ஞாயிறு, 1 அக்டோபர், 2017

வார்த்தைகள் தோற்கும் போது..

#1
‘கற்றலில் கிடைப்பது அறிவு. வாழ்தலில் கிடைப்பது ஞானம்.’
_ Anthony Douglas Williams


#2
‘வெற்றிகளை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். 
தோல்விகளை உங்கள் மனதில் இருத்தி வைக்காதீர்கள்’
_ Anthony Douglas Williams


#3
“காலம் கடிகாரங்களால் கணக்கிடப்படுவதன்று, 
நாம் வாழும் கணங்களால்..”


#4
‘உங்களால் அதைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்த முடியவில்லையெனில் அதற்காக உழைப்பதை நிறுத்தி விடாதீர்கள்!’

#5
“அறிவென்பது எதைச் சொல்ல வேண்டுமெனத் தெரிந்திருப்பது. 
ஞானம் என்பது எப்போது சொல்ல வேண்டுமெனத் தெரிந்திருப்பது.”


#6
‘சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!”
-புலமைபித்தன்

#7
'வாழ்க்கை ஒரு பயணம். சவாரியை மகிழ்வுடன் அனுபவித்திடுங்கள்!'
#Miniature 'Harley Davidson'
#8
‘தனித்து நாம் செய்ய முடிவது மிகச் சொற்பம். 
இணைந்து செய்தாலோ அடைவது ஏராளம்.’
_Helen Keller


#9
‘வார்த்தைகள் தோற்கும் போது பேசும், இசை!’
_வில்லியம் ஷேக்ஸ்பியர்


#10
“வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, துயரம், நல்ல காலம், கடினமான காலம் என அனைத்தையும் அடக்கிய வட்டம். 
இப்போது கடினமான காலத்தில் இருப்பீர்களானால் 
நம்புங்கள், நல்ல காலம் வந்து கொண்டே இருப்பதை..!”

***
[உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் தொகுப்பது தொடருகிறது..]

23 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கையான வரிகளும் அழகிய புகைப்படங்களும் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வாசகங்களும் நன்று.

    அறிவும், ஞானமும் - மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அரிசித் தட்டில் விளக்குகள்.. இது என்ன சடங்கு/சம்பிரதாயம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டு அல்ல. அரிசிப் பானை. கொலுவுக்குச் சென்ற இடத்தில் எடுத்த படங்கள். கொலுப் படிக்கட்டுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. என்ன சம்பிரதாயம் என கேட்டுக் கொள்ளவில்லை.

      நீக்கு
    2. அரிசிப்பானையா? பானையைக் காணோமே?

      நீக்கு
    3. நான் விளக்குகளை மையக் கருவாகக் கொண்டு ஃபோகஸ் செய்ததால் பானையோடு எடுக்கவில்லை:)! பானையைப் பார்த்தே ஆக வேண்டுமென்றால் http://tamilamudam.blogspot.in/2017/09/blog-post.html இந்தப் பதிவில் படம் 16_ல் பார்க்கலாம். அடுத்த முறை அண்ணியிடம் பேசுகையில் இதற்குக் காரணமேதும் இருக்கிறதா எனக் கேட்டுச் சொல்கிறேன்:).

      நீக்கு
    4. பானை புராணம் கேட்டுச் சொல்லுங்க.. நன்றி.

      நீக்கு
  4. பெரும்பாலும் தன்னம்பிக்கை தருவனவாகவுள்ளன. அருமை.

    பதிலளிநீக்கு
  5. அறிவு : ஞானம்,(1&5) விளக்கம் அருமை.
    Athappookalam - அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. பூக்களம் இந்த வருட ஓணப் பண்டிகையின் போது குடியிருப்பில் இருக்கும் தோழி வீட்டில் எடுத்த படம்.

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் அழகு.
    கருத்தும் அருமை.

    பதிலளிநீக்கு