சனி, 20 மே, 2017

தோல்விகளும் தேவை.. - மாயா ஏஞ்சலோ வரிகள்

#1
“உங்களது கண்களால் என்னை வெட்டலாம்.  
உங்களது வெறுப்பால் என்னைக் கொல்லலாம். 
ஆனால் அப்போதும் காற்றைப் போல் 
மேலெழுந்து வருவேன் நான்.”

#2
“நிலவுகளைப் போல் சூரியன்களைப் போல்.., 
பொங்கும் கடலின் நிச்சயத்தன்மையுடன்.., 
ஊற்றெடுக்கும் நம்பிக்கையுடன்.., 
மேலெழுந்து வருவேன் நான்.” 


#3
“பல தோல்விகளை நீங்கள் சந்திக்கலாம், ஆனால் ஒருபோதும் நீங்கள் தோற்று விடக் கூடாது. ஒரு வகையில் தோல்விகள் நமக்குத் தேவையும் கூட, அப்போதுதான்.. ..
உங்களை யார் என நீங்கள் அறிவீர்கள், எதிலிருந்து எழுந்து வர முடியும் என உணருவீர்கள், எப்படி அதிலிருந்து வெளிவருவதெனத் தெரிந்து கொள்வீர்கள்”


#4
"என் வாழ்வின் குறிக்கோள் வெறுமனே பிழைத்திருத்தல் மட்டுமல்ல, முன்னேறுவது. எதையும் சற்றே ஆர்வத்துடன், சற்றே பரிவுடன், சற்றே நகைச்சுவை உணர்வுடன், குறுப்பிட்ட பாணியில் செய்வது."


#5
“சொல்ல முடியாத கதையை உங்களுள் சுமப்பதை விடவும் தாங்கொண்ணாத் துயர் வேறெதுவுமில்லை.”

#6
"மனிதர்கள் மறந்து விடுவார்கள் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை, மனிதர்கள் மறந்து விடுவார்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை, ஆனால் மனிதர்கள் மறக்கவே மாட்டார்கள் நீங்கள் எப்படி அவர்களை உணரச் செய்தீர்கள் என்பதை."

#7
"விவேகமான பெண் எவருக்கும் எதிரியாகிட விரும்ப மாட்டாள்; அதே நேரம் எவருக்கும் இரையாக மறுத்து விடுவாள்."
_ மாயா ஏஞ்சலோ 

***
சிற்பங்கள்: கிருஷ்ணராஜ புரம் ஏரிப் பூங்கா, பெங்களூர்.

[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

24 கருத்துகள்:

  1. வரிகள் எங்கிருந்து?

    படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பை மறந்து விட்டேன்! :)))

      நீக்கு
    2. விளக்கம் தரும் முன் விரைந்து வந்து மறு கருத்து அளித்ததற்கும் சேர்த்து நன்றி :).

      நீக்கு
  2. maya angelou எண்ணங்கள் : கருத்துச் சிதறாது துல்லியமான மொழிபெயர்ப்பு. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    அழகுக்கு இணையாய் அற்புதமான
    கவித்துவமான வாசகங்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உணர வைத்ததை மறக்க மாட்டார்கள்... மறக்கவே முடியாது...

    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  5. படங்களும், மாயா ஏஞ்ச்லோ வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கையில் ஒரு முறை கூடத் தோல்வி அடையாத மனிதர் உண்டா

    பதிலளிநீக்கு
  7. படங்களும் வாசகங்களும் சுவையானவை. கண்ணதாசனின் 'வனவாசம்' ஐம்பது வருடங்களுக்கு முன் படித்தேன். வரிகள் மறந்துவிட்டன. ஆனால் அவற்றின் பின்னால் இருந்த வலிகள், இன்னமும் நெஞ்சில் நிற்கின்றன. எழுத்தின் வலிமையை மாயா ஏஞ்சலோ சுருக்கமாக விளக்கிவிட்டார். நன்றி!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

    பதிலளிநீக்கு
  8. சிசிற்பங்களை மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் புகைப்படங்களாக்கியிருக்கிறீர்கள்! அதற்கு சரியான இணையாக கவித்துவமான வரிகளை சேர்த்திருப்பது மிகவும் அழகு!!

    பதிலளிநீக்கு
  9. tholviyum vetrikanna padikkattey. mika azagana varigaludan poruthamana padangkaL :)

    பதிலளிநீக்கு
  10. வரிகள் ஏஞ்சலோ.. படங்கள் நீங்கள் தானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நான் எடுத்த படங்களே. நன்றி.

      நீக்கு
    2. தங்களின் பன்முகத் திறமை ஆச்சரியப்படுத்துகிறது..

      நீக்கு