புதன், 5 ஏப்ரல், 2017

தூறல்: 29 - ஆட்டிஸ தினம்; சூழல் மாசு; வல்லமை; ஆல்பம்

ப்ரல் 2, உலக ஆட்டிஸ விழிப்புணர்வு தினம். மாதம் முழுவதுமே அனுசரிக்கப்படுகிறது. பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள், தன்னார்வலர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்துத் தரப்பினரும் விழிப்புணர்வுக்கான முயற்சிகளைப் பரவலாக முன்னெடுத்துச் செல்கின்றனர். இது குறித்த சில பகிர்வுகள் இங்கே:

ஆட்டிஸ குழந்தைகளுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்குவதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அரவணைக்கும் அரசு நிறுவனமான நிப்மெட் குறித்து விரிவாக இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்:
#


ஆட்டிஸ குழந்தைகளின் பெற்றோர் மட்டுமின்று சமூகத்தின் அங்கத்தினராக அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் இங்கே:

#



ஏப்ரல் 2,  ‘தி இந்து’ செய்தியாளர் பக்கத்தில் திரு யெஸ். பாலபாரதியின் கட்டுரை:



நேற்றைய ‘தி இந்து’ இணைய தளத்தில் லக்ஷ்மி பாலக் கிருஷ்ணன் எழுதியிருக்கும் சிறப்பு கட்டுரை..


மற்றும் இவர் தனது ‘மலர் வனம்’ வலைப்பூவில் எழுதியுள்ள கட்டுரை:


**
சில ஆண்டுகளுக்கு முன்  ‘ஐடி நகரின் அவலம்’ என உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, சாயக் கழிவுகளால் நுரைந்துப் பொங்கி வழிந்த, பெங்களூர் வர்த்தூர் ஏரியின் மாசுப் பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்லை.

கீழ் வரும் படங்கள் அனைத்தும் பத்து நாட்களுக்கு முன்னர் அந்தப் பக்கமாகச் சென்ற போது வண்டிக்குள் இருந்து எடுத்தவை...
#

ஏதோ பனிப்பிரதேசத்தில் இருப்பது போல பொங்கிக் கொண்டே இருக்கும் இந்த நச்சு நுரையானது பறந்து  பாலங்களிலும் சாலைகளிலும் உருண்டோடி பல விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது.

#


குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் வருகிறவர்களின் முகத்துக்கு நேராக வந்து விழுந்து கதிகலங்க அடிக்கிறது.
#

அதுவும் லேசாக மழை பெய்து விட்டாலே போதும் அருகிலிருக்கும் சாலைகள் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லி மாளாது என்கிறார்கள். தாங்க முடியாத துர்நாற்றத்தால் சிலநாட்களில் கடை அடைப்புகளும் நடந்திருக்கின்றன.

#

220 ஹெக்டேர் பரப்பளவில், பெங்களூரின் இரண்டாவது மிகப் பெரும் நீர்நிலையான வர்த்தூர் ஏரியில், தினமும் சின்னச் சின்னதாக வந்து கலக்கின்றன சுமார் 500 மில்லியன் லிட்டர் சுத்தகரிக்கப்படாத கழிவு நீர்.

#

சென்ற மாதம் மீண்டும் இந்தப் பிரச்சனை அதிகமாகி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கருத்துகள், பேட்டிகள் செய்தித் தாள்களில் வெளிவந்தன. அரசு எந்த அதிரடி நடவடிக்கையும் எடுப்பது போலத் தெரியவில்லை என்பதே பலரின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
ல்லமை மின்னிதழில் ஐந்தாவது முறையாக,  படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வான எனது படம்:
படத்துக்கு வந்த கவிதைகள் இங்கே
போட்டி முடிவு இங்கே.

வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு நன்றி. கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள்!

****

ணைத்தது இணையம் வரிசையில்... இந்தத் தூறலின் ஆல்பத்தில்.. 2009 மே மாதம் நடந்த சந்திப்பு. 
#
கயல்விழி முத்துலெட்சுமி, குழந்தைகள், அருணா ஐயப்பன், குழந்தை,
திருமதி. கோமதி அரசு & திரு. அரசு ஆகியோருடன்..
பதிவர் “சிறு முயற்சி” கயல்விழி முத்துலெட்சுமியின் பெங்களூர் வருகையை முன்னிட்டு கப்பன் பார்க்கில் நடந்த சந்திப்பில் திருமால், பிரகதேஷ், புதசெவி ஆகிய பல பதிவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தில்லியில் இருக்கும் கயல்விழி கவிஞர், எழுத்தாளர், வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராகப் பல வருடங்கள் திறம்படப் பணியாற்றியவர், ஒளிப்படக் கலைஞர். தற்போது பதிவுகள் இடுவதில்லை என்றாலும் சமூக வலைத் தளங்களில் அவ்வப்போது இவரது அழகான ஒளிப்படங்கள் காணக் கிடைக்கின்றன. பதிவுலகம் வந்த புதிதில் கயல்விழிக்கு நான் எழுதிய (திண்ணை) கடிதம் அன்று மிகப் பிரபலம்:). கலைமகள் மாத இதழிலும் பின்னர் வெளியானது.
#
இந்த சந்திப்புக்குப் பிறகும்
இரண்டு முறைகள் அவர் பெங்களூர் வந்த போது
சந்தித்திருக்கிறேன்.
கயல்விழியின் பெற்றோரும் வந்திருந்தனர்.
#

கோமதிம்மா பதிவர் என்று அப்போது அறிந்திருக்கவில்லை:).  திருமதிப் பக்கங்களைப் பல மாதங்களுக்குப் பிறகே தேடிப் பிடித்து, அவர் யாரென்பதை அவர் பகிர்ந்திருந்த மார்கழிக் கோலத்தை வைத்துத் தெரிந்து கொண்டது சுவாரஸ்யமானது.

தற்போது வாழ்க்கை அனுபவங்கள், விழிப்புணர்வுக் கட்டுரைகள், இயற்கைக் காட்சிகள், பறவை பார்த்தல், அருமையான புகைப்படங்களோடு விரிவான பயணக் கட்டுரைகள் என முடிந்தவரையில் அதிக இடைவெளியின்றித் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். (சொந்த வேலைகளால் நேரமின்மை, கழுத்து-கை வலி போன்ற பல காரணங்களால் பதிவிடுவதை வெகுவாகு குறைத்து விட்ட என் போன்றவர்களுக்கு மீண்டும் உத்வேகத்தைக் கொடுக்கும் இவர் பதிவுகள்.)

வேதாத்திரி மகரிஷியின் உலக சேவாசங்கத்தில்  இணைந்து ‘அருள்நிதி’ பட்டம் பெற்றவர். ஆசிரியர் பயிற்சியும் அங்கே எடுத்துக் கொண்டு ‘வாழ்க வளமுடன்’ இயக்கத்தில் தியானப் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். கணவர் முனைவர் திருநாவுக்கரசு ஒய்வு பெற்ற  தமிழ் பேராசிரியர். தமிழ் துறையின் தலவைராக இருந்தவர். சிறந்த ஓவியர். மனைவியின் பதிவுகளுக்காகவே இவர் வரைந்து தரும் ஓவியங்களுக்கு நம்மில் பல இரசிகர்கள் உண்டுதானே?

மேலிருக்கும் 3 படங்களும் நண்பர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்தவை. நான் எனது சிறிய சோனி W80 கேமராவில் எடுத்த படம் ஒன்றும் உங்கள் பார்வைக்கு:
ஆதர்ச அரசு தம்பதியர்

படத்துளி:

தென்னம்பந்தல்

****

8 கருத்துகள்:

  1. தெய்வ குழந்தைகள் என்று அழைக்கப்படும் அவர்களுக்கு தெய்வம் கொடுத்த பரிசு பெற்றோர்கள். அவர்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து அவர்கள் வளர்க்க படும் பாடு இருக்கிறதே !
    உறவினர்களும், சுற்றி இருப்பவர்களும் கொஞ்ச்சம் ஒத்துழைக்க வேண்டும். பாலபாரதி அவர்களின் கட்டுரையை முகநூலில் படித்தேன்.

    கழிவு நீர் ஏரியில் கலப்பது கவலை அளிக்கிறது.
    ஐந்தாவது முறையாக வல்லமையில் உங்கள் படம் கவிதைக்கு தேர்ந்து எடுக்க பட்டத்ற்கு வாழ்த்துக்கள்.

    பதிவர் சந்திப்பு படங்கள், செய்திகள் நாம் முதன் முதலில் சந்தித்த நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது.
    நன்றி ராமலக்ஷ்மி.

    தென்னம்பந்தல் அழகு.

    பதிலளிநீக்கு

  2. ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வுப் பதிவும்

    சுற்றுச்சூழல் குறித்த படத்துடன் கூடிய
    பயமுறுத்தும் பதிவும்

    பதிவர் சந்திப்புக் குறித்த
    அறிமுக விளக்கத்துடன் கூடிய பதிவும்

    மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பதிவு.

    கழிவு நீர் கலந்து ஏரி மாசுபடுவது கவலை அளிக்கிறது.

    எனக்கும் தெரிந்த பதிவர்கள் - என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு