திங்கள், 21 செப்டம்பர், 2015

தேவதையின் தொடுகை - மாயா ஏஞ்சலோ (4)


துணியப் பழகிராத நாம்
மகிழ்ச்சியை விட்டு விலகி
தனிமை ஓட்டுக்குள் சுருண்டு வாழ்கிறோம்
நம்மை விடுவிக்க
அன்பு தனது உயர்ந்த புனிதமான கோவிலிலிருந்து இறங்கி
நம் பார்வைக்கு வரும் வரையில்.

அன்பு வந்து சேர்கையில்
தொடர்வண்டியாக வருகின்றன
பரவசங்கள்
மகிழ்வைத் தந்த பழைய நினைவுகள்
வலிகளைத் தந்த பண்டைய சரித்திரங்கள்.
நாம் தைரியமாக இருந்தோமானால்
அன்பு உடைத்தெறிகிறது நம் ஆன்மாவிலிருந்து
பயச் சங்கிலிகளை.

பொங்கும் அன்பின் ஒளியில்
தாய்ப்பால் மறக்கும் கன்றாக
கோழைத்தனத்திலிருந்து  மீள்கிறோம் .
தைரியமாக இருக்கத் துணிகிறோம்
திடுமெனப் பார்க்கிறோம்
அந்த அன்பிற்கு விலையாக நம்மையே தந்திருப்பதை
இனியும் தரவிருப்பதை.
ஆயினும் அன்பு ஒன்றே
நம்மை விடுவிக்க வல்லது.
**

மூலம்:  “Touched By An Angel”
By Maya Angelou


படம் நன்றி: இணையம்

அதீதம் மின்னிதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.

8 கருத்துகள்:

  1. சிறப்பான மொழியாக்கம்.

    அடிமைப்படுத்துவதும் அதனின்று விடுவிப்பதுவும் அன்பு ஒன்றே.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அன்பே அனைத்தும். என்று உணர்த்தும் கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு