சனி, 30 டிசம்பர், 2017

தூறல்: 32 - முத்துச்சரம் 2017; பாகுபலி; வல்லமை; ஆல்பம்

முத்துச்சரம்:
ப்போதுதான் பிறந்தது போலிருந்த 2017 இதோ முடியப் போகிறது.  முத்துச்சரத்தில் கோத்தவற்றில் திரும்பிப் பார்க்கும் வகையில் அதிகம் ஏதுமின்றி நகர்ந்து போன வருடம். இருந்தாலும் இந்த வருடக் குறிப்பாக இருக்கட்டுமென...

சராசரியாக மாதம் ஐந்து பதிவுகள். எழுத்து குறைந்து போனாலும் கேமராவை கீழே வைக்காததால் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படங்களின் தொகுப்புகள், பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுப்பின் கீழ்: (17 பதிவுகள்)

2008_ஆம் ஆண்டு தொடங்கிய ஃப்ளிக்கர் பக்கத்தில், சராசரியாக தினம் ஒன்றாகப் பதிந்த படங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இடைவிடாமல் ஒரு துறையிலேனும் இயங்கி வருவதில் திருப்தியே.

முத்துச்சரத்தில், புகைப்பட வரிசையில் என் வீட்டுத் தோட்டத்தில்.. (19 பதிவுகள்) மற்றும் பறவை பார்ப்போம் (12 பதிவுகள்) பாகங்களும் அடங்கும்.


தினமலர் பட்டம் இதழில், எடுத்த படங்களுடன் வெளியான தகவல்கள்: (5)

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

சுவைக்கலாம் வாங்க.. (1)

டேபிள் டாப் போட்டோகிராபி சவாலானதும் சுவாரஸ்யமானதும் ஆகும். நாம் எடுக்கும் கருப்பொருட்களுக்கு சரியானபடி பக்கங்களிருந்தோ மேலிருந்தோ வெளிச்சம் கொடுக்க வேண்டும். அல்லது எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் கூரையில் பட்டு பவுன்ஸ் ஆகி வெளிச்சம் கருப்பொருள் மீது பரவலாக விழ வேண்டும். இதற்கென்றே இப்போது பின்னணிக்காகப் பல வண்ண விரிப்புகளுடன் சிறு கூடாரங்கள் மற்றும் பக்க வாட்டில் உபயோகிப்பதற்கான லைட்ஸ் விதம் விதமாக விற்பனையில் உள்ளன. இணையத்தில் தேடி வரவழைத்துக் கொள்ளலாம். நான் சாதாரணமாக வீட்டு மேசைகளில் வைத்து, மேசை விளக்குகள் மற்றும் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் பயன்படுத்தி எடுத்த உணவுப் படங்கள், ஞாயிறு படங்களாக இன்று...

#1
உலர்ந்த அத்திப் பழம்


#2
பட்டர் குக்கீஸ்


#3
டோக்ளா


#4
பன்னீர் ஜிலேபி

வெள்ளி, 22 டிசம்பர், 2017

தோட்டத்துக்குப் போயேன் செல்லம்...

ன்றையக் குட்டிச் செல்லங்கள் பலருக்கும் பிடித்தமான, அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் பாட்டு கண்மணி ரைம்ஸின் (சோம்பேறிப் பையன்) ‘தோட்டத்துக்குப் போயேன் ராமா’. அதைத் தழுவி சுறுசுறுப்புச் செல்லத்தின் படங்கள் எட்டு...:)


**

#1
'தோட்டத்துக்குப் போயேன் செல்லம்..'

ஆஹா, அணில்கள் பார்க்கலாமே அம்மா!

#2
'மாடு மேச்சு வா செல்லம்..'

'ஓ, கன்னுக்குட்டிகளோடு விளையாடக்
கெளம்பிட்டேன் அம்மா!'

#3
'அடுப்பு மூட்டு செல்லம்!'

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தெளிவான பார்வை.. முழுமையான மனது..

#1
“அத்தனைப் பூக்களும் வெளிச்சத்தை வைத்திருக்கின்றன, 
வேரின் அடி ஆழத்தில்..”
_Theodore Roethke


#2
“தோல்விகளை விடவும் 
சந்தேகங்களே நமது பெரும்பாலான கனவுகளைக் கொன்று போடுகின்றன.”
__Suzy Kassem

#3
“சாதாரணமாகக் கவனிப்பதன் மூலமே 
ஏராளமானவற்றைக் கிரகிக்க முடியும்.”
_Yogi Berra

வெள்ளி, 8 டிசம்பர், 2017

செந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - பறவை பார்ப்போம் (பாகம் 21)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 25)
ச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், நீண்டு கூர்மையாக முடியும் வாலும் கொண்டவை செந்தார்ப் பைங்கிளிகள்.

#1
ஆங்கிலப் பெயர்: Rose-ringed parakeet

வால் அதன் சிறகுகளையும் சேர்த்து 40 செ.மீ நீளம் கொண்டவை. விரிகிற ஒரு பக்க இறக்கையின் நீளம் மட்டும் சராசரியாக 15-17 செ.மீ வரை இருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Psittacula krameri
ஆண் கிளிகளுக்கு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் கழுத்தில் வளையம் போன்ற ஆரம் இருக்கும். அதனாலேயே ஆரக்கிளி எனும் பெயர் வந்தது. பெண் கிளிகளுக்கும் இளம் கிளிகளுக்கும் ஆர வளையம் இருக்காது. ஒரு சிலவற்றிற்கு

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மீட்க முடியாத மூன்று

#1
“எவ்வளவோ இருக்கிறது வாழ்க்கையில்,
அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும்..”
_ காந்திஜி

#2
“வானில் இல்லை, நம் மனதில் இருக்கிறது வழி!”
_புத்தர்

#3
"ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு."
_Protagoras