திங்கள், 23 மார்ச், 2015

தினமலர் ‘புதுப்பயணம்’ - ‘நிழல் யுத்தம்’ போட்டியில் பரிசு


தினமலர் நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பாக வருகிறது நான்கு பக்கங்களுக்கு மனிதம் தேடும்.. ‘புதுப்பயணம்’ பகுதி. இதில் ‘நிழல் யுத்தம்’ புகைப்படப் போட்டியில் அறிவிப்பான ‘வலி’ எனும் தலைப்புக்காக எனது படம் தேர்வாகி சென்ற வெள்ளி 20 மார்ச் 2015 இதழில், இணைப்பின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதற்காக ‘தின மலர்’ அனுப்பி வைத்த சான்றிதழ்...

நன்றி தினமலர்!


பரிசு பெற்ற படம்: ‘வலி’க்குப் பயந்தால் வாழ முடியாதப்பா!



தினமலர் இணைய தளத்திலும் பதிவாகியிருக்கிற இந்தப் படம்....
2010_ல் பெங்களூர் லால்பாகில் எடுத்தது. பலருக்கும் பிடித்துப் போன ஒன்றான இது என் புகைப்படக் கலை ஆர்வம் குறித்த குங்குமம் தோழி, சிறப்பு வெளியீடான குமுதம் பெண்கள் மலர் நேர்காணல்களிலும் இடம் பெற்ற ஒன்றாகும். அதன் பிறகு கடந்த ஐந்து வருடங்களில், பல முறை லால்பாக் சென்றிருந்தபோது எங்கேனும் கண்ணில் படுகிறாரா எனத் தேடியிருக்கிறேன். வெற்றி கிட்டவில்லை. ஆனால் பாராட்டுகளைத் தேடித்தந்தபடியே இருக்கிறார் இந்தப் பாட்டி. 8,9 மார்ச் தேதிகளில் நடைபெற்ற நாகர்கோவில் எக்ஸ்போஷர் 2015 புகைப்படக் கண்காட்சியில் வண்ணம், கருப்பு வெள்ளை இரண்டு விதப் பிரதிகளிலுமாக இடம் பெற்றிருந்தார். (அவற்றையும் மேலும் காட்சியில் இருந்த படங்களையும் விரைவில் ஒரு பதிவாகப் பகிருகிறேன்.)

இந்தப் பயணம் தொடரும்...
***

[FB_யில் வந்த வாழ்த்துகளையும் இங்கே சேமிக்கிறேன். G+ ,மின்குழுமங்கள் உட்பட  வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பு நன்றி.]

25 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஒளிபயணத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் ராமலக்ஷமி.

    பதிலளிநீக்கு
  4. இந்த் பாட்டியஒ பலதடவை பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த அழகு எனக்கு தென்படவில்லை. வாழ்த்துக்கள், ராம லக்ஷ்மி
    இன்னம்பூரான்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள!... வாழ்த்துக்கள்!.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் இன்னும் பரிசு மழை பொழியட்டும்!!!..

    பதிலளிநீக்கு