே மலர்களை வளரச் செய்கிறது.
_ ரூமி

#6
எதைப் புறக்கணிக்க வேண்டும் என அறிந்திருப்பதே, 
அறியும் கலை.

***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும், தொகுப்பது தொடருகிறது.

22 கருத்துகள்:

  1. குரலை உயர்த்தினால் அது இயலமையை காட்டலாம் படங்களும்பகிர்வும் அருமை ஃபுட் பால் லில்லி என் தோட்டத்திலும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.

      ஃபுட் பால் லில்லி.. பொருத்தமான பெயர்தான். இப்போதுதான் இந்தப் பெயரை அறிகிறேன். Thunder Lily என்றும் கூறுவார்கள்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  2. குரலை உயர்த்தாமையும், எதை புறக்கணிப்பது என்பதும் நன்றாய் இருக்கின்றன. வார்த்தைகளைப் பயன்படுத்தாத குரல் எது என்று புரியவில்லை.

    படங்களும், வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மாவின் மனசாட்சியின் குரல்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சென்ற ஞாயிறு எங்களின் படபபகிர்வில் உங்களைக் காணோம்! படப்பகிர்வு என்றால் வருவீர்கள். ஆனாலும் சென்ற ஞாயிறு உங்களைக் காணோம் என்று தேடினேன்!

    கடைசி வியாழன் பகிர்வில் ஒரு சின்னஞ்சிறுகதை எழுதி இருந்தேன். அந்தப் பதிவையும் உங்களை படிக்க வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  4. அனைத்து படங்களும், வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. சுயத்தின் சுயநலத்தை வெறுப்பதும், ஆன்மாவின் முனகல்களை உணர்வதும் அற்புதமான அனுபவம் தான். இரண்டாவது வாக்கியம் ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. சிறந்த மொழி பெயர்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆத்மார்த்தமாகச் செய்யும்போது மகிழ்ச்சி ஊற்றெடுப்பது உண்மை. புத்தரும் கருத்தும் வெகு அழகு :)

    பதிலளிநீக்கு