சனி, 6 அக்டோபர், 2012

மழை - கமலா தாஸ் கவிதை (1) - அதீதத்தில்..



களையிழந்த அப்பழைய வீட்டைவிட்டு வந்துவிட்டோம்
நான் வளர்த்த நாய் அங்கு மரித்துப் போனது
அதைப் புதைத்த இடத்தில் நட்ட ரோஜாச் செடி
இரண்டு முறை பூத்திருந்த வேளையில்
மேலும் வேதனையைப் பொறுக்க மாட்டாமல்
வேரோடு அதையும் பிடுங்கி எடுத்து
வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு
கிளம்பி விட்டோம்..
எங்கள் புத்தகங்களுடனும்
துணிகளுடனும் நாற்காலிகளுடனும்.
ப்போது புதிய வீட்டில் வாழ்கிறோம்
இங்குள்ள கூரை ஒழுகுவதில்லை
ஆனால் இங்கு மழை பெய்யும் போது
நனைகிற அந்த வெற்று வீட்டையேப் பார்க்கிறேன்.
கேட்கவும் செய்கிறேன்..
என் நாய் இப்போது தனித்து உறங்கும் இடத்தில்
விழுகிற மழையின் சத்தத்தை.
ஆங்கில மூலம்:
“The Rain”  By Kamala Das
[From Only The Soul Knows How To Sing]
படம் நன்றி: இணையம்
அதீதம் அக்டோபர் முதலாம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.

23 கருத்துகள்:

  1. மழையின் சத்தம் மனம் வரை கேட்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமை. சோகத்தை அழகாகச் சொல்கிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  3. இறுதி வரிகள் சரியான முத்தாய்ப்பாக அமைந்திருந்தன.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா! மழைச்சாரல், சில வரிகள் பழைய நினைவுகளை கொண்டுவந்தது..

    பதிலளிநீக்கு


  5. என் நாய் இப்போது தனித்து உறங்கும் இடத்தில்
    விழுகிற மழையின் சத்தத்தை.

    கமலாதாஸ் அவர்கள் வேதனையை நம்மையும் உணர செய்கிறார்.
    அருமையான கவிதை.
    பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான மொழியாக்கம் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை.
    பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமை டா. மழைச் சத்தம் காதை அறைகிறது.

    பதிலளிநீக்கு
  9. மழைச் சத்தம் இனிமை என்று நினைத்தேன்.
    இந்தக் கவிதையைப் பார்த்துப் படித்தபிறகு என்னவெல்லாமோ நினைவுக்கு வருகிறது. அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு