திங்கள், 18 ஜனவரி, 2016

இரங்கல் - இந்த வாரக் கல்கியில்..

பறந்து கொண்டிருந்தன பறவைகள்
எட்டுத் திக்குலுமாக
ஆனால் பாடவில்லை.
வீசிக் கொண்டிருந்தது காற்று
தென் கிழக்காக
ஆனால் அசையவில்லை இலைகள்.
வானளாவிய விருட்சங்களின்
ஊடாகப் பாய்ந்து கொண்டிருந்தது
உச்சிச் சூரியனின் கதிர்கள்
ஆனால் சுடவில்லை.
எழும்பி அடங்கிக் கொண்டிருந்தன
வனத்தின் குளத்தில் அலைகள்
ஆனால் காணவில்லை
நீரைக் கிழித்து விரையும் மீன்களையும்
குதித்து ஆர்ப்பரிக்கும் தவளைகளையும்.
ஒதுங்கிக் கிடந்தது கரையில்
ஆயிரம் வயதான ஆமை.

**

24 ஜனவரி 2016 இதழில்.., நன்றி கல்கி!
***

13 கருத்துகள்:

  1. ’இரங்கல்’ கவிதை அருமை.

    கல்கியில் வெளிவந்துள்ளது பெருமை.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆமையுமா. திமிங்கலங்கள் மட்டும் என்று நினைத்தேன்.
    மிக வருத்தம்.
    கவிதைக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  3. அருமை. ஆனால் இரங்கல் வருத்தம் தருகிறது ராமலெக்ஷ்மி. இயற்கையின் சீரழிவைச் சொல்லிய கவிதை. கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள். முன்னரே கேட்க நினைத்தேன். படம் நீங்கள் எடுத்த படமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ல. கவிதைக்காக ஆசிரியர் வெளியிட்டிருக்கும் படமே.

      அடுத்த பதிவில் நான் எடுத்த படத்துடன் கவிதை. நன்றி ஸ்ரீராம்:)!

      நீக்கு