வியாழன், 27 டிசம்பர், 2012

மைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலைஞர்கள் : பாகம் 2


யானைகள் வழிநடத்திய, “ 402_வது மைசூர் தசரா ஊர்வலக் காட்சிகள் - (பாகம் 1)இங்கே.

 “பலமுறை மைசூர் சென்றிருந்தாலும் இந்த விஜயதசமி நாளில் சென்றதும் 402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் யானைகளையும் கலைஞர்களையும் படமாக்கியதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து போனது.” -'போவோமா ஊர்கோலம்!' குங்குமம் தோழி, என் ஜன்னலில்.. இங்கே.
 
இனி.. பாகம் 2!
படங்கள் பதினெட்டுடன் ஒரு பகிர்வு:

# 1.
சரா ஊர்வலம் அரண்மனையில் தொடங்கி ஏன் பன்னி(Banni)  மண்டபம் சென்று முடிவடைகிறது என்பதற்கும் ஒரு வரலாற்றைச் சொல்லுகிறார்கள் இதிகாசத்திலிருந்து.
மகாபாரத்தில் பன்னி மரமானது பாண்டவர்கள் தங்களது ஒருவருட அஞ்ஞாத வாசத்தின் போது ஆயுதங்களை ஒளித்து வைக்கப் பயன்படுத்தினார்களாம். பின் வந்த காலங்களில் அரசர்கள் வெற்றி வேண்டி இந்த மரத்தை வழிபட்ட பின்னரேப் போருக்குப் புறப்படுவார்களாம். அதனாலேயே இப்போதும் விஜயதசமி இரவில் தசராக் கொண்டாட்டம் பன்னி மண்டபத்தில் தீப்பந்த வெற்றி ஊர்வலத்துடன் (அது குறித்து அடுத்த பாகத்தில்) முடிவடைவது வழக்கமாக உள்ளது. பின்னர் விசாரித்தபோது மைசூரில் மட்டுமில்லாமல் பெங்களூரிலும் விஜயதசமியன்று பன்னி மர வழிபாடு உண்டென அறிய வந்தேன். பன்னி இலைகள் ஒன்றிரண்டை அன்று வீட்டுக்குக் கொண்டு வந்து பத்திரப்படுத்துவதும் இங்கிருப்பவர் வழக்கமாக உள்ளது.

116 கலைக்குழுவினர் உற்சாகமாக ஆடிப்பாடிச் செல்ல நடுநடுவே புராணங்களைச் சித்தரிக்கும் சிலைகளுடனான 36 வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. கிராமிய மற்றும் கலாசார நடனங்களில் பங்கேற்றிருந்த கலைஞர்களின் எண்ணிக்கை 3000 என்றன செய்திகள். கோலாட்டம், கம்சாலே, கேலுகுதிரே, கருடகொம்பே, லம்பானி, பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, நகரி என நடனங்களின் பட்டியல் நீண்டாலும் ஒருசில நாட்டியங்களையே என்னால் அடையாளம் காண முடிந்தது. வருடத்துக்கு ஒருமுறை வந்த வாய்ப்போ, திறமையைக் காட்ட சந்தர்ப்பமோ, கற்ற கலைக்குச் செலுத்தும் மரியாதையோ ஏதோ ஒரு உற்சாகம் கலைஞர்களிடத்தில். வாங்க இரசிக்கலாம்.

#2



#3

#4
“நல்லவேளை, என்னை டான்ஸ் ஆடச் சொல்லலை!”



#5


#6

மைல் கணக்கில் நடந்து வந்த கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் காலணி அணிந்திருக்கவில்லை. பள்ளிச் சிறுவர்களும், வயதானவர்களும் கூட.

#7


#8


#9 உற்சாகமாக நான்கைந்து க்ளிக் வரை போஸ் கொடுத்துவிட்டு ‘போகட்டுமா, போதுமா?’ எனக் கேட்டுச் சென்ற கலைஞர்..



#10  உடம்பு முழுக்க அரிதாரம்.

#11.  என்ன, காத்திருக்கணுமா:(?


#12. ‘இந்தியன்’ தாத்தா..
'லஞ்சம் ஒழிந்த பாடில்லை.. அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்..!’

#13. பயணத்தில் துணையாக..
‘ஒரு கை பார்க்க நானும் வர்றேன்..’

#14. கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்..
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் ‘நலமா?’ என்றாராம்.

#15.


#16.


#17


#18

இந்தக் கொட்டுகளிலும் மத்தளங்களிலும்தான் எத்தனை வகைகள்? அவற்றோடு பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், மயிலாட்டம் என மேலும் சில சுவாரஸ்யக் காட்சிகளுடன் அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்:)!
***












20 கருத்துகள்:

  1. ஒவ்வொண்ணும் செம அழகு. வன்னி மரத்தைத்தான் பன்னி என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். கரெக்டா?.. விளக்குங்களேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. அமைதிச்சாரல் சந்தேகம்தான் எனக்கும்! வன்னி மரமா, பன்னி மரமா?

    படங்கள் அருமை. குறிப்பாக தாத்தா பாட்டி படம்.

    பதிலளிநீக்கு
  4. @அமைதிச்சாரல்,

    நன்றி சாந்தி. ஆம். தமிழில் வன்னி. கன்னடத்தில் Banni. அந்த மைதானத்தையும் Banni மண்டப் என்றே குறிப்பிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம். இரண்டும்தான். தமிழில் வன்னி!

    பதிலளிநீக்கு
  6. படிக்கும் போதே பன்னி மரமா என்று மனதில் உறுத்தியது. இங்கே பின்னூட்டத்தில் விளக்கம் கிடைத்தது. படங்கள் ஒவ்வொன்றும் அருமை என்று தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன... உங்கள் கை வண்ணமாயிற்றே! அதிலும் அந்த தாத்தா பாட்டியும், உடல் முழுவதும் வண்ணம் பூசியவர்களும்...! கண்ணைப் பறிப்பதுடன் மனசையும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
  7. பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மேடம்!

    தங்களின் பிறந்தநாள் 'ட்ரீட்'-ஆகா மேற்கண்ட படங்களை எங்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.
    உங்கள் காமிரா கண்கள் எங்களுக்கு நல்ல விருந்து அளித்து விட்டது.
    அருமை.(உங்கள் காமிராவும் தான்)

    பதிலளிநீக்கு