வெள்ளி, 20 செப்டம்பர், 2013

புலி வருது.. புலி வருது..

நான் எடுத்த படங்கள் ஏழு, புலி பற்றிய சிறு குறிப்புகளுடன்...

#1

புலி, ‘பாந்தெரா தீகிரிஸ்’ (Panthera tigris) எனும் பூனையினத்தைச் சேர்ந்தது. பாந்தெரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியது.

பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா.

இந்தியா, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மியன்மர் பகுதிகளில் காணப்படுபவை வங்காளப் புலி அல்லது இராயல் பெங்கால் புலி (Panthera tigris tigris).

#2
உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானவை.

பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளன.
தற்காலத் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

விளையாட்டு அணிகளுக்குச் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் உள்ளது.

#3

நாலரை முதல் ஒன்பதரை அடிகள் வரை நீளமும் 300 கிலோகிராம் வரை எடையும் கொண்டவை.

நன்றாக நீந்த வல்லன.

#4
 உடலில் உள்ள வெள்ளை, ஆரஞ்சு வண்ணங்களும், கருப்பு நிறப் பட்டைப் பட்டையான வரிகளும், வெளிர் நிற அடிப்பகுதியும் நினைவுகூறத்தக்க முக்கிய சிறப்பம்சங்களாகும்.

#5

புலிகளின் இயற்கையான வாழிடங்களை அழிக்கப்படுவது, சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவது ஆகியன இவற்றின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.

அவற்றின் உடலில் இருந்து பல கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துகள் செய்யப்படுவதால், புலிகளின் தோல் தவிர அவற்றின் உடல்பாகங்களுக்காகவும் அவை வேட்டையாடப் படுகின்றன.

மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை ஊர் மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன.

#6.

பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன.

வேட்டையாடியதும் இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன.

ஒரே நேரத்தில் 20 கிலோ வரை உணவு உட்கொள்ள முடியும்.

#7

இந்தியாவில் புலிகளைக் காக்க கொண்டுவரப்பட்ட பிராஜக்ட் டைகர் (Project Tiger) திட்டத்தினால் புலிகளின் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்துள்ளது.
***

தகவல்கள்: இணையத்திலிருந்து..


37 கருத்துகள்:

  1. ப்புலிகளைப்பற்றிய
    தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பம்சங்கள், தகவல்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. புலிகளைப் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  4. போட்டோப் படங்கள் எடுப்பதில் புலியாக உள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள். ;)

    தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. 20 கிலோ வரை சாப்பிடுமா ? புதிய தகவல் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  6. புலிகள் வெகு அழகு. என்ன ஒரு கம்பீரம்.!!படத்தில் இருப்பதால் பயப்படாமல் பார்த்து ரசித்தேன்.
    அப்படியே எழுந்து வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை வேறு:)

    பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. புலிகளைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றிக்கா...படங்கள் கொள்ளை அழகு!!

    பதிலளிநீக்கு
  8. படங்களும் அருமை! பகிர்வும் அருமை!

    பதிலளிநீக்கு
  9. புலிகள் படம் மிக அழகு.
    புலிகளைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான படங்கள்.... தகவல்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @கோவை நேரம்,

    படங்களில் வாட்டர் மார்க் செய்திருக்கிறேனே:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @வல்லிசிம்ஹன்,

    நன்றி வல்லிம்மா:). அகழிக்கு இந்தப் பக்கம் நின்று பயப்படாமல் எடுத்தேன் நானும்:)!

    பதிலளிநீக்கு
  13. சூப்பர் படங்கள். தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  14. படமும்தகவல்களும் அருமை.அறிந்திறாத தகவலகள்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல தகவல் நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.மேடம்/

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  17. அருமையான புகைப்படங்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு