சனி, 28 பிப்ரவரி, 2015

பட்சியொலி - . ‘தென்றல்’ அமெரிக்க தமிழ் பத்திரிகையில்..


# பக்கம் 76_ல்..
~ படமும் கவிதையும் ~

வர்களுக்குள்ளும் இருந்தன
உயர்வு தாழ்வுகள்
வலிமையில் வண்ணத்தில்.
அவர்களுக்கென்றும் இருந்தன
தனித் தனி இராஜ்ஜியங்கள்
மலைகளில் வனங்களில்.
வானம் வசப்பட்டென்ன
கூடமைக்கக் கிளைகளில்லை இன்று.
சுயமிழந்து அகதிகளாய்
நகரங்களில் அடைக்கலமாகி
அலகுக்கு அகப்படுகிறவற்றை
கொத்திக் கொத்தி
உயிர் வளர்க்கும் இவர்கள்
ஒருவரையொருவர்
அழைத்துக் கொள்ளும் குரலில்
இல்லவே இல்லை
அந்நாளையக் கம்பீரமும்
சிலிர்ப்பைத் தந்தக் குதூகலமும்.

**

[பயனர் கணக்குடன் இணையத்தில் ‘வாசிக்க’..

ஒலி வடிவம்நன்றி திருமதி.சரஸ்வதி தியாகராஜன்!]

நன்றி தென்றல்!
***

20 கருத்துகள்:

  1. பட்சியொலி கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    எங்கள் மொட்டைமாடிக்கும் ஒற்றைகால் மைனா வரும். தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒற்றைக்காலுடனும் பறவைகள் உற்சாகமாய் வாழ்க்கையைத் தொடரும் விதம் மனிதருக்கான பாடம். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. பட்சியோடு சேர்த்து பட்சியின் மனத்தையும் படம்பிடித்த அழகுக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. இதோ இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறேன் அருமையான பட்சியின் குரலோசையை.
    எங்கிருக்கிறதோ தெரியவில்லை. மனிதர்கள் பேசுவது போலவே இடைவிடாமல் பேசுகிறது.தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அசர வைக்கும் குளிர் காற்று.நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. அருமை அருமை
    வாழ்த்துக்கள்.
    இன்று தான் தங்கள் தளத்திற்கு முதல் தடவை வருகிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
  5. பட்சியொலி எங்கள் உள்ளத்திலும் நிறைந்து விட்டது. அருமையான கவிதைக்கும், தென்ற இதழில் வெளிவந்ததற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு