செவ்வாய், 16 ஜூன், 2015

சத்ரிய நிருத்யா அப்சரஸ்(கள்).. - பெங்களூர் கிராமியத் திருவிழா 2014 (பாகம் 2)

#1

நிகழ்வின் இறுதி நாள் அன்று அஸ்ஸாமிய நாட்டுப்புற நடனமான சத்ரிய நிருத்யா, குரு ஜாட்டின் கோஸ்வாமியின் சிஷ்யைகளால் வழங்கப்பட்டது.

#2

சத்ரிய நிருத்யா அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்  பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகமாக அரங்கேறுகின்றன. இது எட்டு இந்தியப் பாரம்பரிய நடனங்களுள் ஒன்றாகும். மற்ற ஏழு பரதநாட்டியம், கதக்களி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிசி, கதக் மற்றும் மணிப்புரி ஆகியன.

நான் சென்ற வேளையில்  அப்போதுதான் நிகழ்ச்சியை முடித்து விட்டு அரங்கை விட்டு வெளியே வந்திருந்தார்கள் நாட்டியக் கலைஞர்கள். கேட்டுக் கொண்டதன் பேரில் படம் எடுக்க விரும்பிய அனைவருக்கும் அழகாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

#3

எந்த ஒரு நாட்டியமும் அதற்கென்றே உரித்தான ஆடை, ஆபரணங்களால் மேலும் தனித்துவம் பெறுகின்றது. அந்த வகையில் இவர்களின் ஆபரணங்கள் இதுவரை நான் கண்டிராததாக அழகாக வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன.

இவர்களது நடன ஆடைகள் அஸ்ஸாமில் தயாராகும் ஒரு வகை பட்டினால் ஆனவை என்றும், அந்த மண்ணிற்கே உரிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுபவை. அணிகலன்களும் அஸ்ஸாமின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவையே.

பாருங்கள் இந்த குழந்தையைக் கூட இவர்களது அணிகலன் எப்படி வசீகரித்திருக்கிறதென:)?
#4


மாலைச் சூரியனின் பேரொளியில் ஜொலித்தார்கள் ஒவ்வொரு நாட்டியத் தாரகையும்..

#5

#6

#7


#8

சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீஃப்புக்கான அர்ப்பணிப்பாக வழங்கப்பட்டது ““Seeking for the Beloved” இசை நிகழ்ச்சி.  குஜராத்தின் குச் மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மூரலாலா மர்வாடா கவிதைகளைக் காஃப்பி வடிவில் மீட்ட,  பாடகர்கள் மித்தா கானும் சுமர் காடும் அருமையாகப் பாடினார்கள்.
#9

#10

#11

இந்த வருடமும் இது போன்ற விழா நடந்தால் பெங்களூர்வாசிகள் தவற விட்டு விடாதீர்கள்.

#12

#13


#14
‘ப்ரோக்ராம் சக்ஸஸ்..’

***
பாகம்1: நந்தி குனிதா - TOI சர்வதேச கிராமியத் திருவிழா 2014 இங்கே.

16 கருத்துகள்:

  1. என்னவொரு மேக்கப்!

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடை என்றாலே அந்த ஒளி அமைப்புக்கு இப்படியான ஒப்பனைகளும் அவசியமாகின்றனவே :) . நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அனைவரும் மிக அழகு. நல்ல பதிவு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. ஆபரணங்களின் நுண்மை வியக்க வைக்கிறது. அழகான படப்பிடிப்பு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஹைய்யோ!!

    ஆபரணங்கள் எல்லாம் ரொம்ப அருமை. இந்த ஒடிஸ்ஸி நடனத்தில்கூடப் பாருங்க எளிமையான ஆபரணங்களும் உடைகளும்தான். விலை மதிப்பீடு பார்த்தால் அவ்ளவாகச் செலவில்லை.

    நம்ம பரத நாட்டியங்களில்தான் ஆடை ஆபரணங்களுக்காக நிறையவே செலவு செய்யும்படி ஆகுதுப்பா. பாவம் பெற்றோர்கள்:(

    பதிலளிநீக்கு
  5. அழகுமிகு படங்கள் சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. அழகான பெண்கள் உங்கள் காமிராவால் மேலும் அழகு!

    பதிலளிநீக்கு
  7. இந்த திருவிழா எப்போது நடக்கும்? இந்த வருடம் முடிந்து விட்டதா கொஞ்சம் சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறுமானால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு