புதன், 14 மார்ச், 2012

உயிர்க் கூடு - பண்புடன் இதழில்..

மலை உச்சியில்
தனித்து நின்ற மரத்தருகே
இன்னொரு மரமாகி நின்றிருந்தான்

மாலைக் கதிரவனின் பொன்னொளியில்
குளித்துக் கொண்டிருந்தன
மரத்தின் பலநூறு இலைகள்.

நன்றி மறக்கும் உறவுகள்
வஞ்சிக்கும் நட்புகள்
ஏமாற்றும் சுற்றங்கள்
எவருடனும் ஒட்ட இயலாமல்
அவன்

காலப் போக்கில்
உதிரப் போகும் இலைகளை
முறித்துக் கொள்ளும்
சாத்தியம் கொண்ட கிளைகளை
கனிந்ததும் கழன்றிடக்
காத்திருக்கும் பழங்களை
உயிர்க் கூட்டில் பாதுகாத்து
மரம்

மனம் அலை பாயச்
சிலையாக நின்றிருந்தான்

அதல பாதாளத்துள்
இறங்கிக் கொண்டிருந்தது
மலைக்கு மறுபக்கம்
அஸ்தமனச் சூரியன்.

கைக்கு வாராப் பேரொளிப் பந்தினை
வேறோர் உலகில்
கையகப் படுத்திவிடும் முடிவுடன்
முனையை நோக்கி நகர்கிறவனைப்
பதட்டத்துடன் பார்க்கிறது மரம்

சாட்சியாகப் பிடிக்காமல்
வேகவேகமாய் இருளில்
கரைந்து கொண்டிருக்கின்றன
சூரிய மிச்சங்கள்

நட்சத்திரங்களற்ற வானில்
ஒற்றைக் கீற்றாய்
வளர்பிறை நிலவின்
வளைந்த புன்னகை;

எதனாலும் தடைபடாத
இயற்கையின் சுழற்சி
மின்னல் வெட்டாய்
உயிர்வரை பாய்ந்து
எழுப்பிய கேள்வியில்
பிரளய அதிர்வை உணர்கிறவன்
திரும்பி நடக்கிறான்

விடைகொடுத்துச் சலசலக்கிறது
மகிழ்ச்சியில் மரம்.
***



படம் நன்றி: MQN

4 மார்ச் 2012 பண்புடன் இணைய இதழில், நன்றி பண்புடன்!

36 கருத்துகள்:

  1. நம்பிக்கை தரும் அழகிய கவிதை....

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கை, புத்துணர்ச்சி பரவுதே மனதில் - கவிதையை வாசித்து முடிக்கும்போது.

    பதிலளிநீக்கு
  3. மரமும் மனிதமும் ஒன்று சேர்ந்து
    நம்பிக்கைப் பழத்தை பறித்த திருப்தி. வெகு அழகு ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  4. எதனாலும் தடைபடாத
    இயற்கையின் சுழற்சி
    மின்னல் வெட்டாய்
    உயிர்வரை பாய்ந்து
    எழுப்பிய கேள்வியில்
    பிரளய அதிர்வை உணர்கிறவன்
    திரும்பி நடக்கிறான்

    விடைகொடுத்துச் சலசலக்கிறது
    மகிழ்ச்சியில் மரம்.//

    வாழும் மனிதர்களுக்கு இயற்கை பாடம் கற்று தருகிறது. இதை மனிதன் புரிந்து கொண்டால் என்றும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

    மனிதன் புரிந்து கொண்டான் என்று மகிழ்ச்சியாய் விடை கொடுத்து விட்டது மரம்.
    இனி இன்பம்தான்.

    அருமையான கவிதை ராமல்க்ஷ்மி.
    ***

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கை தரும் அழகிய கவிதை....

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. அடடா..என்னே வார்த்தைசொல்லாடல்...!

    பதிலளிநீக்கு
  7. இயற்கை நியதியின் இன்னுமொரு புரிதல்..வரிகள் அருமை ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  8. அழகான வித்தியாசமான கோணத்தில் நகரும் கவிதை சூப்பர் அக்கா !

    பதிலளிநீக்கு
  9. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  10. //எதனாலும் தடைபடாத
    இயற்கையின் சுழற்சி
    மின்னல் வெட்டாய்
    உயிர்வரை பாய்ந்து
    எழுப்பிய கேள்வியில்//

    ஆமாம்.. சில நியதிகள் இயற்கையானவையே.. புரிஞ்சுக்கிட்டாலும் மனசு ஏத்துக்கறவரைக்கும் போராட்டம்தான்.

    பதிலளிநீக்கு
  11. உலக நீர் நாள் பற்றி ஒரு சுட்டி போட்டுள்ளீர்கள் இது குறித்து பதிவெதுவும் எழுதினீர்களா? நான் தவற விட்டு விட்டேனா என்ன?

    பதிலளிநீக்கு
  12. கவிதை ரொம்ப நல்லாயிருக்குக்கா,நம்பிக்கை அதானே வாழ்க்கைக்கு தேவை...

    பதிலளிநீக்கு
  13. இணைத்துள்ள படமே காட்சியைச் சொல்ல, அந்தச் சூழல் மனதில் பதிகிறது. அழகிய கவிதையையும் ரசிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  14. மிகவும் ரசித்தேன் இக் கவிதையை! நன்று!

    பதிலளிநீக்கு
  15. வெங்கட் நாகராஜ் said...
    /நம்பிக்கை தரும் அழகிய கவிதை....

    வாழ்த்துகள்.../

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  16. தமிழ் உதயம் said...
    /நம்பிக்கை, புத்துணர்ச்சி பரவுதே மனதில் - கவிதையை வாசித்து முடிக்கும்போது./

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  17. வல்லிசிம்ஹன் said...
    /மரமும் மனிதமும் ஒன்று சேர்ந்து
    நம்பிக்கைப் பழத்தை பறித்த திருப்தி. வெகு அழகு ராமலக்ஷ்மி/

    மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  18. கோமதி அரசு said...
    //வாழும் மனிதர்களுக்கு இயற்கை பாடம் கற்று தருகிறது. இதை மனிதன் புரிந்து கொண்டால் என்றும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

    மனிதன் புரிந்து கொண்டான் என்று மகிழ்ச்சியாய் விடை கொடுத்து விட்டது மரம்.
    இனி இன்பம்தான்.

    அருமையான கவிதை ராமல்க்ஷ்மி.//

    உண்மைதான். இயற்கையை ஒரு சிறந்த ஆசான். மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  19. Kanchana Radhakrishnan said...
    /கவிதை அருமை./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. Sekar said...
    /அருமை அருமைக்கவிதை/

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. Lakshmi said...
    /நம்பிக்கை தரும் அழகிய கவிதை....

    வாழ்த்துகள்../

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. ஸாதிகா said...
    /அடடா..என்னே வார்த்தைசொல்லாடல்...!/

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  23. பாச மலர் / Paasa Malar said...
    /இயற்கை நியதியின் இன்னுமொரு புரிதல்..வரிகள் அருமை ராமலக்ஷ்மி../

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  24. ஹேமா said...
    /அழகான வித்தியாசமான கோணத்தில் நகரும் கவிதை சூப்பர் அக்கா !/

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  25. கோவை2தில்லி said...
    /கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.../

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  26. அமைதிச்சாரல் said...
    /ஆமாம்.. சில நியதிகள் இயற்கையானவையே.. புரிஞ்சுக்கிட்டாலும் மனசு ஏத்துக்கறவரைக்கும் போராட்டம்தான்./

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  27. மோகன் குமார் said...
    /உலக நீர் நாள் பற்றி ஒரு சுட்டி போட்டுள்ளீர்கள் இது குறித்து பதிவெதுவும் எழுதினீர்களா? நான் தவற விட்டு விட்டேனா என்ன?/

    இனிதான் சொல்ல உள்ளேன்:). நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  28. S.Menaga said...
    /கவிதை ரொம்ப நல்லாயிருக்குக்கா,நம்பிக்கை அதானே வாழ்க்கைக்கு தேவை.../

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம். said...
    /இணைத்துள்ள படமே காட்சியைச் சொல்ல, அந்தச் சூழல் மனதில் பதிகிறது. அழகிய கவிதையையும் ரசிக்க முடிகிறது./

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  30. கணேஷ் said...
    /மிகவும் ரசித்தேன் இக் கவிதையை! நன்று!/

    மிக்க நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  31. என்னை மறந்து
    மற்றொரு உலகில்
    சஞ்சரிக்க வைத்தன
    ஒவ்வொரு வரிகளும்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  32. Muruganandan M.K. said...
    //என்னை மறந்து
    மற்றொரு உலகில்
    சஞ்சரிக்க வைத்தன
    ஒவ்வொரு வரிகளும்.
    அருமை.//

    நன்றி டாக்டர்.

    பதிலளிநீக்கு
  33. இயற்கை அளித்த நம்பிக்கையோடு இனிய கவிதை

    பதிலளிநீக்கு
  34. குமரி எஸ். நீலகண்டன் said...
    //இயற்கை அளித்த நம்பிக்கையோடு இனிய கவிதை//

    நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு