புதன், 28 நவம்பர், 2012

தூங்கும் செம்பருத்தி.. சிரிக்கிற செவ்வந்தி..


#1 செண்டுப் பூ



மாட்டுச் செவ்வந்தி என்றும் அழைக்கப்படுகிற இந்தச் செண்டுப்பூவை அறிவோம்.

தூங்கும் செம்பருத்தியை?

அறிவோமே.. என்பவர்கள் ரசித்திட சில படங்கள்.

தெரியாதே.. என்பவர்களுக்காக கூடவே சில தகவல்கள்.

மெக்ஸிகோவின் வெப்ப மண்டலப் பகுதியில் அதிகம் காணப்படுகிற இப்பூக்கள்  “ Sleeping Hibiscus ” எனப் பரவலாக அறியப்படுகின்றன. மலராத செம்பருத்தியைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கிறது.

#2 தூங்குது செம்பருத்தி.. தொந்திரவு செய்யாதீர்..


நல்ல சூரிய வெளிச்சம் தேவைப்படுகிற வகை. நிழலில் வளர்ந்தால் மலர்கள் சீக்கிரமாய் உதிர்ந்து விடுகின்றன.  அலங்காரத்துக்காகவே பெரும்பாலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

#3 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..!


2 முதல் 3 மீட்டர் உயரக் குறுஞ்செடியில் பூக்கிற இவற்றின் இலைகள் 2 முதல் 6 அங்குல அளவில் தடிமனாக வெல்வெட் போல இருக்கின்றன. பூக்கள் 2 முதல் 3 அங்குல நீளத்தில்.

ஆழ்சிகப்பு வகையை இலங்கையில்  ‘மிளகாய் செவ்வரத்தை’ என்கிறார்கள். Firecracker Hibiscus, Wax mallow, Turk's-cap; German Wachsmalve இதன் வேறு பெயர்கள்.

சிகப்பில் மட்டுமின்றி இளஞ்சிகப்பிலும் (Pink) மலர்கின்றன.

#4 என்ன மென்மை!

 
காற்றும் கூட ஓங்கி வீசத் தயங்கும் போலும் 
தூங்கும் இவற்றின் அழகில் உள்ளம் தொலைத்து:)!
***

‘பூவாய் மலர்ந்து சிரிக்கிற’ உவமையை உணர வைப்பதாய்..


 #5 செவ்வந்தியின் சிரிப்பு

 ***

45 கருத்துகள்:

  1. இரவிலும் தூங்கும்போதும் செம்பருத்தி அழகே அழகு

    பதிலளிநீக்கு
  2. மலர்களிலே பல நிறம் கண்டேன் அத்தனையும் அழகு

    பதிலளிநீக்கு
  3. பூத்துச் செடியில் இருப்பதைப் பார்ப்பதைப் போன்று
    அத்தனை அழகு
    மனம் கொள்ளை கொண்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ராமலக்ஷ்மியின் அழகு ரசனைக் கேற்ற மாதிரி மெல்லிய பூக்களும் விருந்து படைக்கின்றன.
    வெகு அருமை மா.

    பதிலளிநீக்கு
  5. தலை கீழா தொங்குற மாதிரி இருக்கும் பூக்கள் படம் செமையா இருக்கு

    பதிலளிநீக்கு
  6. இந்த மாதிரி பூக்களைப் பார்த்திருக்கிறேன் நிமிர்ந்த நிலையில்.பெயரும் ,படமும் புதிது. கொள்ளை அழகு.நன்றி

    பதிலளிநீக்கு
  7. அழகான போட்டோகிராபி.. பூக்களின் அழகு குறையாமல் படம் பிடித்திருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  8. சூப்பரா இருக்கு. பார்க்கும்போதே மனசுல ஒரு சந்தோஷம் வருது ராமலக்‌ஷ்மி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மனதைப்பூப்பூக்க வைக்கும் அழகான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. எல்லாப் படங்களுமே அழகு. மெலிசான மலர் இன்னும் அழகு. இருவரிக் கவிதை ஜோர்.

    பதிலளிநீக்கு
  11. உங்களின் ரசனையும் பூவின் அழகை போலவே இருக்கிறது.உங்களின் கவிதை அதை மேலும் அழகுபடுத்துகிறது

    பதிலளிநீக்கு
  12. மிக அழகான படங்கள்!
    இச் செம்பருத்தியை இலங்கையில் "மிளகாய்செவ்வரத்தை" எனவே அழைப்போம். இவை விரிவதேயில்லை
    அத்துடன் கீழ்நோக்கியே பூ மிளகாய் போல் இருப்பதால் இக் காரணப்பெயர் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. வாவ்..அழகு.
    செண்டுப் பூவும், செவ்வந்தியும் வேறு வேறா? வளர்க்க ஆசை..எது இலகுவில் பூத்துக் குலுங்கும் எனச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. @கவியாழி கண்ணதாசன்,

    எல்லா நேரமும் இதே நிலையில் காட்சியளிக்கிற மலர்கள் இவை:)! கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @மதுமதி,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @யோகன் பாரிஸ்(Johan-Paris),

    ஆம், வடிவம் மிளகாய் போல்தான் உள்ளது:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @எம்.ரிஷான் ஷெரீப்,

    செண்டும் (மாட்டுச்) செவ்வந்தியும் ஒன்றே. செண்டு இரண்டடி உயரச் செடிகளில் எளிதாகப் பூத்துக்குலுங்கும். இந்த வகை செம்பருத்திக்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவைப்படும்.

    நன்றி ரிஷான்:)!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  19. மலர்கள் எல்லாம் கண்ணை கவர்கின்றன.நாங்களு இதை மிளகாய் செம்பருத்தி என்று தான் சொல்வோம். எங்கள் வீட்டில் சிவப்பு கலரில் இருந்தது சிவப்பு மிளகாய் செம்பருத்தி என்று சொல்வோம். வெள்ளை கூடு கட்டி எறும்புகள் வீணடித்து விட்டன செடியை.

    பதிலளிநீக்கு
  20. @கோமதி அரசு,

    கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  21. ஈடு இணையட்ற இயற்கையின் ஓவியங்கலின் அழகு பதிவிட்டமைக்கு நன்றி சுரேந்திரன்

    பதிலளிநீக்கு