வியாழன், 10 ஏப்ரல், 2014

தமிழ்ப் பறவை

#1
நீர் வண்ண ஓவியங்களில் அசத்தி வரும் பரணிராஜன் சத்தியமூர்த்திக்கு சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் உசிலம்பட்டி. ஓவிய ஆர்வம் துளிர் விட்டது சினிமாவினாலும், சினிமா கட்-அவுட்டுகளினாலும்தான் என்றது சுவாரஸ்யம். அவர் வரைந்த ஓவியங்களை இரசித்தபடியே அவரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:)!

#2

சிறுவயதில் உசிலம்பட்டியில் இருந்து மாதமொருமுறை மதுரை செல்லும் போது, பெரியார் பஸ்ஸ்டாண்ட் பக்கம், 40-50 அடியில் காணக் கிடைத்த சினிமா கட்டவுட்களே ஓவியனாகும் ஆசையை இவருக்குள் விதைத்திருக்கிறது. ஆனாலும் அதற்கான பயிற்சி என்பது பள்ளி ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்கிற மட்டிலேயே நின்று போயிருந்திருக்கிறது. பொறியியல் படித்து முடிக்கும்வரை அதற்கென அதிக நேரம் செலவழிக்க முடியாது போனாலும்  பத்திரிக்கைகளில் வரும் மாருதி, ம.செ., ஜெ.., ராமு, அரஸ், ஷ்யாம் ஆகியோரின் ஓவியங்களை உள்வாங்கிக் கொண்டே இருந்திருக்கிறது இவரது ஓவிய ஆர்வம்.

#3
படிப்பை முடித்து பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின்புதான், ஓவியக் கலையின் கதவு இவருக்குத் திறந்திருக்கிறது. பெங்களூரின் குளுமை, மக்களின் கலையார்வம் மேலும் தன்னைத் தூண்டியது எனத் தெரிவிக்கும் பரணி எப்படி தன்னைச் செதுக்கிக் கொண்டார் என்பதை விவரிக்கிறார்:
# 4
பரணிராஜன்
“பென்சில் ஜாம்மர்ஸ் எனும் இணையக் குழுவில் இணைந்தேன். ஜார்ஜ் சுப்ரீத் என்பவர்தான் குரு. ஒவ்வொரு ஞாயிறும், பெங்களூரின் ஏதேனும் ஒரு இடத்தில் குழுவாகக் கூடுவோம். இடங்களையும், மக்களையும் நேரடியாக வரைய ஆரம்பித்தோம்.  அங்கே ஒரு அறிவுப் பரிமாற்றம் நிகழ்ந்தது. முதன்முறையாக நீர்வண்ண ஓவியம் என்றால் என்ன?அதன் சிறப்புகள் என்ன என அறியவந்தேம். அதன் சிறப்பம்சம் , ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட அதன் வண்ணங்கள். (வெள்ளை மற்றும் கருப்பு உபயோகிக்கமாட்டார்கள்.  அவை மற்ற வண்ணங்களை மறைத்துவிடும்(opaque) , உடனடியாகச் செய்துமுடிக்கவேண்டிய எளிமை, பாதி ஓவியங்கள் தூரிகையாலும், மீதி ஓவியங்கள் காகிதத்தில் இயங்கும் நீராலும் முடிந்துவிடும் மாயம், தவறு செய்தால் திருத்திக் கொள்ள முடியாத தன்மை.., போன்ற பண்புகள் என்னைத் தொடர்ந்து நீர்வண்ண ஓவியங்கள் கற்பதிலும் ,செய்வதிலும் ஈடுபடுத்தின. லேண்ட்ஸ்கேப், போர்ட்ரெய்ட், இம்ப்ரஷனிசம், ரியலிசம் என வெவ்வேறு வகைகளை நீர்வண்ண ஓவியத்தில் அதற்கேயுண்டான பிரத்யேக அழகில் செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். நான் தொடர்ந்து நீர்வண்ண ஓவியங்கள் செய்து வருகின்றேன்.

ஒரு சாதாரண பெயிண்டிங் A4size ஆனது இரண்டு முதல் நான்குமணி நேரத்தில் முடிந்துவிடும். அளவு மற்றும் காம்ப்ளக்சிட்டி பொறுத்து நேரம் மாறுபடலாம்… 

#5



இதுபோக எனது ஃபேவரைட் பென்சில் மற்றும் ரெய்னால்ட்ஸ் பென் ஓவியங்கள். இவ்வகை ஓவியங்கள் அதிக நுண்விபரங்களைக் கோருவதால் ,தயாரிப்பு நேரம் அதிகமாகும். நண்பர்கள் மற்றும் ஆர்டரின் பேரில் செய்யக்கூடிய ஓவியங்களை 8B ஸ்டெட்லர் பென்சில் மூலம் செய்துகொடுக்கிறேன்.

#6

சித்திரசந்தையைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும், பெங்களூர் வந்த பின்புதான் பங்கேற்கமுடிந்தது. 2012 முதல் 2014 வரை தொடர்ந்து கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கிறேன்.இது வேறுவகையான சந்தை.இங்கு நாம் சொல்வது விலை அல்ல. வாடிக்கையாளர் கேட்பதே விலை.ஓவியங்களை எந்த அளவுக்கு ரசிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவருக்கு விலையில் விட்டுக்கொடுப்பதும் உண்டு. இங்கு வரும் வெளிநாட்டினர்,அவர்கள் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக ஃப்ரேம் இல்லாத ஓவியங்களையே வாங்க விரும்புகின்றனர். நமக்கும் ஃப்ரேம் போடும் செலவும் மிச்சம்.


