வெள்ளி, 13 மார்ச், 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 10 & 11)


ரண்டு வார்த்தைகள், “எம் தந்தையே”
நிஜத்தில் இவைதாம் நினைவில் நிற்கும் எங்கள் பிரார்த்தனை.
அச்சுறுத்தும் நள்ளிரவு வேளையில், எங்கள் கூடத்தில்,
அண்ணாந்து பார்த்து மென்மையாக வசீகரமாக நாங்கள் சொல்பவை
எங்களுக்கு வேறெந்த வார்த்தைகளும் தெரியாது
“எம் தந்தையே” என்பதைத் தவிர்த்து.
நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்,
தேவதைகளின் பாடல்களில் ஏற்படும் இடைவெளியில்
இனியதெனக் கடவுள் அவற்றைக் கொய்திடக் கூடும்
வலுமிகுந்த தன் வலக்கரத்தினுள்
அவ்விரு வார்த்தைகளைப் பத்திரப்படுத்திடக் கூடும்.
(நல்லவர் மென்மையானவர் என அறியப்படும் கடவுள்)
“எம் தந்தையே” எனும் எங்கள் பிரார்த்தனையை கேட்பாராயின்
பூவுலகைப் புன்னகையுடன் குனிந்து நோக்கி நிச்சயமாகப் பதிலளிப்பார்,
“வந்து என்னோடு ஓய்வு எடு, என் குழந்தையே” என்று.

! ஆனால்..” விசும்பியபடி சொல்கிறார்கள் குழந்தைகள்
“ஒரு கல்லைப் போல் ஊமையாக இருக்கிறார் கடவுள்.
எல்லோரும் சொல்கிறார்கள், அவர் புனிதரென்றும்
பணி செய்ய நமக்கு ஆணையிடும் தலைவனென்றும்.
செல்க சொர்க்கத்துக்கு என்றும்” தொடருகிறார்கள் குழந்தைகள்
“ஆனால் நாங்கள் காண்பதென்னவோ
இருண்ட, சக்கரங்களை ஒத்த..
திரும்பிக் கொள்ளும் மேகங்களை மட்டுமே” என.
“எங்களை எள்ளி நகையாடாதீர்கள்;
துயரம் எங்களை நம்பிக்கையற்றவர்களாக்கி விட்டுள்ளது-
நாங்களும் மேல் நோக்கிக் கடவுளைத் தேடவே செய்கிறோம்,
ஆனால் கண்ணீர் எங்களைக் குருடர்களாக்கி விட்டுள்ளது.”
ஓ சகோதரர்களே, உங்கள் உபதேசங்களைத் தவறென நிரூபிக்கும்
குழந்தைகளின் அழுகை, கேட்கிறதா உங்களுக்கு?
அன்பு நிறைந்த கடவுளின் உலகில்
அவரால் சாத்தியமானதாகப் போதிக்கப்படுகிற ஒவ்வொன்றையும்
சந்தேகிக்கிறார்கள் குழந்தைகள்.

*

படங்கள் நன்றி: இணையம்
மூலம்: “The Cry of the Children
by Elizabeth Barrett Browning

அதீதம் வெளியீடு.
[நிறைவுப் பாகம், பாடல்கள் 12&13.. விரைவில்..]
**

14 கருத்துகள்:

  1. தொடரும் துன்பங்களின் பின்விளைவு.

    'துன்பத்தினால் வரும் கண்ணீரை உடனுக்குடன் துடைத்து விடுங்கள்... அடுத்துப் பின்தொடரும் நல்வாய்ப்பை அது மறைத்து விடக் கூடும்' என்று சொல்வது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  2. மனதை கணக்கச் செய்யும் பாடல்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    பதிவை முழுமையாக படித்தபோது ஒரு தடவை சிந்திக்க தோன்றியது... மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. ஆண்டவரே! கண்ணீரே காணிக்கையாகும் போது வறண்ட வார்த்தைகள் ஏனுனக்கு?...

    நல்ல கவிதை ... கணக்கும் வரிகள்...

    பதிலளிநீக்கு
  5. நடப்பதை எல்லாம் பார்க்கும் போது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இறைவனை சந்தேகிக்கத்தான் வேண்டும் போல் இருக்கிறது.
    நம்பும் அடியவர்களை கைவிடாது இருக்கட்டும் இறைவன்.
    படமும், கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு