ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்.. - அக்டோபர் PiT

நிகழ்வுகள். 

இதுதான் இம்மாதத் தலைப்பு. மக்கள், நட்புகள், உறவுகள் கூடுகிற நிகழ்வுகள் எதுவானாலும் இருக்கலாம்.

#1 இன்று உலக செஃப் தினம் :)!

எந்த நிகழ்வானாலும் நினைவுகளை காலத்துக்கும் நிறுத்தி வைப்பதில் நிழற்படங்களின் பங்கு பிரதானமானது. அதை மனதில் கொண்டு சற்று கூடுதல் கவனத்துடன் மைய நிகழ்வை மட்டுமின்றி சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்துப் படமாக்குவது பலநாட்கள் கழித்தும் பார்க்கும் போது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையை நமக்குச் சொல்வதாக அமையும்.

#2

அலங்காரங்கள், தோரணங்கள், விருந்தினர்கள், மகிழ்வுடன் அளவளாவும் தருணங்கள், குழந்தைகள், அவர்களது ஆட்டபாட்டங்கள், தயாராகும் உணவு, பரிமாறப்பட்ட பந்தி, மேஜையில் வரிசைப்படுத்தப்பட்ட பதார்த்தங்கள், கேக் என சொல்லிக் கொண்டே போகலாம். [நடுவர் சுரேஷ்பாபு (கருவாயன்) அறிவிப்புப் பதிவில் காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் சிறந்த உதாரணங்கள்.] முக்கிய தருணங்களில் continous mode போடுவது ஒரு நொடியின் பாதியில் ஓர் அரிய உணர்வை சிறைப்படுத்தும் வாய்ப்பைத் தரலாம். இங்கே ஒரு பிறந்தநாள் நிகழ்வின் சில படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றாலும் உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை:)!

#3



#4

#5

#6 கால் முளைத்த ஊஞ்சல்
#7


இது வரை வந்த படங்களை இரசிக்க இங்கே செல்லலாம்.

உங்கள் படங்களை 20 அக்டோபர் 2013 நள்ளிரவு வரைக்கும் அனுப்பி வைக்கலாம்.

*** 

23 கருத்துகள்:

  1. படங்கள் அருமை,இன்று உலக செஃப் தினமா? புதிய தகவல்.

    பதிலளிநீக்கு
  2. தினமும் ஏதாவது ஒரு சிறப்பு நாள் ஆகி விடுகிறது இல்லை? படங்கள் அருமை. இரண்டாம் படம் பசியைத் தூண்டுகிறது!

    பதிலளிநீக்கு
  3. அனைத்துப் படங்களும் அற்புதம்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. எல்லாப்படங்களுமே கவனத்தை ஈர்க்கின்றன.

    அழகு நிகழ்வுகள். நம் வாழ்வின் முக்கிய தருணங்கள்.
    உலக செஃப் தினம்!!!
    இதுவரை தெரியாது. ஜூனியர் செஃப் பார்க்கிறீர்களா.அருமையான குழந்தைகள்.அருமையான உழைப்பு.

    பதிலளிநீக்கு
  5. @ஸ்ரீராம்.,

    சில விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நாட்கள் தேவையென்றும் தோன்றுகிறது.

    நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  6. அனைத்துப் புகைப்படங்களும் மிக அழகு!

    பதிலளிநீக்கு