செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இல்லாத ஒன்று



வெறுமை மனமெங்கும் வியாபித்து நிற்க
நிம்மதி நாடி அமைதியைத் தேடி
நடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்

அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பது
எவரிடம் எப்படி இறக்குவது
தெரியாமல் திணறியது மனது குழப்பமாய்

பாதையோரம் காண நேர்ந்த
பார்வையிழந்த இளைஞன்
நம்பிக்கையுடன் நடக்க

துணை சென்றக் கைத்தடி
கேட்காமல் கேட்டது என்னை
இருப்பதை உணராத உனக்கு
இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்

புரியாதது புரிந்திட திகைத்து நின்றேன்
எடுத்துக் குறைத்திட ஏதுமற்றவனாய்

இதுவரை கிடைத்த நல்லன யாவும்
நினைவுக்குவர நன்றி மிகுதியில்
நெஞ்சம் நனைந்தவனாய்

வெறுமையென மயங்கிய மனதுக்கு
வலிமைதர என்றைக்கும்
பெற்ற அனுபவங்கள்
துணையிருக்கும் என்பதனை
மறந்தயென் மடமையை எண்ணி
வெட்கிச் சிரித்தவனாய்.
***

படம்: இணையத்திலிருந்து


81 கருத்துகள்:

  1. அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பது
    எவரிடம் எப்படி இறக்குவது
    தெரியாமல் திணறியது மனது குழப்பமாய்
    //

    ஏன் இப்படி அக்கா.

    பதிலளிநீக்கு
  2. வெறுமையென மயங்கிய மனதுக்கு
    வலிமைதர என்றைக்கும்
    பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும்
    ///

    உண்மை தான் வாழ்க்கையில் தினமும் கிடைக்கிற அனுபவ பாடமே நம்மை அடுத்து கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. தினமும் படிக்க வேண்டியிருக்கிறது ஒவ்வொரு மனிதர் இடத்தில். நல்ல கவிதை. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. கடையம் ஆனந்த் said...

    // super//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் வருகையாய்:)!

    //ஏன் இப்படி அக்கா.//

    எப்படி:)? மேலே வாசித்தீர்கள்தானே?

    பலரும் மனது வெறுமையாய் இருப்பதாகவும் அதையே கவலையாய் எண்ணி சுமப்பதும் நடக்கிறதுதானே? வெறுமை என்பதே இல்லாத ஒன்றுதானே? அது எப்படி சுமையாகும் எனக் கேட்கிறேன்.

    //உண்மை தான் வாழ்க்கையில் தினமும் கிடைக்கிற அனுபவ பாடமே நம்மை அடுத்து கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. தினமும் படிக்க வேண்டியிருக்கிறது ஒவ்வொரு மனிதர் இடத்தில். நல்ல கவிதை. நல்ல பகிர்வு.//

    அழகான புரிதல் இது:)!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  4. /*வெறுமையென மயங்கிய மனதுக்கு
    வலிமைதர என்றைக்கும்
    பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும் என்பதனை
    மறந்தயென் மடமையை எண்ணி
    ..*/
    உண்மை தான். மனம் வெறுமையாகும் பொழுது கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்தாலே மனம் நிறையத் தொடங்கிடுமே!!!!

    பதிலளிநீக்கு
  5. அமுதா said...
    //மனம் வெறுமையாகும் பொழுது கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்தாலே மனம் நிறையத் தொடங்கிடுமே!!!!//

    அதேதான். நன்றி அமுதா!

    பதிலளிநீக்கு
  6. //இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்//

    அருமை அக்கா..

    ஒளி பரவி இருளை அகற்றும் படியாய் படமும் அழகாய்.. பொருத்தமாய்..

    பதிலளிநீக்கு
  7. படம் அருமை.
    இல்லாத ஒன்று தலைப்பும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  8. கவிதை நம்பிக்கை தருகிறது.

    பதிலளிநீக்கு
  9. //இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்//

    நீங்களும் என்னைப் போலத்தானா? :-))

    அவ்வப்போது இப்படித்தான் ஒரு வெறுமை சூழ்வது போல்...

    பதிலளிநீக்கு
  10. வெறுமை சூழ்ந்து குழம்பி, தெளிந்துன்னு ஓடும்போதுதானே நிறைய்ய கத்துக்க முடியுது. வார்த்தைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப பிடித்தது சகோதரி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. தன்நம்பிக்கையை இழக்கும் சமயங்களில்...

    //இதுவரை கிடைத்த நல்லன யாவும்
    நினைவுக்குவர நன்றி மிகுதியில்
    நெஞ்சம் நனைந்தவனாய்//

    இதை மனதில் கொண்டாலே போதும்.

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  13. அனைவரும் அனுபவிப்பதை அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி....

    பதிலளிநீக்கு
  14. அனுபவத்தில் கிடைக்கும் வலிமைக்கு நிகரில்லை..... நல்ல கவிதை.... வாழ்த்துக்களும்....

    பதிலளிநீக்கு
  15. "வெறுமையென மயங்கி" பின்பு தெளிந்து..சிரித்து..நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  16. ராமலக்ஷ்மி,கவிதை அருமை.

    இருப்பதை விட்டு இல்லாததை நாடுவது தான் மனித மனம்.

    இருப்பை உணர்ந்தால் பாரம் மறைந்து மனம் லேசாகி பறக்கலாம்.

    //மனதுக்கு வலிமைதர என்றைக்கும் பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும்.//

    உண்மை.அனுபவம்தான் துணை.

    பதிலளிநீக்கு
  17. அருமையான கவிதையும் கருத்தும்! :-)

    பதிலளிநீக்கு
  18. கவிதையைப் படித்த பிறகு சற்று யோசித்துப் பார்த்தேன்.எந்த சொத்து போனாலும் கல்விதான் ஒருவருடன் கூடவே வரும் என்று சொல்வார்கள். ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் கூட சளைக்காமல் முயற்சி செய்து வெற்றி பெறும் உண்மைக்கதைகள் ஏராளம். அவர்களுக்கு துணை வருவது அனுபவமே.

    பதிலளிநீக்கு
  19. I think this happens to everyone at some stage of life...They start realizing that we were blessed in life while they did not realize or respect it.Nice poem.

    பதிலளிநீக்கு
  20. \\வெறுமையென மயங்கிய மனதுக்கு
    வலிமைதர என்றைக்கும்
    பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும் \\
    அருமையான வாழ்க்கை தத்துவம்.

    பதிலளிநீக்கு
  21. இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்


    ..... super! super! super!

    பதிலளிநீக்கு
  22. கவிதை அருமை.படம் அதைவிட அருமை .

    பதிலளிநீக்கு
  23. கவிதை அருமை
    //இதுவரை கிடைத்த நல்லன யாவும் நினைவுக்குவர நன்றி மிகுதியில் நெஞ்சம் நனைந்தவனாய்//

    நடந்த நல்லவைகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் இது வேண்டும் அது வேண்டும் என்ற ஏக்கம் தோன்றாது. அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  24. ***நடக்க உதவியாய்
    துணை சென்றக் கைத்தடி
    கேட்காமல் கேட்டது என்னை
    இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்***

    கைத்தடியை வைத்து அடிக்காமல், அறிவுரை சொல்ல வைத்த அழகு, நல்லாயிருக்குங்க, ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  25. /[என்னிடம் வேறுமாதிரியான ‘புரிதல்’ ஒன்று சேமிப்பில் இருக்கிறதே! பதிகையில் வரும் அழைப்பு:)!/

    முதலில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அருமையான கவிதை

    /வருத்தமாய்...
    குழப்பமாய்...
    பாரமாய்...
    ஏதுமற்றவனாய்...
    நனைந்தவனாய்...
    சிரித்தவனாய்.../

    நீங்க‌ள் எழுதிய‌ எந்த‌க் க‌விதையிலும் இப்ப‌டி அமைந்த‌தில்லை.
    இந்த‌க் க‌விதையில் வ‌ரிக‌ள் அதுவும் இறுதியில் வ‌ந்த‌ விழுவும் வார்த்தைக‌ள் மிக‌வும் இர‌சித்தேன்.

    க‌விதைக்கு ஏற்ற‌ ப‌ட‌மா
    ப‌ட‌த்திற்கு ஏற்ற‌ க‌விதையா

    ஒரு க‌ண‌ம் விய‌ந்தேன்.

    /இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்/

    அற்புதம்
    அறிந்துவிட்டால்
    அடைந்திடுமே ம‌ன‌து
    அனைத்தையும்...


    உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    /வெறுமையென மயங்கிய மனதுக்கு
    வலிமைதர என்றைக்கும்
    பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும்/

    சரியாகச் சொன்னீர்கள்

    நல்ல கவிதை

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  26. நல்லாருக்குங்க; ஆண் சொல்ற மாதிரி எழுதிருக்கீங்க!!

    பதிலளிநீக்கு
  27. பார்வையிழந்த இளைஞன் கொடுத்த கவியோ இது?  :-)

    பதிலளிநீக்கு
  28. ஈரோடு கதிர் said...

    //நல்ல கவிதை//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  29. சுசி said...

    ***/ //இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்//

    அருமை அக்கா..//

    ஒளி பரவி இருளை அகற்றும் படியாய் படமும் அழகாய்.. பொருத்தமாய்../***

    புரிதல்களால் அக இருள் அகலுவதைக் காட்ட, ஞான ஒளி போலத் தோன்றும் இப்படம் பொருத்தமாய் இருக்குமென நினைத்தேன். உங்களுக்கும் பிடித்துப் போய் கவிதையோடு சேர்த்து ரசித்துள்ளீர்கள் சின்ன அம்மிணி, மலர்விழி மற்றும் திகழ் போல. நன்றிகள் சுசி.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம். said...

    //Positive Thoughts...
    அனுபவப் பாடங்கள்//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  31. சின்ன அம்மிணி said...

    //படம் அருமை.
    இல்லாத ஒன்று தலைப்பும் சூப்பர்//

    புரிதல் என்பதே முதலில் வைத்த தலைப்பு:)! .'இல்லாத ஒன்று' யோசிக்க வைக்கும் எனத் தோன்றியது. மாற்றி விட்டேன். நன்றி அம்மிணி.

    பதிலளிநீக்கு
  32. ஹேமா said...

    //கவிதை நம்பிக்கை தருகிறது.//

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  33. T.V.ராதாகிருஷ்ணன் said...

    //நல்ல கவிதை//

    நன்றி டி வி ஆர் சார்.

    பதிலளிநீக்கு
  34. ஹுஸைனம்மா said...

    ***/ //இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்//

    நீங்களும் என்னைப் போலத்தானா? :-))

    அவ்வப்போது இப்படித்தான் ஒரு வெறுமை சூழ்வது போல்.../***

    இன்னும் அவ்வளவு குழப்பம் வரவில்லை:)! ஆனால் இருப்பதை உணர வேண்டும் என்பதை எப்போதும் கருத்தில் வைத்திருக்க விருப்பம்! நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  35. அன்புடன் அருணா said...

    //அவ்வப்போது இப்படி ஆவதுண்டு!//

    உண்மைதான் அருணா. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. விஜய் said...

    //ரொம்ப பிடித்தது சகோதரி

    வாழ்த்துக்கள் //

    மிக்க நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  37. புதுகைத் தென்றல் said...

    //வெறுமை சூழ்ந்து குழம்பி, தெளிந்துன்னு ஓடும்போதுதானே நிறைய்ய கத்துக்க முடியுது. வார்த்தைகள் அருமை.//

    தெளிந்து ஓடும் போது...உண்மை. அனுபவத்தில் கற்பதே என்றைக்கும் வலிமை தருகிறது. நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  38. aambalsamkannan said...

    ***/ தன்நம்பிக்கையை இழக்கும் சமயங்களில்...

    //இதுவரை கிடைத்த நல்லன யாவும்
    நினைவுக்குவர நன்றி மிகுதியில்
    நெஞ்சம் நனைந்தவனாய்//

    இதை மனதில் கொண்டாலே போதும்.

    நல்ல கவிதை./***

    சரியாய் சொன்னீர்கள். நன்றி ஆம்பல் சாம்கண்ணன்.

    பதிலளிநீக்கு
  39. எம்.எம்.அப்துல்லா said...

    //நன்று.//

    நன்றி அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  40. பாச மலர் / Paasa Malar said...

    //அனைவரும் அனுபவிப்பதை அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி....//

    நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  41. க.பாலாசி said...

    //அனுபவத்தில் கிடைக்கும் வலிமைக்கு நிகரில்லை..... நல்ல கவிதை.... வாழ்த்துக்களும்....//

    மிக்க நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  42. மாதேவி said...

    //"வெறுமையென மயங்கி" பின்பு தெளிந்து..சிரித்து..நல்ல கவிதை.//

    தெளிந்து.. சிரித்து..:)! நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  43. கோமதி அரசு said...

    ***/ராமலக்ஷ்மி,கவிதை அருமை.

    இருப்பதை விட்டு இல்லாததை நாடுவது தான் மனித மனம்.

    இருப்பை உணர்ந்தால் பாரம் மறைந்து மனம் லேசாகி பறக்கலாம்./***

    சரியாகச் சொன்னீர்கள்.

    ***/ //மனதுக்கு வலிமைதர என்றைக்கும் பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும்.//

    உண்மை.அனுபவம்தான் துணை./***

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  44. சந்தனமுல்லை said...

    //அருமையான கவிதையும் கருத்தும்! :-)//

    நன்றி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  45. எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    //அழகு கவிதை!//

    நன்றி சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  46. V.Radhakrishnan said...

    //அருமை.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  47. திருவாரூரிலிருந்து சரவணன் said...

    //கவிதையைப் படித்த பிறகு சற்று யோசித்துப் பார்த்தேன்.எந்த சொத்து போனாலும் கல்விதான் ஒருவருடன் கூடவே வரும் என்று சொல்வார்கள். ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் கூட சளைக்காமல் முயற்சி செய்து வெற்றி பெறும் உண்மைக்கதைகள் ஏராளம். அவர்களுக்கு துணை வருவது அனுபவமே.//

    உண்மைதான் சரவணன். நாமறிந்து எத்தனை பேரைப் பார்க்கிறோம்? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

    //I think this happens to everyone at some stage of life...They start realizing that we were blessed in life while they did not realize or respect it.Nice poem.//

    True. Thanks Mythili.

    பதிலளிநீக்கு
  49. அம்பிகா said...

    ***/ \\வெறுமையென மயங்கிய மனதுக்கு
    வலிமைதர என்றைக்கும்
    பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும் \\
    அருமையான வாழ்க்கை தத்துவம்./***

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  50. Chitra said...

    //இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்


    ..... super! super! super!//

    நன்றி சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  51. malarvizhi said...

    //கவிதை அருமை.படம் அதைவிட அருமை .//

    படத் தேர்வையும் சேர்த்துப் பாராட்டியிருப்பதற்கு நன்றி மலர்விழி.

    பதிலளிநீக்கு
  52. முகுந்த் அம்மா said...

    ***/ கவிதை அருமை


    //இதுவரை கிடைத்த நல்லன யாவும் நினைவுக்குவர நன்றி மிகுதியில் நெஞ்சம் நனைந்தவனாய்//

    நடந்த நல்லவைகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் இது வேண்டும் அது வேண்டும் என்ற ஏக்கம் தோன்றாது. அருமையான வரிகள்./***

    சரியாகச் சொன்னீர்கள் முகுந்த் அம்மா. நன்றி.

    பதிலளிநீக்கு
  53. வருண் said...

    //***நடக்க உதவியாய்
    துணை சென்றக் கைத்தடி
    கேட்காமல் கேட்டது என்னை
    இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்***

    கைத்தடியை வைத்து அடிக்காமல், அறிவுரை சொல்ல வைத்த அழகு, நல்லாயிருக்குங்க, ராமலக்ஷ்மி! :)//

    தடி என்றதும் அடி நினைவுக்கு வந்து விட்டதா:)? நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  54. திகழ் said...

    ***/ /[என்னிடம் வேறுமாதிரியான ‘புரிதல்’ ஒன்று சேமிப்பில் இருக்கிறதே! பதிகையில் வரும் அழைப்பு:)!/

    முதலில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அருமையான கவிதை/***

    ரொம்ப காலமாக ‘புரிதல்’ என்ற தலைப்பில்தான் சேமிப்பில் இருந்தது:)!

    ***/ /வருத்தமாய்...
    குழப்பமாய்...
    பாரமாய்...
    ஏதுமற்றவனாய்...
    நனைந்தவனாய்...
    சிரித்தவனாய்.../

    நீங்க‌ள் எழுதிய‌ எந்த‌க் க‌விதையிலும் இப்ப‌டி அமைந்த‌தில்லை.
    இந்த‌க் க‌விதையில் வ‌ரிக‌ள் அதுவும் இறுதியில் வ‌ந்த‌ விழுவும் வார்த்தைக‌ள் மிக‌வும் இர‌சித்தேன்.

    க‌விதைக்கு ஏற்ற‌ ப‌ட‌மா
    ப‌ட‌த்திற்கு ஏற்ற‌ க‌விதையா

    ஒரு க‌ண‌ம் விய‌ந்தேன்.

    /இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்/

    அற்புதம்
    அறிந்துவிட்டால்
    அடைந்திடுமே ம‌ன‌து
    அனைத்தையும்...

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    /வெறுமையென மயங்கிய மனதுக்கு
    வலிமைதர என்றைக்கும்
    பெற்ற அனுபவங்கள்
    துணையிருக்கும்/

    சரியாகச் சொன்னீர்கள்

    நல்ல கவிதை

    வாழ்த்துகள்//***


    கருத்து படம் வார்த்தைகள் என ஒவ்வொன்றாய் ரசித்துப் பாராட்டி தந்திருக்கும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  55. மோகன் குமார் said...

    //நல்லாருக்குங்க; ஆண் சொல்ற மாதிரி எழுதிருக்கீங்க!!//

    நல்லாயிருக்கே கதை:)! தன்மையில் எழுதும் எல்லாம் படைப்பாளியின் அனுபவம்தானா? ஆணுக்கு ஒருவேளை இப்படிப் புரிய முடியாதோ அல்லது குழப்பமே வராதோ? என்ன சொல்ல வர்றீங்க?

    சும்மா.. நானும் பதிலுக்குக் கேட்டாச்சு:)!

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  56. "உழவன்" "Uzhavan" said...

    //பார்வையிழந்த இளைஞன் கொடுத்த கவியோ இது? :-)//

    இருப்பதைப் பார்க்க மறுப்பவர் கொடுத்த கவிதை என்றும் கொள்ளலாம்:)!

    வருகைக்கு நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  57. மின்மடலில்..

    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'இல்லாத ஒன்று' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th April 2010 01:56:03 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/229368

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தமிழ் மணத்தில் வாக்களித்த 11 பேர்களுக்கும் தமிழிஷில் வாக்களித்த 22 பேர்களுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  58. //புரியாதது புரிந்திட திகைத்து நின்றேன்
    எடுத்துக் குறைத்திட ஏதுமற்றவனாய்//
    நல்லாயிருக்குங்க....
    வரிகள் உணர்த்துகின்றன கவிதையை...

    பதிலளிநீக்கு
  59. நல்ல பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  60. ///இதுவரை கிடைத்த நல்லன யாவும்
    நினைவுக்குவர நன்றி மிகுதியில்
    நெஞ்சம் நனைந்தவனாய்//////


    உண்மை உணரப்பட்ட தருணம் அருமை . சிறப்பான கவிதைதான் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  61. நான் முதல் வருகை. எனக்கு கவிதை என்றால் ரொம்ப பிடிக்கும்.
    சூப்பர் கவிதை+கருத்து.

    இருப்பதை விட்டு இல்லாததை நாடுவது தான் மனித மனம்.

    சுப்பர்.

    பெங்களுரில் எங்கே வாசம், தெரிஞ்சுகலாமா?
    எப்படி உங்களை காண்டாக்ட் செய்வது.

    பதிலளிநீக்கு
  62. //பாதையோரம் காண நேர்ந்த
    பார்வையிழந்த இளைஞன்
    நம்பிக்கையாய் கம்பீரமாய்
    நிமிர்ந்து நடக்க உதவியாய்
    துணை சென்றக் கைத்தடி
    கேட்காமல் கேட்டது என்னை
    இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்//

    அருமையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  63. அமைதி அப்பா said...

    //சிந்திக்க தூண்டும் கவிதை.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  64. சே.குமார் said...

    ***/ //புரியாதது புரிந்திட திகைத்து நின்றேன்
    எடுத்துக் குறைத்திட ஏதுமற்றவனாய்//
    நல்லாயிருக்குங்க....
    வரிகள் உணர்த்துகின்றன கவிதையை.../***

    ஞானம் பிறக்கும் கணம்:)! கருத்துக்கு நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  65. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

    // அருமை//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  66. சசிகுமார் said...

    //நல்ல பதிவு அக்கா//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  67. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    ***/ ///இதுவரை கிடைத்த நல்லன யாவும்
    நினைவுக்குவர நன்றி மிகுதியில்
    நெஞ்சம் நனைந்தவனாய்//////


    உண்மை உணரப்பட்ட தருணம் அருமை . சிறப்பான கவிதைதான் . பகிர்வுக்கு நன்றி/***

    வருகைக்கு நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  68. Vijis Kitchen said...

    // நான் முதல் வருகை. எனக்கு கவிதை என்றால் ரொம்ப பிடிக்கும்.
    சூப்பர் கவிதை+கருத்து.

    இருப்பதை விட்டு இல்லாததை நாடுவது தான் மனித மனம்.

    சுப்பர்.//

    நன்றி விஜி.

    //பெங்களுரில் எங்கே வாசம், தெரிஞ்சுகலாமா?
    எப்படி உங்களை காண்டாக்ட் செய்வது.//

    மெயில் ஐடி கொடுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  69. சந்ரு said...

    ***/ //பாதையோரம் காண நேர்ந்த
    பார்வையிழந்த இளைஞன்
    நம்பிக்கையாய் கம்பீரமாய்
    நிமிர்ந்து நடக்க உதவியாய்
    துணை சென்றக் கைத்தடி
    கேட்காமல் கேட்டது என்னை
    இருப்பதை உணராத உனக்கு
    இல்லாத ஒன்று ஆகின்றதோ பாரமாய்//

    அருமையான வரிகள்.../***

    நன்றி சந்ரு.

    பதிலளிநீக்கு
  70. இல்லாத ஒன்றுதான் எப்போதும் எப்படியோ பாரமாகி விடுகிறது. அருமையான வார்த்தை பிரயோகம். அழகான கருத்துள்ள கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  71. கவிநயாவை வழிமொழிகிறேன்!!! அருமையா இருக்கு ஃபிரண்ட்!!!!

    பதிலளிநீக்கு