சனி, 18 ஜனவரி, 2014

சீட்டு விளையாடத் தெரிந்திருப்பது அவசியம்தானா?

இம்மாத PiT போட்டிக்கு 'சீட்டுக்கட்டு விளையாடத் தெரிந்திருக்க அவசியம் இல்லை. அதன் வடிவங்கள் நான்கையும் அறிந்திருந்தாலே போதும்.’ என்கிறார் நடுவர் ஆன்டன். அறியாதவர் இருக்கிறீர்களா என்ன:)? ஆனாலும் அழகுத் தமிழில் வரிசைப் படுத்தியிருக்கிறார் நான்கு வடிவங்களையும் அறிவிப்புப் பதிவில் இப்படி:
  • ஈட்டிமுனை வடிவம் (Spade) - 
  • இதய வடிவம் (Heart) - 
  • சாய்சதுர வடிவம் (Diamond) - 
  • மூன்று பக்க இலை வடிவம் (Club) - 

நீங்கள் எடுக்கிற படங்கள் இந்த வடிவங்களில் ஒன்றைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும். ‘நூற்றுக்கு நூறு சதவிகிதம் துல்லியமாய் இருக்க வேண்டியதில்லை. ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரதிபலித்தால் சரி’ என நடுவர் பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் ‘உங்கள் கற்பனைத் திறனில் அவ்வடிவம் மெருகு பெற்று, ஒளிப்படக் கலையின் முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தாலே வெற்றி பெறும்’ என்றும் சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:)!

மாதிரிக்கு நான் எடுத்தவற்றில் சில:
#1 
 
#2 

#3


#4


# 5 



# 6 
ரொம்பப் பெரிய மனசு..

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 ஜனவரி 2014. இதுவரை வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்.
***  

20 கருத்துகள்:

  1. நீங்கள் எடுக்கும் படங்கள் அத்தனையும் அழகு, துல்லியம், என்ன ரகசியம்??!!

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் எடுத்துள்ள இரண்டு படங்களும் மிகவும் பொருத்தமாகவே உள்ளன.

    வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அற்புதம். குறிப்பாக மூன்றும் நான்கும்.

    பதிலளிநீக்கு
  4. Jayadev Das said...
    நீங்கள் எடுக்கும் படங்கள் அத்தனையும் அழகு, துல்லியம், என்ன ரகசியம்??!!

    அன்பு ஜயதேவ்,

    ரகசியம் இதுதான். அவற்றை எடுத்தது ராமலக்ஷ்மி அவர்கள்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாப் படங்களும் அழகு & குறிப்பாக ஒன்றும் மூன்றும் சூப்பரு!

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள் ராமலக்ஷ்மி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. @ நடராஜன் கல்பட்டு

    நன்றி சார்!! அவங்க ஏதாவது கேமரா பேரு சொன்னா அதை வாங்கி நாமும் படம் எடுக்கலாம்னு நினைச்சேன், individual திறமைன்னா அதை வளர்க்கனும் நம்மால எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான்!! Thanks.

    பதிலளிநீக்கு
  8. @Jayadev Das,

    சித்திரமும் கைப்பழக்கம். ஆர்வம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வதும், தொடர்ந்து எடுத்து வருவதும் நம் திறனை நிச்சயம் மேம்படுத்தும். நன்றி:)!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. @வை.கோபாலகிருஷ்ணன்

    மாதிரிப் படங்கள் ஆறும் நண்பர்களுக்குப் போட்டியை நினைவுபடுத்திடப் பகிர்ந்துள்ளேன். நன்றி vgk sir!

    பதிலளிநீக்கு
  11. @நடராஜன் கல்பட்டு,

    இப்படிச் சொல்லியிருப்பது அன்பு மிகுதியாலும், பெருந்தன்மையினாலும்.
    நன்றி கல்பட்டு sir:)!

    பதிலளிநீக்கு
  12. அழகான படங்கள். போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. படம் எண் 3 வெகுசிறப்பு. ரொம்ப அழகா இருக்கு. போட்டிக்கு வந்த படங்களிலும் கற்பனைத் தீறன் மிக்க படங்கள் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. @ஹுஸைனம்மா,

    நன்றி ஹுஸைனம்மா.

    ஆம்:). இன்று போட்டி முடிவுகளும் வெளியாகி விட்டன.

    பதிலளிநீக்கு