திங்கள், 23 மே, 2011

எல்லாம் புரிந்தவள் - வல்லமையில்..

மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.

அர்த்தங்கள் பல
முயன்று தோற்று

‘அப்பா
அம்மாவாகவே முடியாதோ..’
திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.
***

23 மே 2011 வல்லமை இணைய தளத்தில்.., நன்றி வல்லமை!

படம் நன்றி: http://www.istockphoto.com, கவிதையுடன் வல்லமையில் வெளியானது.

52 கருத்துகள்:

  1. வடை எனக்கே.....!

    கவிதை இனிமை.
    ‘வா வா என் தேவதையே.. பாடலை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான். தாய்க்கு தான் குழந்தை எப்படி பேசினாலும் புரிகிறது. அந்த அனுபவத்தை கவிதையாக்கியது அருமை.

    பதிலளிநீக்கு
  3. மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.


    ..... ஆரம்ப வரிகளே , கலக்கல்!!!

    பதிலளிநீக்கு
  4. அருமை..

    நாமும் மழலையாக இருந்துதான் வந்தோம் என்றாலும் மழலைமொழி நமக்கு முழுவதும் தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ராமலக்ஷ்மி

    அருமை கவிதை அருமை - மகளிடமதிகம் பழகாத்தால் அப்பாவிற்கு மழலை புரியவில்லை. அகராதி பக்கத்தில் இருக்கும் வரை நாமாகவும் கற்றுக் கொள்ள மாட்டோம். அழகான முடிவு. அம்மாவானாள் அன்பு மகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. பாசம் பாசம் பாசம்....

    அசத்தல் நெஞ்சை தொட்ட கவிதை...!!!

    பதிலளிநீக்கு
  7. அனுபவப்பூர்வமான அழகு கவிதையாகும்போது இனிக்கிறது...

    பதிலளிநீக்கு
  8. //மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.//

    மிக ரசித்தேன்...

    சில சமயங்களில் நம் மௌனத்திற்கும்... :)

    பதிலளிநீக்கு
  9. குட்டிப்பெண் குழந்தைபோலவே இந்தக்குட்டிக்கவிதையும்
    அழகோ அழகு.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  10. தாயுமானவள்!

    அந்த அன்பின் முத்தத்தில் ஞானப்பால் குடித்த குழந்தையாய் அர்த்தங்களைப் புரிய தகப்பனுக்கும் கைவரும் கலை!

    பதிலளிநீக்கு
  11. \\மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.\\

    அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
  12. அம்மாவே அறிவாள் அவளின் மொழி... அருமையான கவிதை...

    பதிலளிநீக்கு
  13. ஆரம்ப வரிகளே அழகாயிருக்கு !

    பதிலளிநீக்கு
  14. தாய்ப்பாசத்துக்கு வார்த்தை தேவையில்லை வயது தேவை இல்லை..என்பதை விளக்கமாக நாலே வார்த்தைகளில் கொட்டி விட்டீர்.
    விழுந்தது நாலு மலர்கள் ,அதில் தொடுத்ததோ கொத்தான பூச்செண்டு

    பதிலளிநீக்கு
  15. //
    மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.
    //

    அழகு அக்கா..

    எங்க வீட்ல மகனுக்கும் நானே அகராதி :)

    பதிலளிநீக்கு
  16. //மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.
    //ஆஹா..என்ன வார்த்தைஜாலம்!!!!!!

    பதிலளிநீக்கு
  17. அருமையான குட்டி அம்மாக் கவிதை.. சூப்பர்ப் ராமலெக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. அழகாய் ஆரம்பித்து அசத்தலாய் முடிந்த கவிதை!

    பதிலளிநீக்கு
  19. நானானி said...
    //வடை எனக்கே.....!

    கவிதை இனிமை.
    ‘வா வா என் தேவதையே.. பாடலை நினைவூட்டுகிறது.//

    ஆம் உங்களுக்கே:)! கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. தமிழ் உதயம் said...
    //உண்மை தான். தாய்க்கு தான் குழந்தை எப்படி பேசினாலும் புரிகிறது. அந்த அனுபவத்தை கவிதையாக்கியது அருமை.//

    கருத்துக்கு நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  21. Chitra said...
    //மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.


    ..... ஆரம்ப வரிகளே , கலக்கல்!!!//

    நன்றி சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  22. முனைவர்.இரா.குணசீலன் said...
    //அருமை..

    நாமும் மழலையாக இருந்துதான் வந்தோம் என்றாலும் மழலைமொழி நமக்கு முழுவதும் தெரிவதில்லை.//

    உண்மைதான். அதுவும் அன்னைக்குப் புரியுமளவுக்கு தந்தைக்குப் புரிவதில்லை:)! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்ஷ்மி

    அருமை கவிதை அருமை - மகளிடமதிகம் பழகாத்தால் அப்பாவிற்கு மழலை புரியவில்லை. அகராதி பக்கத்தில் இருக்கும் வரை நாமாகவும் கற்றுக் கொள்ள மாட்டோம். அழகான முடிவு. அம்மாவானாள் அன்பு மகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா//

    மிக்க நன்றி சீனா சார்:)!

    பதிலளிநீக்கு
  24. MANO நாஞ்சில் மனோ said...
    //பாசம் பாசம் பாசம்....

    அசத்தல் நெஞ்சை தொட்ட கவிதை...!!!//

    நன்றி மனோ:)!

    பதிலளிநீக்கு
  25. பாச மலர் / Paasa Malar said...
    //அனுபவப்பூர்வமான அழகு கவிதையாகும்போது இனிக்கிறது...//

    நன்றி மலர்:)!

    பதிலளிநீக்கு
  26. சிசு said...
    ***//மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.//

    மிக ரசித்தேன்...

    சில சமயங்களில் நம் மௌனத்திற்கும்... :)/***

    ரசித்தேன் உங்கள் கருத்தை நானும்:)! நன்றி சிசு.

    பதிலளிநீக்கு
  27. சசிகுமார் said...
    //கவிதை மிக அருமை.//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //குட்டிப்பெண் குழந்தைபோலவே இந்தக்குட்டிக்கவிதையும்
    அழகோ அழகு.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  29. அமைதி அப்பா said...
    //கவிதை நன்று.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  30. Rathnavel said...
    //அருமை.//

    நன்றி ரத்னவேல்.

    பதிலளிநீக்கு
  31. S.Menaga said...
    //அழகான கவிதை!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். said...
    //தாயுமானவள்!

    அந்த அன்பின் முத்தத்தில் ஞானப்பால் குடித்த குழந்தையாய் அர்த்தங்களைப் புரிய தகப்பனுக்கும் கைவரும் கலை!//

    வரட்டும் வரட்டும்:)! நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  33. அம்பிகா said...
    ***\\மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.\\

    அழகான கவிதை./***

    நன்றி அம்பிகா. ஏன் வெகு நாளாக உங்கள் பதிவுகளைக் காணோம்? விடுமுறையில் இருக்கிறீர்களா:)?

    பதிலளிநீக்கு
  34. ஈரோடு கதிர் said...
    //தித்திக்கிறது!//

    நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  35. குமரி எஸ். நீலகண்டன் said...
    //அம்மாவே அறிவாள் அவளின் மொழி... அருமையான கவிதை...//

    ஆம் நீலகண்டன். அவள் அம்மாவும் ஆகிறாள் வாடிய தகப்பன் முகம் கண்டு:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஹேமா said...
    //ஆரம்ப வரிகளே அழகாயிருக்கு !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  37. goma said...
    //தாய்ப்பாசத்துக்கு வார்த்தை தேவையில்லை வயது தேவை இல்லை..//

    சரியாகச் சொன்னீர்கள்.

    //நாலே வார்த்தைகளில் கொட்டி விட்டீர். விழுந்தது நாலு மலர்கள் ,அதில் தொடுத்ததோ கொத்தான பூச்செண்டு//

    மிக்க நன்றி கோமா:)!

    பதிலளிநீக்கு
  38. க.பாலாசி said...
    //அருமையான கவிதை...//

    நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  39. சுசி said...
    ***//மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.//

    அழகு அக்கா..

    எங்க வீட்ல மகனுக்கும் நானே அகராதி :)//***

    ஆமா அதுவும் இருக்கே இன்னொரு பக்கம்:)! நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  40. ஸாதிகா said...
    //மகளின் மழலைக்கு
    மனைவியே அகராதி.


    ஆஹா..என்ன வார்த்தைஜாலம்!!!!!!//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  41. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //அருமையான குட்டி அம்மாக் கவிதை.. சூப்பர்ப் ராமலெக்ஷ்மி.//

    மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  42. மோகன் குமார் said...
    //Very nice.//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  43. கே. பி. ஜனா... said...
    //அழகாய் ஆரம்பித்து அசத்தலாய் முடிந்த கவிதை!//

    நன்றிங்க ஜனா.

    பதிலளிநீக்கு
  44. மழலையைப் போலவே கவிதை மிக அழகு, இனிமை!

    பதிலளிநீக்கு
  45. @ கவிநயா,

    வாங்க கவிநயா. இனிய கருத்துக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு