செவ்வாய், 11 டிசம்பர், 2012

மல்லிகை மகளில்..- வனத்தில் திரிந்த வாழ்த்துக் குரல்!

டிசம்பர் 2012, மல்லிகை மகளில்..
நன்றி மல்லிகை மகள்!
***

கானகத்தைச் சுற்றி சுற்றி வருகிறது
எவருக்கும் உரித்தானதற்ற குரல்..
நதியினில் குளித்துப்
பாறைச்சூட்டில் உலர்ந்து
மரக்கிளைகளில் ஊஞ்சலாடி
மலர்களில் உறங்கி
மழையினில் நனைந்து
எல்லோருக்கும் பொதுவான
வாழ்த்தினைச் சுமந்து.

வனங்களை நோக்கி
நகரங்கள் நகர நகர
வீழ்கின்றன மரங்கள்
கட்டிடக் காடுகளுக்கு
இடம் கொடுக்கவும்
சாமான்களாகி வீடுகளை
அலங்கரிக்கவும்.

வாழ்த்தற்றக் காற்றைச்
சுவாசிக்கப் பிடியாமல்
சீற்றத்துடன் இயற்கை
எட்டி உதைக்க,
உருண்டு கொண்டிருக்கிறது
உலகம் எதையும் உணராமல்.

காய்ந்த நதிப்பரப்புகளின்
வெடிப்புகளிலிருந்து
விம்மலாக வெளியேறுகிறது
நெறித்துப் புதைக்கப்பட்ட குரல்..
வீடிழந்த பறவைகள்
உறவிழந்த விலங்குகள்
ஈரமிழந்த மீன்கள்
எண்ணற்ற ஜீவராசிகள்
விருட்சங்களுக்கு
உரித்தானதாக.
***


33 கருத்துகள்:

  1. காடுகளை அழித்துக் கட்டிடக் காடாக்கும் விளைவைத்தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

    மல்லிகை மகளில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகளை கோர்த்து என்னாழகாய் கவிதை பின்னி இருக்கின்றீர்கள்!!வாழ்த்துகக்ள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லாயிருக்கு.....
    அதுவும் மல்லிகை மணத்துடன்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை மிக மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள், இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். மனம் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...மரங்கள் காணாமல் போக கல் காடுகளில் கற்களாய்த்தான் இருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  7. மரங்களை அழித்ததன் விளைவால் இதோ மழையை இழந்து தவிக்கிறோம்.இன்னமும் காடுகளை விடுவதாக இல்லை இயற்கையும் எவ்வளவு காலம்தான் பொறுக்கும்? அருமையான காலக் கவிதை

    பதிலளிநீக்கு
  8. இயற்கையின் வேதனைக்குரல் அருமையாக வெளிப்படுகின்றது.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. மனதைத் தொட்ட கவிதை.

    இயற்கையை அழித்துக் கொண்டே போனால் முடிவு தான் என்ன.....

    பதிலளிநீக்கு
  10. தோழியின்
    வணக்காதலை வரவேற்கிறேன்

    தங்கள் கவிதை எனக்கு
    மேத்தாவின் கவிதயோன்றை நினைவு படுத்தியது

    நகரம்
    --------
    பறவைகள் அடையும்
    பெருமரங்கள் வீழ்ந்து
    மனிதர்கள் அடையும்
    கல்மரங்கள் முளைத்த
    காடு .....

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    இயற்கையை அழித்து எதை நோக்கி போகிறோம் என்பதை உணராமல் இருக்கிறான் மனிதன்.

    எதைத் தொட்டாலும் தங்கமாய் ஆக வேண்டும் என்று கேட்ட பேராசை பிடித்த மன்னனின் கதை மறந்து விட்டது போலும்.

    பயிர் நிலங்கள் பணப் பயிராய் மாறி வருவதைப் பார்த்தால்!

    பதிலளிநீக்கு
  12. @A.muthamil Tamil,

    பகிர்ந்த கவிதைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @கோமதி அரசு,

    உண்மைதான் கோமதிம்மா.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள். அருமையான கவிதையை படைத்திருக்கிறீர்கள்.

    இயற்கையை அழித்து கொண்டே போனால் என்ன ஆகப் போகிறதோ.....:((

    பதிலளிநீக்கு