புதன், 25 பிப்ரவரி, 2015

திருநாகேஸ்வரம் புஷ்கரணி - ஓவியமானது ஒளிப்படம்

# திருநாகேஸ்வரம் புஷ்கரணி

நான் எடுத்த இப்படம், சமீபத்தில் (என் ஒளிப்படப் பயணம் குறித்த கட்டுரை வெளியான) ‘தினகரன் வசந்ததின் அட்டை’யிலும் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இக்காட்சியை அற்புதமான ஓவியமாகத் தீட்டி, எனக்கானப் பரிசாக அளித்துக் கெளரவப்படுத்தி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் நண்பரும், ஓவியருமான..
திரு. சண்முகநாதன்.

# சதங்காவின் தூரிகையில் புஷ்கரணி

ஆம். சதங்கா என்று சொன்னால்தான் உங்களில் பலருக்குப் புரியும். இவர் சிறந்த ஓவியர் மட்டுமல்ல, கவிதை, சிறுகதை, சமையல், புகைப்படம் என கையில் எடுத்துக் கொள்ளும் கலை யாவற்றிலும் மிளிர்பவர்.  வழக்கம் போல் வலைப்பூவில் 2007 முதல் 2009 வரை தீவிரமாக எழுதி வந்தவர். இவரது பிற வலைப்பூக்கள்:

சித்திரம் பேசுதடி ;  செட்டிநாடு கிட்சன் ; மூன்றாம் கண்


சொந்த வேலைகளில் பிஸியாகி இப்போது வலைப்பூக்களில் அதிகம் பதிவதில்லை. அமெரிக்காவில் வசிக்கிறார். ஓவியம் கற்பதில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி வகுப்புகள் எடுக்கிறார். தன் ஓவியங்களை Face Book_லும் தொகுத்து வைத்திருக்கிறார். அவற்றை நீங்கள் இங்கே கண்டு இரசிக்கலாம்: Shan Art

அழகான பரிசுக்கு அன்பும் நன்றியும் சதங்கா:)!
**

['இங்கு' இரசித்து வாழ்த்தியிருப்பவர்களுக்கு நன்றி!]

28 கருத்துகள்:

  1. ஓவியமும் புகைப்படம் போலவே அழகு!

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான ஓவியம்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    சதங்கா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அழகான அற்புதமான ஓவியம். சதங்கா அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக அழகான ஓவியம்..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. தத்ரூபமாக வரைந்து இருக்கிறார்.

    சதங்காவுக்கும் வாழ்த்துக்கள். ஆசிகள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. அமைதியான ஆளில்லாத கோவில்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சென்றிருந்த போது கோவிலில் கணிசமான பக்தர் கூட்டம்தான் என்றாலும் புஷ்கரணிக்குள் அதிகமாக இல்லை. புஷ்கரணியின் நுழைவாயில் பக்கமிருந்து எடுத்த படம்.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. பகிர்வுக்கு நன்றி அக்கா! வரையத்தூண்டிய படத்துக்கு உங்களுக்கு முதல் பாராட்டு :)

    வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பணிகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி அர்ப்பணிப்புடன் வரைந்திருக்கிறீர்கள். மீண்டும் என் அன்பு நன்றி:)!

      நீக்கு
  8. தத்ரூபமா இருக்கு. பாராட்டுகள் சதங்கா. வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி. :)

    பதிலளிநீக்கு
  9. அருமையான படங்!களை அளித்த ஓவியர் சதங்காவிற்கும் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. அழகாக இருக்கு அக்கா.
    ஓவியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஓவியம் செமையா இருக்கு.. நான் முதலில் (மொபைலில் பார்க்கும் போது) நிழற்படம் என்றே நினைத்தேன்.

    உங்களுக்கு பரிசாக கொடுத்த போது மிக மகிழ்ந்து இருப்பீர்கள் :-) சிறப்பான பரிசு. பணம் கொடுத்தால் கூட இவ்வளவு மன நிறைவு கிடைக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்த பரிசு.

      நன்றி கிரி :)!

      நீக்கு