வியாழன், 7 மார்ச், 2013

இயற்கையின் வண்ணங்கள் - மார்ச் PiT போட்டி - மகளிர் தின வாழ்த்துகள்!


நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வண்ணங்களால் உலகை அலங்கரித்திருக்கிறது இயற்கை. அந்த வண்ணங்களைதான் சட்டமிடப் போகிறீர்கள் இந்த மாதப் போட்டிக்கு.

[பெரிதாகக் காட்டியிருக்கும் படங்கள் ஆறும், முன்னர் முத்துச்சரத்தில் பகிராதவை.   கிளிகள் தவிர்த்து மற்றவை கபினியில் எடுத்தவை. சிறிய அளவுப் படங்கள் மேலும் மாதிரிக்காக.]

 #1 புல்லும் பூமியும் நீரும்


பளிச்சிடும் நிறங்கள் எத்தனை எத்தனை பூக்களில்..

#2 முதன்மை வண்ணங்கள் மூன்றில் இரண்டான சிகப்பும் மஞ்சளும்:

#3 மூன்றாவது நிறம் ஊதா..


#4 மனதைக் கட்டிப் போடும் ரோஜா வண்ணம்

#5
கொஞ்சும் அழகுக் கிளிகள்,
அழகு கொஞ்சும் வண்ணங்களில்..

வான், மலை, நீர், நெருப்பு, பூமி ஆகியவற்றோடு பறவைகள், விலங்குகள், மீன்கள், பட்டாம்பூச்சிகள், தட்டான்கள், மலர்கள், காய்கள், கனிகள், இலைகள், மரங்கள் என விருப்பம் போல் நீங்கள் தேர்வு செய்திட வசதியான தலைப்பைதான் வழங்கியிருக்கிறார் நடுவர் ஐயப்பன் கிருஷ்ணன்.


மேலும் மாதிரிப் படங்களுடன் போட்டி அறிவிப்பு இங்கே. விதிமுறைகள் இங்கே

இயற்கையின் எழில் வண்ணங்களை அள்ளிக் கொண்டு வர ஆரம்பித்து விட்ட படங்கள் இங்கே. உங்கள் படங்களை அனுப்பக் கடைசித் தேதி 20 மார்ச்.
**
#6
 அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

***

22 கருத்துகள்:

  1. வண்ணக் கலவைகள் மனத்தைக் கவர்கின்றன. முதல் படம் கிழிந்த இந்தியா மேப் போல இருக்கிறது! எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்ப்... ஸ்ரீராம் சார் சொன்னதும் உண்மை...

    பதிலளிநீக்கு
  3. அந்தக் கிளிகள் கொத்துகின்றனவோ இல்லையோ... படங்கள் மனசைக் கொத்திக் கொண்டன. அதிலும் அந்த ரோஜாப்பூ...! வைத்த கண்ணை எடுக்க வெகு நேரமாயிற்று! உங்களுக்கு என் மனம் நிறைந்த மகளிர்தின நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. மகளிர்தின வழ்த்துகள் ராமலக்ஷ்மி.
    இங்கு வரும் அனைவருக்கும் இந்த வாழ்த்துகள் பொருந்தும். அவரவர் வீட்டில் இருக்கும் மகளிருக்கு இந்த வாழ்த்துகள் வந்து சேருகின்றன,.


    படங்கள் அனைத்தும் மனத்தை மகிழ்விக்கின்றன ராமலக்ஷ்மி.
    மிக அருமை. ஓ அந்தப் பூவண்ணம் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு
  5. கலக்கலான வண்ணக்கலவைகள்.. ஒவ்வொண்ணும் அள்ளிட்டுப்போகுது.

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இயற்கையை ரசிக்க அழைப்பு வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  7. வண்ணக்கலவைகள் எல்லாம் அழகு.
    மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. அனைத்து படங்களும் மிக அழகு.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. @சே. குமார்,

    வாங்க குமார். உறுப்பினர் குழுவில் இருப்பதால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. நண்பர்களுக்கு நினைவூட்டலாக இப்பகிர்வு:). நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.,

    இதற்கு அடுத்து எடுத்த படம் முழுமையான இந்திய தீபகற்ப வரைபடம்:)! அதையும் பிறிதொரு சமயம் பகிருகிறேன். இந்தப் படம் மண் வண்ணம், புல்லின் பசுமையைக் காட்டுவதற்காக. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. @திண்டுக்கல் தனபாலன்,

    நன்றி தனபாலன். இந்தியாவை முழுசாவும் பார்த்திடலாம் விரைவில்:).

    பதிலளிநீக்கு
  12. @பால கணேஷ்,

    படங்களை ரசித்ததற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கணேஷ்:).

    பதிலளிநீக்கு
  13. @RAMVI,

    பதிவு நண்பர்களுக்கு நினைவூட்டும் பகிர்வு. நன்றி ரமா:)!

    பதிலளிநீக்கு
  14. அருமையான படங்கள். போட்டியில் பங்குபெறும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  15. கண்ணைக் கவரும் படங்கள் அனைத்துமே அருமை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    இந்தியா தீபகற்ப படத்தை எதிர்பார்க்கிறோம் விரைவில்...

    பதிலளிநீக்கு
  16. @கோவை2தில்லி,

    நன்றி ஆதி. நண்பர்களுக்கான நினைவூட்டலாக இந்தப் பதிவு.

    தீபகற்பப் படம் விரைவில் பகிருகிறேன்:)!

    பதிலளிநீக்கு