வியாழன், 18 செப்டம்பர், 2014

வானம் எனக்கொரு போதி மரம் - செப்டம்பர் PiT புகைப்படப் போட்டி

இந்த மாத போட்டியின் தலைப்புக்கானக் கருப்பொருள் கண்ணில் மாட்டவில்லை என யாருமே சொல்ல முடியாதபடி ஒரு தலைப்பைக் கொடுத்துவிட்டார் நடுவர் நித்தி ஆனந்த்.

வானம் எனக்கொரு போதி மரம்

#1

உங்கள் படங்களை அனுப்ப இன்னும் 2 தினங்களே இருக்கிற நேரத்தில் இந்தப் பதிவு அனுப்ப நினைத்து மறந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்குமென நம்புகிறேன்.

முடிந்தவரை தலைப்புக்காக ஒரு படமேனும் எடுக்க வேண்டுமென்கிற என் விருப்பத்தின் விளைவாக முதல் படம். நேற்றைய வானம்.

மேலும் சில பல மாதிரிப் படங்கள் :)!

#2 அந்தி வானம்

#3 வர்ண ஜாலம்

#4 மஞ்சள் வெயில் மாலையிலே..


#5 ஹைக்கூ

#6 இதோ மேக ஊர்வலம்

#7 நீல வான ஓடையில்..

#8 கதிரவனை விழுங்கும் முகில்


#9 கிரகணத்தில் கரையும் சந்திரன்


#10 விலகாது போகுமா கிரகணம்?

#11 நம்பிக்கைதானே வாழ்க்கை?
பூரண நிலவு


இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் 50-க்கும் அதிகமான படங்களை இங்கே சென்று இரசிக்கலாம்.

அறிவிப்புப் பதிவு இங்கே.  விதிமுறைகள் இங்கே.
***

12 கருத்துகள்:

  1. வானம் அலுக்காத விஷயம். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஒவ்வொரு உருவம், கற்பனை தோன்றும்.

    எல்லாப் படங்களும் அருமை.

    வானத்தில்தான் எத்தனை வகை? பொன்னிற வானம், செக்கர் வானம், நீல வானம், வெறும் வானம், வெண்ணிற வானம்...!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு நிழற்படத்துக்கும்
    ஆயிரமாயிரம் கவிதை
    உதயமாகிறது நெஞ்சில்...
    அருமையான படங்கள்..

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். வானத்தில் மேகங்களில் சில தோற்றங்களை கண்டு மற்றவர்களுக்கு அது தெரிகிறதா? என்று கேட்பது சின்னவயதிலிருந்து ஒரு ஆர்வம்.
    வானத்தை காலை முதல் மாலை இரவு என்று ரசிக்க பிடிக்கும் எனக்கு.

    உங்கள் படங்கள் எல்லாம் கண்ணை கவர்கிறது. கொள்ளை அழகு.


    பதிலளிநீக்கு
  4. வானம் எனக்கொரு போதி மரம் படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  5. வானம்..... நல்லதோர் தலைப்பு. கடலைப் போலவே வானமும் அலுக்காத விஷயம்...

    போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. @கோமதி அரசு,

    ஆம். நாள் முழுக்க இரசித்துக் கொண்டிருக்கலாம்:). நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு