ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஓடி விளையாடு பாப்பா

#1
 ஓடி விளையாடு பாப்பா

#2
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

#3
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ 
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

#4
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு 
தீங்கு வர மாட்டாது பாப்பா


#5
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ 
திரிந்து பறந்துவா பாப்பா


#6
 பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 
பயங்கொள்ளலாகாது பாப்பா

#7
அன்பு மிகுந்த தெய்வமுண்டு-துன்பம்
 அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

#8
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று 
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

#9
உயிர்களிடத்து அன்பு வேணும்

#10
வயிரமுடைய நெஞ்சு வேணும்

 இது வாழும் முறைமையடி பாப்பா!
_ மகாகவி
**

மழலைப் பூக்கள் (பாகம் 8)

11 கருத்துகள்:

  1. குழந்தைகளின் படங்களைக் காணும்போதே
    குதூகலம் கொள்ளுதே மனம்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அனைத்தும் அழகு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எத்தனை விதமான முகபாவங்கள்.. குழந்தைகளை அந்தந்த சூழலில் அந்தந்த மனநிலையில் அற்புதமாகப் படம்பிடித்திருப்பதோடு பாரதியின் வரிகளால் செம்மைப்படுத்தியிருப்பது சிறப்பு. பாராட்டுகள் ராமலக்ஷமி.

    பதிலளிநீக்கு
  4. பாரதியின் வரிகளுக்கு ஒளி படம் ...ஆகா அருமை

    பதிலளிநீக்கு
  5. பாப்பாவைப்பாடிய பாரதியின் வரிகளோடு பாப்பாக்கள்.. அசத்தல்

    பதிலளிநீக்கு