வியாழன், 5 டிசம்பர், 2013

குமரியில்.. FB புகைப்படப் பிரியனின் இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப்பட்டறை

ந்தக் கலையானாலும் சரி, கற்றக் கொண்டே செல்வதில்தான் நம் திறன் மெருகேருகிறது. ‘கற்றலுக்கு முடிவே இல்லை. வாருங்கள் பகிர்ந்து கொள்வோம் அவரவர் அறிந்ததை’ என அழைக்கிறது குமரி முனைக்கு உலகத் தமிழ் புகைப்படப் பிரியர்களை, புகைப்படப் பிரியனின் "இரண்டாவது ஒளிப்படக்கலை கருத்துப் பட்டறை."!


இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒளிப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் ஆரம்பிக்கப்பட்டது புகைப்படப் பிரியன் குழுமம். அது குறித்த அறிமுகமாக எனது அப்போதைய பகிர்வு இங்கே. மெர்வினின் வியக்க வைக்கும் கலைத் திறன் குறித்த எனது ‘தினகரன் வசந்தம்’ கட்டுரை இங்கே. அதிலே முதல் கருத்துப் பட்டறையில் அவர் நிகழ்த்திக் காட்டிய ‘உன்னைப் போல் ஒருவன்’ பற்றிய குறிப்பும் உள்ளது.

அழைப்பின் பேரில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஒளிப்பட ஆர்வலர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனைகள் வழங்கியும், அறிந்த பல வித்தைகளைக் கற்றுத் தந்தும் வருகிறார் மெர்வின் ஆன்டோ. சமீபத்தில் தூத்துக்குடியிலும், பாளையங்கோட்டையிலும் இவர் வரவால் பயன்பெற்றிருக்கின்றனர் பல தொழில் சார்ந்த புகைப்படக் கலைஞர்கள்.

ஒவ்வொரு நாளும் FB ‘புகைப்படப் பிரியன்’ குழுமத்தில் ஆர்வத்துடன் பலர் இணைந்தபடி இருக்க 7300-க்கும் அதிகமான உறுப்பினர்களோடு எட்டி நிற்கும் அதன் உறுப்பினர்களுக்காக இதோ அவரது முயற்சியில் இரண்டாவது கருத்துப் பட்டறை, 2014 ஜனவரி 25, 26 தேதிகளில்..




# நிகழ்வு நடக்கவிருக்கும் அரங்கம்

முதலில் உறுப்பினராகுங்கள்..

நிகழ்வில் கலந்து கொள்ள நீங்கள் புகைப்படப் பிரியனின் உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம். உறுப்பினர் அல்லாதவர் இங்கே சென்று இணைய விருப்பம் தெரிவிக்கலாம்.
https://www.facebook.com/groups/pugaipadapiriyan/

பதிவு செய்ய..

அடுத்து நிகழ்வில் கலந்து கொள்ள முடிவு செய்கிறவர்கள், இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள கீழ்வரும் பக்கத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்:
https://www.facebook.com/events/1434267606785611

கட்டணம்

ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, வல்லுநர்கள் பலரை வரவழைத்து, வசதியான அரங்கம் ஏற்பாடு செய்து நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கான செலவுகளுக்காக ஸ்பான்ஸர் யாரையும் எதிர்பாராமல், இலாப நோக்கற்று நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் தங்கும் செலவுகள் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது புரிதலுக்குரியதே.

# புகைப்படச் சுற்றுலா

 # செல்லவிருக்கும் இடங்கள்..


# வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பரிசளிப்பு விழா..


மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வின் இரண்டாம் மூன்றாம் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பார்த்தோம். பரிசளிப்பு என்றால் போட்டிகள் இல்லாமலா:)? அதுதான் முதல் நிகழ்ச்சி!

புகைப்படப் போட்டி 1: 


இப்போட்டிக்கானப் படங்களைப் பதிய வேண்டிய பக்கத்திற்கான இணைப்பு...
https://www.facebook.com/media/set/?set=oa.756253804388087&type=1

புகைப்படப் போட்டி 2 : 
இப்போட்டிக்கானப் படங்களைப் பதிய வேண்டிய பக்கத்திற்கான இணைப்பு...
https://www.facebook.com/media/set/?set=oa.756253804388087&type=1


புகைப்படப் போட்டி 3 : 

இப்போட்டிக்கானப் படங்களைப் பதிய வேண்டிய பக்கத்திற்கான இணைப்பு...
https://www.facebook.com/media/set/?set=oa.754983807848420&type=1

ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். நிகழ்வைப் பற்றிய அவ்வப்போதைய தகவல்களுக்கு இந்தப் பக்கத்துடன் தொடர்பில் இருங்கள்.

சீராகத் திட்டமிட்டுச் செயல்படுத்திவரும் மெர்வின் ஆன்டோவுக்கும், உடனிருந்து உதவும் நட்புகளுக்கும் பாராட்டுக்கள்!

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்:)!
***








14 கருத்துகள்:

  1. அனைத்து இணைப்புகளுக்கும் நன்றி... இணைகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எங்கள் வாழ்த்துகளும். மெர்வின் ஆன்டோவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நிகழ்ச்சி சிறப்புற நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நிகழ்ச்சி வெற்றி பெற எனது வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி, நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.சகோ.
    மெர்வின்க்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. @திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி, ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. @mervin anto,


    நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மீண்டும் வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு