வியாழன், 1 செப்டம்பர், 2016

சாதீயம் - நவீன விருட்சத்தில்..

வ்வொரு வேட்டைக்குப் பிறகும்
விருந்துகள் நிகழ்கின்றன.
வேலி தாண்டி வந்து விட்டதாக
அறைந்து இழுத்து செல்லப்பட்ட
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை
குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த
மிருதுவான கண்களின் சுவையை
வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன
வேங்கைப் புலிகள்.
கானகமாகிக் கொண்டிருக்கிறது
மானுடர் உலகம்.
*

21 மே 2016 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

16 கருத்துகள்:

  1. ஆதங்கத்தைப் பதிவு செய்த விதம்
    அற்புதம்
    ஆம கானகமாகித்தான் வருகிறது நாடு
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கானகமாகும் நாடு...

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. கானமாகி கொண்டு இருக்கிறது நாடு என்பது உண்மைதான்.
    மனிதன் மிருக்மாகி கொண்டு இருந்தால் அப்படித்தானே ஆகும்.

    பதிலளிநீக்கு
  4. காலம் காலமாக இதுதானே நடக்கிறது

    பதிலளிநீக்கு
  5. மனிதம் மரத்தால் மிருகம்தான். அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. மனிதம் மரித்துவருபதைச் சொல்லும் கவிதை.. அருமை ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு