செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)

மைசூர் அரண்மனையைப் பார்த்து ரசிப்பவர்கள் பெரும்பாலும் பார்க்கத் தவறிவிடுவது மேற்கே சற்று தொலைவிலேயே அமைந்த ஜெகன்மோகன் அரண்மனையை. இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. இந்து பாரம்பரியப் பாணியில் மூன்று தளங்களோடு கட்டப்பட்டுள்ளது. 1900_ஆம் ஆண்டில் வெளிப்புறத்தில்.. முகப்பில்.. மூன்று நுழைவாயில்களுடனான (படத்தில் காணலாம்) பெரிய கூடம் புதிதாக இணைக்கப்பட்டது. அரண்மனையின் உட்புறம் சுவர்ச் சித்திரங்களோடு திகழ்கிறது. மைசூர் ஓவியப் பள்ளியின் பாணியில் தசரா காட்சிகள், யானை சவாரி போன்றவை  மூன்று நீண்ட சுவர்களில் வரையப்பட்டுள்ளன. தொடக்கக் கால தசராக் கொண்டாட்டத்தைக் கண் முன் கொண்டு வரும் இந்த ஓவியங்கள்  காய்கனிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகளைச் சாயமாகப் பயன்படுத்தி வரையப்பட்டிருக்கின்றன. மரத்தில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளையும் இங்கே பார்க்கலாம். 

உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் அரண்மனை கட்டப்படும் வரை இங்குதான் இருந்தனர். 1912-ல் அம்பா விலாஸ் அரண்மனை முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படும் வரை ஆண்டுவிழா மற்றும் தசரா விழாக்கள் இங்குதான் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்களையும், சிற்பங்களையும் கொண்ட இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியமாகவும் ஓவியக் கலைக் கூடமாகவும் பராமரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்களோடு உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

அவற்றுள் என்னை மிகக் கவர்ந்தவை ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த அசல் ஓவியங்கள் பதினாறு.

சனி, 23 செப்டம்பர், 2017

ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்..

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண ஹனுமன்
ழிவழியாய் மக்கள் வருடந்தோறும் கொண்டாடும் நவராத்திரியில் கொலு வைப்பதென்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி எனத் தேவியரைப் போற்றும் இறை வழிப்பாட்டைத் தாண்டியும் சில முக்கியக் காரணங்கள் இந்தக் கலாச்சாரத்திற்கு இருந்திருக்கிறது.

ஒன்று, கல்வி. கொலு அலங்காரங்கள், பொம்மைகள் அடுக்குதல் என்பதில் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஈடுபடுவார்கள். முக்கியமாகக் குழந்தைகள் குதூகலத்துடன் தங்களால் இயன்றதைச் செய்வார்கள். அவர்களுக்கு கொலுப் பொம்மைகளின் மூலமாகவே நமது இதிகாசங்கள், புராணங்கள், வழிபாடுகள், கலாச்சாரங்கள், பொது அறிவு எனப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் பண்டிகையாக அமைகின்றன நவராத்திரி கொலுக்கள். அவரவர் வீட்டுப் பொம்மைகள் மட்டுமின்றி செல்லுமிடங்களில் காணும் பொம்மைகளைப் பற்றி கேட்டறிந்து அறிவை வளப்படுத்திக் கொள்ள உதவின.

#2
தசாவதாரம்
அடுத்து,

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

அதிர்ஷ்டசாலிகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (11) - சொல்வனம் 176_ஆம் இதழில்..



விரைவுச் சாலையில் மழையில் மாட்டிக் கொண்ட போது
நேரம் மாலை ஆறு பதினைந்து
நில், முதல் கியருக்கு மாறு, மீண்டும் நில்
நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பணியிலிருப்பவர்கள்
வேறெதைப் பற்றியும் சிந்திக்க விரும்பாதவர்களாய்
வானொலியை எவ்வளவு முடியுமோ
அவ்வளவு சத்தமாக அலற விட்டிருந்தோம்
சிகரெட்டைப் பற்ற வைத்தபடி.

நாகரீக உலகின் பெரும்பாலான மக்கள்
ஒரு காலத்தில் மரத்திலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள்
இப்போது வாகனங்களில் அதுவும் சாலைகளில் வாழ்கிறார்கள்.

சனி, 9 செப்டம்பர், 2017

ஒரு மஞ்சக் குருவி.. தூக்கணாங்குருவி .. ( Baya Weaver ) - பறவை பார்ப்போம் (பாகம் 18)

#1
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் தூக்கணாங்குருவிகளின் இனப்பெருக்கக் காலம். சென்ற வருடமும் இதே நேரம்தான் தோட்டத்து முருங்கை மரத்தில் இக்குருவிகள் கட்டிய கூட்டை வியந்து பார்த்து முதன் முதலாகப் படமாக்கிப் பகிர்ந்திருந்தேன்: தூக்கணாங்குருவிகளும்.. செம்மீசைச் சின்னான்களும்.. ! [தொடர்ந்து தினமலர் பட்டம் இதழிலும்.. படங்களுடன்: தேர்ந்த நெசவாளி] முதல் பதிவில் 55-200mm லென்ஸின் ஃபோகல் லென்த் எனக்குப் போதுமானதாக இல்லை என்றும் சொல்லியிருந்தேன். பின் தோட்டத்து விஸிட்டர்களைப் படம் எடுக்க என்றே அடுத்த இரு  மாதங்களில் 70-300mm லென்ஸ் வாங்கியதில் ஓரளவுக்குப் பறவைகளை வீட்டுக்குள் இருந்தே நெருங்க முடிகிறது இப்போது.

#2

கடந்த இருமாதங்களில் பகிர்ந்த படத் தொகுப்புகளில் ஏற்கனவே இந்த சீசனில் எடுத்த படங்கள் சிலவற்றைச் சிந்தனைத் துளிகளோடு பகிர்ந்து விட்டுள்ளேன். மேலும் எடுத்த சில உங்கள் பார்வைக்கு...

#3
"You may see me struggle but you will never see me quit."
- C.J. Watson.
சென்ற வருட சீஸன் முடிந்ததும் கண்ணிலேயே படாமல் காணாது போய் விட்ட தூக்கணாங்குருவிகள், மறுபடியும் இந்த ஜூலையில் கூட்டம் கூட்டமாக வந்து பல கூடுகளை என் வீட்டு மரத்திலும் பக்கத்து வீடு, தோட்டத்தை அடுத்து வெளியே இருக்கும் ஈச்ச மரம் ஆகியவற்றில் கணக்கு வழக்கு இல்லாமல் கூடுகளைக் கட்ட ஆரம்பித்தன.

#3
முருங்கை மரத்திலும் ஈச்ச மரத்திலுமாக..

திங்கள், 4 செப்டம்பர், 2017

அம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)

சரா நெருங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை பேர், குறிப்பாகப் புகைப்படக் கலைஞர்கள் மைசூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது. சுற்றுலா நகரமாக வருடம் முழுவதுமே ஏராளமான பயணிகளை ஈர்க்கும் மைசூர், கோலாகலமான தசரா சமயத்தின் பத்து நாட்களில் (சென்ற வருடக் கணக்குப்படி)  சராசரியாக 10 முதல் 12 இலட்சம் மக்கள் வருகை தரும் இடமாக இருந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்நேரத்தில் திட்டமிடப் பயனாகவும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கட்டுமே என, ஐந்து வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது எடுத்த படங்கள் இருபத்தேழுடன் ஒரு பகிர்வு:

மைசூருக்குப் பெருமை சேர்க்கும் முதல் இடமாக இருப்பது “அம்பா விலாஸ்” அரண்மனை.
#1

மைசூர்  மாகாணத்தின் மையப் பகுதியில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கலைநுட்பத்துடன் கட்டப்பட்ட அரண்மனையானது  1897ம் ஆண்டு எதிர்பாராத வகையில் தீப்பிடித்து எரிந்து போக, அப்போது மன்னராக இருந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார் புதிய அரண்மனை உருவாக்க திட்டமிட்டார்.