ஞாயிறு, 17 ஜூன், 2012

படபடக்கும் பட்டாம்பூச்சிகள் - அவுட்டோர் படப்பிடிப்பு

அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கேமராப் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடிக்கலாமெனக் குஷியாகக் கூட வந்த கேமராவுக்குத் தெரியவில்லை அப்போது, அங்கே தனக்கொரு புதையல் காத்திருப்பதை.

# 1. The Common Jezebel (Delias eucharis)
பட்டாம் பூச்சிகளைப் படமாக்க வேண்டுமெனக் கொண்டிருந்த அதன் நீண்ட நாள் எண்ணம் எதிர்பாராமல் நிறைவேறியது:)! சரி, பட்டாம்பூச்சி என்றாலே படபடக்கதானே செய்யும்? அப்புறம் ஏன் அப்படியொரு தலைப்பு? சொல்லுகிறேன்.

அழகுச் சோலைக்குள் நான் நுழைந்ததோ மாலை நேரம். ஆனால் பட்டாம் பூச்சிகளைப் படம் பிடிக்க அதிகாலை நேரமே உகந்ததாம். புலர்ந்தும் புலராத பொழுதில் சோம்பல் முறித்தபடி மந்தகாசமாக இருக்குமாம். அந்த நேரத்தில் நுண்ணிய விவரங்களோடு அவற்றைப் படமாக்க ட்ரைபாட் வைத்து கூட எடுக்கலாமென்றால் எப்படி அசையாமல் இருக்குமென்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். அசைவற்று சிறகு பிரியாமல் செடியோடு செடியாக மறைந்து கிடப்பவற்றைக் கவனமாகத் தேடினாலே கண்ணுக்கு அகப்படும். பிறகு சூரியனின் கதிர் பரவ ஆரம்பிக்கையில் மெல்லத் தங்கள் சிறகுகளை விரித்துச் சூடேற்றிக் கொள்ளுமாம். இரவெல்லாம் காயப் போட்ட வயிற்றை ரொப்பிக் கொள்ளப் பூவிலே வெகுநேரம் தேன் உறிஞ்சியபடி போஸ் கொடுக்கும். அப்போ கேமராக்களுக்குக் கொண்டாட்டம். மற்ற நேரங்களில்...? கொஞ்சம் திண்டாட்டம்தான்:)!

இந்தத் தகவல் எல்லாம் படம் பிடித்து வந்த பிறகு, எடுத்த வண்ணத்துப் பூச்சிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள இணையத்தின் உதவியை நாடிய போது வந்து விழுந்தவை.

உலகில் மொத்தம் 20 ஆயிரம் வகைப் பட்டாம் பூச்சிகள் இருக்க, எனக்கு அன்று தரிசனமும் கரிசனமும் காட்டின மொத்தமே இருந்த மூன்று பூச்சிகள். மூன்றுமே மாலை ஐந்து மணி வெயிலில் மலருக்கு மலர் மகா சுறுசுறுப்பாகத் தாவித் தாவிப் பறந்து கொண்டே இருந்தன. துரத்தித் துரத்தி எல்லாம் எடுக்கவில்லை! அவை பாட்டுக்கு ஆனந்தமாக தேனுண்டு திளைக்க, பறந்த இடமெல்லாம் தொடர்ந்தோடி ஓடி எடுத்திருக்கிறேன்:)!

# 2 பூந்தேனில் மகிழ்ந்து..
ஸ்தம்பிக்க வைக்கும் அழகுத் தீட்டலாக அமைந்த வண்ணங்கள் இறைவன் பறவைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவற்றுக்கு வழங்கிய வரம். பூக்களோடு பூக்களாக இருக்கும் போது எதிரிக்கு இவை பூவா பூச்சியா என எளிதில் இனம் காணவே முடியாதென்பது எத்தனை உண்மை பாருங்கள்!

# 3 பூவுக்குள் ஒளிந்திருக்கும்...

இவை எல்லாமே ஒன்று முதல் ஒன்றரையடி உயரத்தில் கம்பளமாக பூங்காவெங்கும் விரிந்து கிடந்த செடிகள்.

ஜெஸபெல் சாருக்கு (ஆம், இவங்க மேடத்துக்கு நிறம் இத்தனை அழுத்தமாக இருக்காதாம்) எப்பவுமே வெள்ளைப் பூக்களின் தேன்தான் பிடித்திருக்கிறது. மஞ்சள் பூக்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதற்கு நேர் மாறாக இருந்தார் கொஞ்சம் தள்ளி மஞ்சள் மலர் மேல் ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என உட்கார்ந்திருந்த மோனார்க் (ராசா). வெள்ளைப் பூக்கள் இவருக்கு அலர்ஜி. இதெல்லாம் அவதானித்ததில் அறிந்தவை.

#4 Monarch Butterfly (Danaus plexippus)
இவரை வைஸ்ராய் வண்ணத்துப் பூச்சிகளோடு குழப்பிக் கொள்பவர்கள் உண்டு. வைஸ்ராய்க்கு இருப்பது போல் அழுத்தமான பக்கவாட்டுக் கருப்புக் கோடுகள் இவருக்குக் கிடையாது. மேலும் இவருக்கு வெளிப்புறம் மிதமான வண்ணத்திலும், உட்பக்கம் அழுத்தமான ஆரஞ்சிலும் அமைந்திருக்கும்.‘அப்படியா? எங்கே பார்க்கலாம்’ எனத் தடதடவெனப் பக்கத்தில் போய் விடாதீர்கள். போனால் இப்படிதான் சர்ர்ர்ர்ர்ரெனப் பறந்து விடும்.

# 5 மெல்லத் திறக்குது சிறகு


வாங்க கொஞ்சம் பொறுமையாப் பின் தொடருவோம். விட்டுப் பிடிப்போம்.

# 6 தரிசனம்
இப்பத் தெரியுது பாருங்க, உள்பக்கத்தின் அழுத்தமான ஆரஞ்சு வண்ணம்.

இன்னும் கொஞ்சம் கரிசனம் வச்சு அதே பூவில் கிர்ர்ர்னு ஒரு வட்டமடிச்சு, அகல விரிச்சுது சிறகுகளை, அடடா! என்ன அழகு!

# 7 விரித்து வைத்தப் புத்தகம்
இவரோட Wing span மூன்றரையிலிருந்து நாலரை அங்குலம்.

இவரும் சரி, ஜெசபெலும் சரி ஒருசில நொடிகளாவது உட்கார்ந்திருந்தார்கள். தேனை ருசித்து இழுக்கையில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். ஆனா க்ரிம்சன் ரோஸ் அப்படியில்லை. என்னை ரொம்பவே ட்ரில் வாங்கிட்டாரு:(!

# 8 Crimson Rose(Atrophaneura hector) - Red bodied Swallowtails


# 10& 11 ட்ரில் மாஸ்டர்


எந்தப் பூவிலும் ஓரிரு நொடிக்குமேல் உட்காரவில்லை. தேனை உறிஞ்சும் போது என்னதான் பரவசமோ, இல்லே அவசரமோ சும்மா சிறகுகளைப் படபட படபடவென இப்படி அடித்துக் கொண்டே இருந்தார். அதனால் தெளிவாக இவரைப் பதிய முடியவில்லை. இவரின் போக்கு பிடிபட்டதும் ஷட்டர் ஸ்பீட் அதிகரித்து எடுக்க முயன்றேன். அதற்குள் உயரப் பறந்து மறைந்து விட்டார். போகட்டும், இன்னொரு முறை மாட்டாமலா போய் விடுவார்:)?

# 12 கைவிசிறி


விதம்விதமான வகைப் பட்டாம்பூச்சிகளைப் படமாக்க அவற்றிற்கென்றே உரிய பண்ணைகளுக்குச் செல்லலாம். பெங்களூரிலும் கூட உள்ளது. பனர்கட்டா தேசியப்பூங்காவையொட்டி ஆறு வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சிப் பண்ணை. செல்லத் தோன்றும் வேளையில் “இப்போ சீசன் இல்லியே” என்பார்கள் யாராவது. அப்படியே தள்ளிப் போய்விட்டது. உங்களில் பலர் சென்றிருக்கவும் கூடும். இந்த வருடமாவது போக வேண்டும். அங்கே வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் நிறைய பார்க்க முடியும் என்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

உலகின் எல்லாப் பாகங்களிலுமே குளிர்காலத்தில் பட்டாம்பூச்சிகள் காலை பத்து மணி வரையிலுமே மந்தகாசமாய்தான் இருக்கும் என்பதும் ஒரு காரணம். இயற்கையான சூழலில் அவை பராமரிக்கப்படும் aviary-யினுள் ட்ரைபாடையும் சில பண்ணைகள் அனுமதிப்பதுண்டு. எந்த மலரில் எந்தப் பின்னணியில் எந்தக் கோணத்தில் எந்த வகைப்பூச்சி வேண்டுமோ இந்த மெகா கூண்டுக்குள் வாய்ப்புகள் அதிகம்.

பூங்காவோ, வீட்டுத் தோட்டமோ, பண்ணையோ எங்கேயானாலும் சரி பொறுமை ரொம்ப அவசியம். சில பூச்சிகள் நமக்கு ஒத்துழைக்கும். சில க்ரிம்சன் போல நம் ஃப்ரேமுக்குள் அடங்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். ஒரு அரைமணி நேரம் அவதானித்தாலே நமக்குப் புரிந்து விடுகிறது ஒவ்வொரு வகையின் போக்கும் எப்படியானது என்பது. ரொம்ப அருகில் மேக்ரோ க்ளோஸ் அப் லென்சுகள் உபயோகித்து எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. யாராவது முயன்று வெற்றி பெற்றிருந்தால் சொல்லலாம். நான் 200mm உபயோகித்துதான் எடுத்தேன். பூச்சிகளின் உடற்கூறு (anatomy) தெளிவாய் தெரியற மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் எப்போதும்.

முடிவாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். எடுத்த பூச்சிகளை அடையாளம் காணுதல் (Identification)! இணையம் இருக்கையில் இதற்கு மலைக்க வேண்டியதே இல்லைதான். இதற்கென பல தளங்கள் இருந்தாலும் சரியா நாம எடுக்கிற பூச்சியை அடையாளம் காட்டுவதாய் இருப்பதில்லை அவை. பூச்சியின் உடலில் பிரதானமாக இருக்கிற வண்ணத்தில் ஆரம்பித்து எல்லா நிறங்களையும் வரிசைப்படுத்தி, butterfly என முடித்து கூகுள் ஆண்டவரிடம் படங்களைக் கேளுங்க. நாம ஆரஞ்சு என நினைப்பது அங்கே சிகப்பாகப் பதிவாகியிருக்கலாம். ஒத்த படம் கிடைக்கும் வரை மாற்றி மாற்றிப் போட்டுத் தேடுங்க. சட்டுன்னு பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் மாறுபட்டு இருக்கும் சில வகைகள். மொனார்க், வைஸ்ராய் அப்படிதான். அதனால் படத்தை மட்டும் பார்த்து விட்டுப் பொத்தாம் பொதுவாய் முடிவு செய்யாமல் கொஞ்சம் நம்ம விக்கி அக்கா (wikipedia) தரும் விவரங்களையும் வாசிச்சுப் பாருங்க.

சரி, மனம் கவர்ந்த படம் எதுவென நேரமிருப்பவர் சொல்லிச் செல்லலாமே:)!
***

பி.கு:
பட்டாம்பூச்சிகளைப் படமாக்கும் ஆசையை ஆசையாகவே வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதை நிறைவேற்றும் ஆர்வத்தையும் வேகத்தையும் இந்தப் பதிவு தரும் எனும் ஆசையுடன் இப்பதிவு PiT தளத்திலும்: http://photography-in-tamil.blogspot.in/2012/06/blog-post.html
***

54 கருத்துகள்:

  1. எதை விடுவது எதைச் சொல்வது, எல்லாமே அழகு. 7-ம், 12-ம் ரொம்பவே பிடித்தது....

    பதிலளிநீக்கு
  2. //மனம் கவர்ந்த படம் எதுவென//

    ஏனிந்த சோதனை எங்களுக்கு?? :-))))

    பதிலளிநீக்கு
  3. உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. ஷாட் ஞானம் சிறிது ஈவது.. :)

    பதிலளிநீக்கு
  4. பட்டாம்பூச்சிகள் போலவே மிகவும் அழகான பதிவு.

    புகைப்படங்கள் நல்ல பளீச் .... பளீச்.

    விளக்கங்களும் அருமை.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கூட்ட மலர்களில் சிறியதாக அமர்ந்திருக்கும் வண்ணத்துப் பூச்சியைத் தனிப்படப் பெரிதாக்கி அழகாகக் காட்டியிருப்பது சிறப்பு. எனக்கெல்லாம் வராத கலை!

    மெல்லத் திறக்கும் சிறகின் வண்ணங்கள் கிராமத்துப் பெண்ணைப் போல எளிமையான அழகு. கவர்ந்து இழுக்கிறது
    ஜெஸ்பெல் வெளுத்திருந்தாலும் மென்மையான அழகு.
    ட்ரில் மாஸ்டர் நவீன யுவதி.

    பதிலளிநீக்கு
  6. stunning photography..!

    தங்களின் போட்டோகிராபி திறன் வியக்கவைக்கிறது.!

    பதிலளிநீக்கு
  7. வண்ணத்துப்பூச்சிகள் எல்லாமே அழகாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு! என் கண்ணைக் கவர்ந்தது 8! :)

    பதிலளிநீக்கு
  8. எல்லா போட்டோக்களுமே அருமை. இயற்கை காட்சிகள் எவ்வளவு பார்த்தாலும் அந்த அழகு திகட்டாது என்று சொல்வார்கள். அப்படி இந்த இயற்கை அழகுகளை அள்ளித்தந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே அழகாருக்கு.. அழகில் ஒண்ணுக்கொண்ணு குறைஞ்சவையில்லை :-)

    பதிலளிநீக்கு
  10. ஒத்துக்குறேன். நீங்க நிஜமான போட்டோகிராபர்னு ஒத்துக்குறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன் :)

    இந்த அளவுக்கு இல்லீங்க.. ரொம்ப சாதரணமா ஒரு பட்டர்பிளையை படம் பிடிக்கணும்னு நானும் ரெண்டு வருஷமா முயற்சி பண்றேன் ஊஹும் நடக்க மாட்டேங்குது நீங்க என்னடான்னா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க ! நடத்துங்க

    பதிலளிநீக்கு
  11. அத்தனையும் பட்டு பட்டாய் படங்களை காட்டி எது பிடிக்குது என்று கேட்டால் எதுவென்போம்?

    பதிலளிநீக்கு
  12. எல்லாமே அழகுதான்..எதைச் சொல்வது ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  13. எல்லாமே நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  14. உங்களிடம் மாட்டாமல் படபடத்த அந்த swallow tail butterfly ரொம்ப அழகாக இருக்கும்.இது எப்படி சாத்தியம் ? அருமை அருமை,ஒரு குருவியை எடுக்க நான் பட்ட பாடு அப்பப்பா!பாராட்டுக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  15. 7 விரித்து வைத்தப் புத்தகம்

    வண்ண வண்ணமாய் பட்டான படங்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அனைத்தும் அருமை.
    அழகா இருக்குக்கா வண்ணத்துப் பூச்சிகள்...

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அத்தனையும் இணைத்தால் இது ஒரு படக் கவிதை.

    பதிலளிநீக்கு
  18. பட்டாம்பூச்சிகளின் படங்கள் மனதை கொள்ளை கொண்டன

    பதிலளிநீக்கு
  19. பூக்க‌ளும் ப‌ட்டாம்பூச்சிக‌ளும் ப‌டைத்த‌வ‌ன் வ‌ண்ண‌நேச‌ன் என்ப‌த‌ற்கு க‌ட்டிய‌ம் கூறுப‌வை அல்ல‌வா...! ப‌ட‌ம்பிடித்த‌ உங்க‌ தேர்ந்த‌ ர‌ச‌னையும், எங்க‌ளுக்குப் ப‌திவாக‌ ப‌டைத்த‌ நேர்த்தியும் வெகு அழ‌கு! சுய‌ம்வ‌ர‌மென்றால் ஒன்றை சுட்டியாக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். க‌ண்ணும் க‌ருத்தும் எல்லாப் ப‌ட‌ங்க‌ளுக்கும் நூற்றுக்கு நூறு த‌ந்துவிட்ட‌தே...

    பதிலளிநீக்கு
  20. முதல் பட்டாம்பூச்சி மிக அழகு. மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள்.

    பதிலளிநீக்கு
  21. ராமலக்ஷ்மி மேடம் , ரொம்ப அருமையான பகிர்வு.. பட்டம்பூசிக்களை பிடிக்க பொறுமை மிக மிக அவசியம்..
    ஆரம்பத்தில் நானும் மிகவும் சிரமப்பட்டேன்.. நாள் அக நாள் அக.. அவைகளை புரிந்து கொண்டேன்...நீங்கள் சொன்னது சரியே..காலை வெயிலில்
    மிகவும் சாஷ்டாங்கமாக அமர்ந்து இருப்பார்...இந்த வகை பட்டம்பூசிகள் மிகவும் பொறுமையானது...
    http://www.flickr.com/photos/rafimmedia/6938873901/in/set-72157627307079081/

    இது 18 -55 ரிவேர்சல் macro

    பதிலளிநீக்கு
  22. வெங்கட் நாகராஜ் said...
    //எதை விடுவது எதைச் சொல்வது, எல்லாமே அழகு. 7-ம், 12-ம் ரொம்பவே பிடித்தது....//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  23. ஹுஸைனம்மா said...
    /ஏனிந்த சோதனை எங்களுக்கு?? :-))))/

    நன்றி ஹுஸைனம்மா:)!

    பதிலளிநீக்கு
  24. அப்பாதுரை said...

    மிக்க நன்றி.

    //ஷாட் ஞானம் சிறிது ஈவது.. :)//

    ஏதோ, எனக்குத் தெரிந்த குறிப்புகளை மேலும் மூன்று பத்திகளாக இறுதியில் இணைத்து PiT தளத்திலும் பகிர்ந்தாயிற்று:)!

    பதிலளிநீக்கு
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //புகைப்படங்கள் நல்ல பளீச் .... பளீச். விளக்கங்களும் அருமை. //

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. திண்டுக்கல் தனபாலன் said...
    //அழகு ! அழகு ! படங்கள் மனதை கொள்ளையடிக்கிறது ! //

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம். said...
    //மெல்லத் திறக்கும் சிறகின் வண்ணங்கள் கிராமத்துப் பெண்ணைப் போல எளிமையான அழகு. கவர்ந்து இழுக்கிறது
    ஜெஸ்பெல் வெளுத்திருந்தாலும் மென்மையான அழகு.
    ட்ரில் மாஸ்டர் நவீன யுவதி.//

    ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். க்ரிம்சன் அதிநவீன யுவதி:)!

    பதிலளிநீக்கு
  28. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //ஏழும் எட்டும்..:)//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  29. வரலாற்று சுவடுகள் said...
    //stunning photography..!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. Mahi said...
    //என் கண்ணைக் கவர்ந்தது 8! :)//

    மகிழ்ச்சி:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  31. திருவாரூர் சரவணன் said...
    // இந்த இயற்கை அழகுகளை அள்ளித்தந்ததற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  32. அமைதிச்சாரல் said...
    //அழகில் ஒண்ணுக்கொண்ணு குறைஞ்சவையில்லை :-)//

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  33. Vasudevan Tirumurti said...
    //:-)
    கைவிசிறி அழகு!//

    எனக்கும் அதிகம் பிடித்தது. நன்றி:)!

    பதிலளிநீக்கு
  34. மோகன் குமார் said...
    //ஒத்துக்குறேன். நீங்க நிஜமான போட்டோகிராபர்னு ஒத்துக்குறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன் :)//

    நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  35. ஸாதிகா said...
    //அத்தனையும் பட்டு பட்டாய் படங்களை காட்டி எது பிடிக்குது என்று கேட்டால் எதுவென்போம்?//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  36. பாச மலர் / Paasa Malar said...
    //எல்லாமே அழகுதான்..எதைச் சொல்வது ராமலக்ஷ்மி...//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  37. KSGOA said...
    //எல்லாமே நல்லா இருக்குங்க.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. Asiya Omar said...
    //உங்களிடம் மாட்டாமல் படபடத்த அந்த swallow tail butterfly ரொம்ப அழகாக இருக்கும்.//

    ஆம் எப்படியும் அதை மீண்டும் சந்திப்பேன்:)!

    பாராட்டுக்கு நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  39. இராஜராஜேஸ்வரி said...
    //7 விரித்து வைத்தப் புத்தகம். பாராட்டுக்கள்..//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  40. சே. குமார் said...
    /படங்கள் அனைத்தும் அருமை.
    அழகா இருக்குக்கா வண்ணத்துப் பூச்சிகள்...//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  41. T.N.MURALIDHARAN said...
    //படங்கள் அத்தனையும் இணைத்தால் இது ஒரு படக் கவிதை.//

    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  42. மனசாட்சி™ said...
    //பட்டாம்பூச்சிகளின் படங்கள் மனதை கொள்ளை கொண்டன//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  43. நிலாமகள் said...
    //க‌ண்ணும் க‌ருத்தும் எல்லாப் ப‌ட‌ங்க‌ளுக்கும் நூற்றுக்கு நூறு த‌ந்துவிட்ட‌தே...//

    மகிழ்ச்சி:). நன்றி.

    பதிலளிநீக்கு
  44. விச்சு said...
    //முதல் பட்டாம்பூச்சி மிக அழகு. மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  45. Mohamed Rafi said...
    //ராமலக்ஷ்மி மேடம் , ரொம்ப அருமையான பகிர்வு.. பட்டம்பூசிக்களை பிடிக்க பொறுமை மிக மிக அவசியம்..//

    உங்கள் அனுபவத்திலும் சொல்கிறீர்கள் எனப் பகிர்ந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன்:)! அழகாக வந்திருக்கிறது.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. பூ பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  47. கவித்துவம் நிறைந்த பொருத்தமான தலைப்புகளோடு கூடிய பட்டாம்பூச்சிகளின் அனைத்து வண்ணப்படங்களும் மனதைக் கொள்ளை கொண்டன. அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தந்தமை இன்னும் சிறப்பு. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு