திங்கள், 18 நவம்பர், 2013

இரண்டு வர்ணங்கள் - நவம்பர் PiT

எளிதான அதே நேரம் சவாலான ஒரு தலைப்பைத் தந்திருக்கிறார், இம்மாதப் போட்டி நடுவரான நித்தி ஆனந்த்.

இரண்டு வர்ணங்கள். போட்டி அறிவிப்பு இங்கே.

படமாக்க சுலபமான தலைப்பே. ஆயினும் எடுக்கிற படங்களில் ஆதிக்கம் செலுத்தப் போகும் அந்த இரண்டே இரண்டு வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி இடும் வகையிலோ அல்லது ஒன்றை மற்றொன்று மெருகேற்றும் விதத்திலோ அமைவதில்தான் சுவாரஸ்யம் கூடுகிறது. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாம்.

#1 வெள்ளை ரோஜாவின் மென்மைக்கு மெருகூட்டும் இளஞ்சிவப்பு

#2 காமதேனு


# 3 நீலவான ஓடையில் நீந்தும் வெண்மேகங்கள்..
 #4 சபாஷ்.. சரியான போட்டி

#5 ஆரஞ்சும் ஆரோக்கியமும்

#6 ஜெல்லி மீன்கள்
அடிப்படை ஏழு வண்ணங்களில் வாராதெனினும் கருப்பு+வெள்ளைப் படங்களுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார் நடுவர். பல கலைஞர்களால் நேசிக்கப்படும் இந்த இரட்டையரை இரண்டு வர்ணங்களாக வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படி அனுப்பும் படங்களில் grey tone அதிகமாயில்லாமல், கருப்பும் வெள்ளையுமே அழுத்தமாக வெளிப்படுமாறு பார்த்துக் கொள்தல் நலம். மாதிரிக்கு அறிவிப்புப் பதிவிலிருக்கும் மலரைப் பார்க்கலாம்.

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்.

படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 20-11-2013. 

18 கருத்துகள்:

  1. கலந்து கொள்பவருக்கு வாழ்த்துக்கள்...(advance)

    பதிலளிநீக்கு
  2. முதல் படத்தில் ரோஜா மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்கள். வெற்றிபெற வாழ்த்துகள்.

    ரோஜா நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நீலவான ஓடையில் நீந்தும் வெண்மேகங்கள்.அழகு..!

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை ராமலெக்ஷ்மி :) :)

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கற்பனை திறனும் கலவண்ணமும் பிரமிக்க வைக்கிறது ராமலக்‌ஷ்மி...!

    பதிலளிநீக்கு
  7. போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  8. ஆஹா ஆஹா இரு வண்ணக்கலவை நிகழ்த்தும் அற்புதம் ரோஜாவா மஞ்சளா நீலமா கருமையா வெண்மையா அனைத்துமா வார்த்தைகளில் அடங்குவதில்லை வண்ணங்களின் அழகுகள்

    பதிலளிநீக்கு