வியாழன், 12 பிப்ரவரி, 2015

தூறல் 24 - நவீன விருட்சம் 96 ; கலிஃபோர்னியா ‘தென்றல்’; தினகரன் வசந்தம்



டந்த 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டுப் பத்திரிகை ‘நவீன விருட்சம்’.  டிசம்பர் 2014 வெளியான அதன் 96_வது இதழில் எனது தமிழாக்கக் கவிதைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன.

 (இவை ஏற்கனவே நவீன விருட்சம் இணைய தளத்தில் வெளியாகி இங்கே நான் பகிர்ந்த கவிதைகள்.)

ன்றி நவீன விருட்சம்!
**


மெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் மாத இதழான தென்றலின் பிப்ரவரி இதழின் கவிதைப் பந்தலில்.. என் கவிதைகள் 3, நான் எடுத்த படங்களுடன் வெளியாகியுள்ளன. அட்டையிலும் அறிவித்திருக்கிறார்கள்!

 அவற்றை வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் இங்கே செல்லலாம்.



இணைய தளத்தின் உள் நுழைய பயனர் கணக்கு இருக்க வேண்டும். முழுமையான கவிதைகளை ஒவ்வொன்றாக விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற மாதம் ஜனவரி 2015 இதழின் அட்டையிலும், திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களது நேர்காணல் குறித்த கட்டுரையிலும் நான் எடுத்த படங்கள் இடம் பெற்றுள்ளன:


இவை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் எடுத்த படங்கள்:

ன்றி தென்றல்!
**
ருகிற ஞாயிறு, தினகரன் நாளிதழுடன் வெளியாகும் இணைப்பான ‘தினகரன் வசந்தம்’ இதழில் எனது ஒளிப்படக்கலை ஆர்வம் குறித்து வெளியாக உள்ளது. வாய்ப்புக் கிடைப்பவர்கள் பத்திரிகையில் பாருங்கள் :)!


இக் கட்டுரை குறித்து தினகரன் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியரின் இன்றைய அறிவிப்பு:

ன்றி தினகரன் வசந்தம்! நன்றி திரு. கே.என். சிவராமன்! பேட்டி கண்ட திருமதி. பிரியா கண்ணன் அவர்களுக்கும் என் நன்றி!
**
டத்துளி:

பேகல், கேரளம்
 ***

24 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்ம்.
    மேலும் , மேலும் வெற்றிகள், பெருமைகள் வந்து சேரட்டும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். ஞாயிறு வசந்தம் வாங்கி விடுவோம்! :)))

    பதிலளிநீக்கு
  3. மேலும் பல உயரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. எழுத்துலக சாதனைகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். இதுபோல மேலும் வெற்றி மேல் வெற்றிகள் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் அக்கா...
    ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் திறமைகள் பிரமிப்பூட்டுகிறது உங்கள் வலைப் பக்கம் அதிகம் வந்ததில்லை இனி வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி:). உங்கள் வலைப்பக்கத்தை ஃபீட்லியில் நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்!

      நீக்கு