#7

பெங்களூர் மக்கள் பரவாயில்லை. கலைக்காக காசு செலவழிக்கத் தயங்காதவர்கள். எனினும்,1000 ரூபாய்க்கு ஒரு பிரியாணி,மல்டிப்ளெக்சில் ஒரு சினிமாவுக்கு செலவழிக்கலாம். ஆனால் 6 மணிநேர ஓவிய உழைப்புக்கு 500 ரூபாய் கூட செலவழிக்கத் தயங்கும்நிலையும் உண்டு [சட்டமிடும் செலவே 250 ரூபாய் ஆகிவிடுகிறது].

# 8
விற்பனையான ஓவியங்களுடன்..
இதுபோக அலுவலகத்தில் நடந்த கண்காட்சியிலும் எனது ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கின்றேன். நல்ல விற்பனையும் கூட. ஒவ்வொரு கண்காட்சியிலும் இசைஞானி இளையராஜா ஓவியம் வைப்பது எனது சிறிய செண்டிமெண்ட். அது விற்றும் போகும். இப்பொழுது கூட 3 இளையராஜா ஓவியம் வரையச் சொல்லி ஆர்டர் வந்துள்ளது. அதற்கான பணியில் இருக்கிறேன்..” என்கிற பரணி, இசை ஞானியின் தீவிர இரசிகர்.

#9
தான் வரைந்ததில் மிகப் பிடித்ததாம்..
தற்போது பெங்களூரில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் சீனியர் டிசைன் எஞ்சினியராக பணியாற்றுகிறார். இணையத்தில் ‘தமிழ்ப் பறவை’ என்ற பெயரில் வலைப்பூ ஆரம்பித்து வலம் வந்தவர். சொந்தப் பெயரிலேயே தற்போது  சமூக வலைத்தளங்களில் இயங்கும் இவர், இந்தத் தளங்கள்தாம் தன் ஓவியத் திறனின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என சொன்னதை 
சென்ற பதிவில் [ கல்கி கேலரி ] ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

மேலும் சாதிக்க வாழ்த்துகள் பரணி!

***

*ஓவியர் மற்றும் அவரது ஓவியங்களின் ஒளிப்பட ஆக்கம்: Ramalakshmi Photography



36 கருத்துகள்:

  1. ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதையை சொல்கின்றன... திரு. பரணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எனக்குக் கூட இளையராஜா அவர்களின் புகைப்படமாக அல்லாமல்
    இளையராஜாவின் வரையப்பட்ட உருவப் படத்தை வாங்கி வீட்டில் வைக்க ரொம்ப நாளாக ஆசை. பரணியின் ஒவ்வொரு வரை படத்திலும்
    கண்கள் பேசுகின்றன. அது ஒன்றே போதும் ஓவியத்தின் அழகை
    பேரழகாக்க. பரணி அவர்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் அறிந்தவரை உலகிற்கு அறிமுகம் செய்வித்த தங்களுக்கும்
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. விவரமான பேட்டி, வாழ்த்துகள் :-)

    amas32

    பதிலளிநீக்கு
  4. வளரும் கலைஞரை ஊக்குவிக்கும் பேட்டி...வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. படத்தில் காண்பது பரணிராஜனா, பரணீதரனா, அன்றி இருவரும் ஒன்றா?

    பதிலளிநீக்கு
  6. @புவனேஸ்வரி ராமநாதன்,

    சமூக வலைத்தளங்கள் மூலமாக பன்னாட்டு இரசிகர்களைக் கொண்டவர் பரணி. ஓவியங்களை இரசித்ததற்கு நன்றி, புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  7. வாவ் !!! எதைச் சொல்ல? எதை விட?

    பரணிராஜனுக்கும், சேதியைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு ஓவியமும் கண்ணைக் கவர்ந்தன.

    ஓவியருக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அத்தனையும் அருமை பரணி.
    பரணியின் அறிமுகத்திற்கு நன்றிகள் பல ராமலக்ஷ்மி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கிழவர் படம் - மீசைக்குள் உதடு - அற்புதம்.

    திமிறும் குதிரையின் கோணமும் பிரமாதம்.

    திரு பரணி மென்மேலும் உயர எங்கள் வாழ்த்துகளும்.


    பதிலளிநீக்கு
  11. இளையராஜா ஓவியம்? ரொம்ப நல்லாயிருக்குமே இவர் வரைந்தால்? அதையும் மாதிரிக்கு ஒன்று போட்டிருக்கலாமே பதிவில்? சிறந்த ஓவியரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. @கே. பி. ஜனா...,

    பதிவில் நான் எடுத்த படங்களை மட்டும் பகிர்ந்திருக்கிறேன். இசை ஞானியைப் பல கோணங்களில் வரைந்திருக்கிறார். சமீபத்தில் வரைந்த படம் ஒன்று இங்கே. நன்றி:)!

    பதிலளிநீக்கு
  13. அனைத்து பின்னூட்டங்களும் பரணியைக் கண்டு கொண்டன. உங்கள் எழுத்தாக்கமும் ஆவரின் ஓவியத்திறனும் மனதை நெகிழச் செய்கின்றன. மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அருமை...
    ஓவியருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. ஓவியருக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    April 10, 2014 at 11:54 AM

    பதிலளிநீக்கு
  16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

    பதிலளிநீக்கு
  17. @தருமி,

    பரணிக்கு வளமான எதிர்காலம் அமையும் தங்கள் வாழ்த்துகளால். நன்றி தருமி sir.

    பதிலளிநீக்கு
  18. ஓவியங்கள் அழகு. ஓவியங்கள் குறித்து பல புதிய குறிப்புகள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் எடுத்து ஓவியப் பதிவுகளைப் பார்த்ததில் மகிழ்ச்சி. கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு