வெள்ளி, 20 மார்ச், 2015

‘ஆஹா’ படங்களின் அணிவகுப்பு - மார்ச் போட்டி

#1

சத்தி விட்டிருக்கிறார்கள், கோடு போட்டால் ரோடு போடும் "PiT" குடும்பத்தினர். இந்த முறை சற்று வித்தியாசமான ஒரு தலைப்பைக் கொடுப்போமென முடிவு செய்த நடுவர் நவ்ஃபலுக்கு நிச்சயம் மகிழ்ச்சிதான். எழுபது படங்கள் வரை அணி வகுத்து நிற்கின்றன சவால் விட்டபடி. அப்படி என்னதான் தலைப்பு?

#2


Negative Space. நாம் தேவையில்லையோ என எண்ணும் வெற்றிடங்கள் பலநேரங்களில் கருப்பொருளுக்கு பலம் சேர்த்து படம் தரும் உணர்வையே மாற்றி விடுகிறது. நெகட்டிவ் ஸ்பேஸ் படங்களுக்கு பாஸிட்டிவ் ஆகும் அற்புதமே இது. எடுக்கும் படங்கள் மினிமலிஸமாகவும் (Minimalism) இருக்கலாம்.

கருப்பொருளைச் சுற்றியிருக்கும், கவனத்தைக் கலைக்காத வெற்றிடத்தை சரியான வகையில் பயன்படுத்தி ஆஹா!” சொல்ல வைக்க வேண்டும்” நடுவர் சொன்னதை அழகாக உள்வாங்கி அருமையான படங்களைத் தந்திருக்கிறார்கள் போட்டியில் பங்கேற்றவர்கள். அந்த எழுபது பேரோடு உங்களின் படமும் சேர வேண்டாமா? படங்களை அனுப்ப இன்றே கடைசித் தினம். நினைவூட்டவே இந்தப் பதிவு, மாதிரிக்காக நான் எடுத்த சில படங்களுடன்.  [இவற்றில் 2 மற்றும் 11, 12, 13 புதியவை.]


கீழ் வரும் மாதிரிப் படங்கள் குறித்து அறிவிப்புப் பதிவில் நடுவர் அளித்த கருத்துகளும் இங்கே சேர்க்கிறேன்:

#3
இந்தப் படம் மினிமலிசத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிள்ளையாரின் சிலையைச் சுற்றியிருக்கும் வெற்றிடம் ஒரு அமைதியை நமக்கு கடத்துகிறது" _ Naufal M Q
#4
"இந்தப் படங்களில் (4,5) சப்ஜெக்டின்  மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இடம் ஒதுக்கப்பட்டு சப்ஜெடின் மீது நமது கவனத்தை அழகாக ஈர்க்கிறது"
_ Naufal M Q

 #5


 #6


#7


#8


#9

#10

#11

#12


#13


இதுவரை வந்த படங்களைக் காண இங்கே செல்லலாம். போட்டி விதிமுறைகள் இங்கே . போட்டி அறிவிப்பு இங்கே.

19 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் மிக அழகு.. அதிலும் அந்த குட்டி கிருஷ்ணன் படம் அற்புதம்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆகா
    படம் ஒவ்வொன்றும்
    அருமை
    ஒவ்வொன்றும்
    ஒரு அழகிய கவிதை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. நான் இந்த முறையும் ஜகா வாங்கிட்டேன்:( போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. எதுக்கும் இருத்தலின் அடையாளமா படம் ஒன்றை தாமதமாக அனுப்பிவிட்டேன்.

    மன்னிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் கிடைத்தது. வாழ்த்துகள்.

      தாமதம் இல்லை. இருபதாம் தேதி வரையிலும் அனுப்பலாம்.

      நீக்கு
  5. எல்லாப் படங்களும் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் "ஆஹா...!"

    பதிலளிநீக்கு
  7. கவிதைகள் சொல்லும் படங்கள்.. ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  8. 3,4,5, 7,9,10,11 & 13 படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

    5 & 10 படங்கள் பின்னணி கருப்பு செமையா இருக்கு. எந்த கூடுதல் ஒளியோ வெள்ளையோ இல்லாமல் அசத்தலாக இருக்கிறது.

    10 வது படத்தில் எழுத்துகள் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. இதற்கு ஏரியல் ஃபான்ட் பயன்படுத்தி கீழே ஓரமாக இருந்தால் பார்க்க இன்னும் எடுப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்தாவது படம் எடுத்த ஆண்டைக் கவனியுங்கள்:)! இப்போதெல்லாம் வாட்டர் மார்க் கூட ஒபாஸிட்டி குறைத்துதான் பதிகிறேன். மாதிரிக்காக பழைய படங்களும் சேர்த்திருக்கிறேன்.

      பிடித்த படங்களின் லிஸ்ட் பிடித்திருக்கிறது. நன்றி:)!

      நீக்கு