புதன், 22 பிப்ரவரி, 2012

பறத்தலின் மீதான புரிதல் - நவீன விருட்சத்தில்..


உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை

அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு
பார்த்தபடி நிற்கிறான்

எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்று
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்

வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்

பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்

வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை
அடைகின்ற பொழுதில்..

விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

12 பிப்ரவரி நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

படம்: கவிதையுடன் வெளியானது.

28 கருத்துகள்:

  1. இறகு விரிக்கும் அந்தத் தருணத்தில் அவன் தன்னை நிரூபிப்பான்..

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம். said...
    //அறிவின் அடக்கம்...
    அருமை.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. அமைதிச்சாரல் said...
    //இறகு விரிக்கும் அந்தத் தருணத்தில் அவன் தன்னை நிரூபிப்பான்..//

    மிக்க நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  4. தமிழ் உதயம் said...
    //கற்பனை அபாரம்.//

    மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  5. Kanchana Radhakrishnan said...
    //அருமை.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  6. பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
    பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
    இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
    பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்//
    அருமை..:)

    பதிலளிநீக்கு
  7. கண்முன் தன்னம்பிக்கையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது கவிதை வரிகள். உறுதியும் தன் திறமையில் நம்பிக்கையும், கூடவே அடக்கமும் அவனது சக்திகள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //அருமை..:)//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  9. வல்லிசிம்ஹன் said...
    //கண்முன் தன்னம்பிக்கையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது கவிதை வரிகள். உறுதியும் தன் திறமையில் நம்பிக்கையும், கூடவே அடக்கமும் அவனது சக்திகள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.//

    நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  10. பாச மலர் / Paasa Malar said...
    //அருமையான வரிகள் ராமலக்ஷ்மி..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  11. நம்பிக்கையைவிட புரிதலே தேவையாயிருக்கிறது.
    அட்டகாசமான பறத்தல் !

    பதிலளிநீக்கு
  12. வாவ்! எங்கேயோ போயிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  13. Shakthiprabha said...
    //ரொம்ப அழகு.//

    நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு
  14. ஹேமா said...
    //நம்பிக்கையைவிட புரிதலே தேவையாயிருக்கிறது.
    அட்டகாசமான பறத்தல் !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  15. கவிநயா said...
    //வாவ்! எங்கேயோ போயிட்டீங்க!//

    நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கற்பனை..... சூப்பர் ராமலஷ்மி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //அருமையான கற்பனை..... சூப்பர் ராமலஷ்மி. வாழ்த்துகள்.//

    நன்றி பவளா.

    பதிலளிநீக்கு
  18. இரண்டு முறை படித்து மூன்றாவது முறையில் புரிந்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  19. //பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
    பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
    இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
    பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
    ///


    நல்லாயிருக்குங்க

    பதிலளிநீக்கு
  20. அமைதி அப்பா said...
    //இரண்டு முறை படித்து மூன்றாவது முறையில் புரிந்துக் கொண்டேன்!//

    மகிழ்ச்சி:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஆ.ஞானசேகரன் said...

    //நல்லாயிருக்குங்க//

    மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு