ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அன்பால் மலையும் அசையுமடி!

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 23)
#1
“பறவையானது அதன் சொந்த வாழ்வாலும் உந்துதலாலுமே செலுத்தப்படுகிறது.”
_Dr. APJ Abdul Kalam

#2
“நம் கண்களுக்குப் புலப்படுவது நாம் எதை எதிர்நோக்கிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது”
_ John Lubbock

#3

“ஒரே இடத்தில் தங்கி விட அல்ல உலகம், அது மிகப் பெரியது. 
ஒரே விஷயத்தை மட்டுமே செய்வதற்கல்ல வாழ்க்கை, ஏனெனில் அது மிகக் குறுகியது.”


#4
“அத்தனை ஜீவராசிகளுக்கும் நண்பனாய் இருப்பவனே நல்ல மனிதன்.”__Mahatma Gandhi


#5
“அதிகமாகச் சிந்திக்க வேண்டாம். எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாது, நடப்பது நடக்கட்டும்.”

#6
‘எதுவும் செய்யாமலிருக்க எடுத்துக் கொள்ளும் நேரம், 
பல சமயங்களில் எல்லாவற்றையும் நமக்குப் புரிய வைக்கும்'
_Doe Zantamata

#7
ஒவ்வொரு மாற்றத்திலும், ஒவ்வொரு வீழும் இலையிலும் சில வலிகள், சில வனப்புகள்! அதுவே புது இலைகள் துளிர்ப்பதற்கான வழியும்!
_Amit Ray

#8
குஞ்சுக்குக் கக்கிக் கொடுப்பதைநாம் கண்டிருந்தோம்! வஞ்சியே! அன்பால் மலையும் அசையுமடி!
(பாட்டரங்கப் பாடல்கள்)
_கவிஞர் வாணிதாசன்


#9
ஒளியில் மின்னுவது  எளிது. ஆனால் இருளில் ஜொலிப்பது... 
அதுவே தேர்ச்சி!
― Rick Beneteau 



#10
எல்லா சிந்தனைகளும் வியப்பிலேயே துவங்குகின்றன
- Socrates 
***

(உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் தொகுப்பது தொடருகிறது..)

21 கருத்துகள்:

  1. படங்களும், அதற்கான வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆகா
    படங்கள் அழகோ அழகு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. 2,6,9 மனதைக் கவரும் உண்மைகள்.5 வது மேற்கோள் உங்களுடையதா?
    எல்லா சிந்தனைகளும் வியப்பிலேயே துவங்குகின்றன! புரியவில்லை.
    தேவைகள், துயரம், அன்பு, இழப்பிலும் கூட உயர்ந்த சிந்தனைகள் உருவாகிறது இல்லையா?
    படங்கள் 2 வது மேற்கோளின் உதாரணம்.அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியப்பில் எழும் கேள்விகள் சிந்தனைக்கு வித்திடுவதை அப்படிக் குறிப்பிட்டிருக்கார் சாக்ரடீஸ் என எண்ணுகிறேன். பொதுவாக மேற்கோள்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் ஆராய்வது இப்படிப் பல சிந்தனைகளுக்கு வழி செய்கின்றன என்றால் அதுவும் நல்லதே எனத் தோன்றுகிறது:).

      5வது சிந்தனை என்னுடையது அல்ல. பல பிடித்த சில மேற்கோள்கள் யார் சொன்னது என அறிய முடியாது போகிறது. அப்போது அவற்றை அடைப்புக் குறிக்குள் கொடுத்து விடுகிறேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. எல்லாம் மேற்கோள்களும் அருமை நல்ல கலக்ஷ்ன்...... படங்களும், அணில் படம் மிக அருகில் சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காண்பவை எல்லாம் நன்றாக காணப்படுகின்றன

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே அருமை. #6 மேற்கோளும், #7 படமும் கொஞ்சூண்டு கூடவே அருமை!

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்களுக்கான கவிதைகளா? கவிதைகளுக்கான புகைப்படங்களா? என்று ஐயப்படுமளவிற்கு அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு

  8. # 3 : பச்சைப்பின்னணியில் தேன்சிட்டுகள் - அழகு.

    # 4 : அணிலின் அமைதி அபூர்வமானது; சிக்கியிருக்கிறது உங்கள் கேமிராவில். அணிலைப் புகழ்வதா, உங்களைப்புகழ்வதா!

    # 7 : கிளையில் தளிர்க்கும் சின்னஞ்சிறு கொழுந்துகள் அருமையாக வந்திருக்கின்றன.

    # 9 : இரவுப் பறவை ‘நைட் மோடில்’ எடுத்திருக்கிறீர்களா? உங்களது DSLR - Canon-ஆ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடி விடாமல் ஒத்துழைத்த அணிலுக்கே பாராட்டுகள்:).

      #9 இல்லை. இருள் முழுதும் விலகாத அதிகாலைப் பொழுதில் உதய சூரியனின் ஒளியில் எடுத்த படம்.

      6 வருடங்கள் Nikon D5000. கடந்த ஒரு வருடமாக Nikon D750 உபயோகிக்கிறேன்.

      வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  9. அழகான கண்ணை கவரும் படங்கள் அழகு.
    தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகள் மிக அழ்கு.

    பதிலளிநீக்கு