செவ்வாய், 27 அக்டோபர், 2009

இன்றின் கணங்கள் [இலக்கியப்பீடம் இதழில்..]


வெளிச்சத்தில் காணநேரும்
ஒளிச் சிதறல்களோ
விளக்கு அலங்காரங்களோ
ஆச்சரியம் அளிப்பதில்லை.
அற்புத உணர்வைக்
கொடுப்பதுமில்லை.
இருளிலேதான் அவை
உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
உயர்வாகத் தெரிகின்றன.

வாழ்வின் வசந்தகாலத்தில்
வாசலில் விரிந்துமலர்ந்து
சிரிக்கின்ற
வண்ணக் கோலங்கள்
எண்ணத்தை நிறைப்பதில்லை
கண்ணுக்கும் விருந்தாவதில்லை.
பருவங்கள் மாறிமாறி
வரும் உலகநியதி
வாழ்வின்மீதான நம்
பார்வையையும் மாற்றிடத்தான்-
போன்ற
சிந்தனைகள் எழுவதில்லை,
சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.

இன்னல் எனும்ஒன்று
கோடை இடியாகச்
சாளரத்தில் இறங்குகையிலோ-
திறக்கின்ற சன்னலின்ஊடாகத்
திடுமெனப் புகுந்து
சிலீரெனத் தாக்கும்
வாடைக் காற்றாக
வாட்டுகையிலோதான்-
துடித்துத் துவளுகின்ற
கொடியாய் மனம்
பற்றிப் படர்ந்தெழும்
வழிதேடித் திகைத்து-
கவனிக்க மறந்த
இன்றின் சின்ன சின்ன
சந்தோஷக் கணங்களை
கவனமாய் உணர்ந்து-
சிலிர்த்துச் சிறகடித்துப்
பறக்கிறது வானிலே!
தவிர்க்க முடியாத
தவறும் இல்லாத
இயல்புதானே
இது வாழ்விலே!

*** *** ***

படம்: இணையத்திலிருந்து..



*அக்டோபர் 2009 இலக்கியப்பீடம் மாத இதழில்:



















இங்கு வலையேற்றிய பின் இக்கவிதை..

49 கருத்துகள்:

  1. மிக அழகாய் இருக்குங்க

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. வாஸ்தவம் தான்! கஷ்ட்டம் வந்தாதானே இன்பத்தை பற்றி தெரியுது. பகலில் மத்தாப்பு கொளுத்தினா என்ன பெருசா இன்பம் வந்திட போகுது. இருளில் தான் அதன் அருமை தெரியுது. வாஸ்தவமான நல்ல கவிதை தான் பிரண்ட்!!!

    பதிலளிநீக்கு
  3. //இருளிலேதான் அவை
    உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
    உயர்வாகத் தெரிகின்றன.//

    நிதர்சனம்..

    வாழ்த்துக்கள் மேடம்..

    பதிலளிநீக்கு
  4. //பருவங்கள் மாறிமாறி
    வரும் உலகநியதி
    வாழ்வின்மீதான நம்
    பார்வையையும் மாற்றிடத்தான்///

    சிந்தனையினை மேம்படுத்திட செய்யும் வரிகள்!

    //சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!//

    உணர்வது - நிச்சயம் மிகப்பெரிய கொடைதான் - எத்தனையோ பேர் உணர இயலாமல் உணர முடியாமல் வாழ்வின் எத்தனை எத்தனையோ இன்ப தருணங்களை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர் :(

    நிறைவான கவிதை! :)

    பதிலளிநீக்கு
  5. படம் ஜொலிக்குது கவிதை மாதிரியே

    பதிலளிநீக்கு
  6. வரிகளும், வார்த்தைகளும் அழகாய் இருக்குங்கோ>>>>

    பதிலளிநீக்கு
  7. ***பருவங்கள் மாறிமாறி
    வரும் உலகநியதி
    வாழ்வின்மீதான நம்
    பார்வையையும் மாற்றிடத்தான்***

    இப்படி இதுவரை நான் யோசித்த தில்லைங்க!

    ******************

    ஆமாங்க, இருள்தான் வெளித்தின் மதிப்பை உணரவைக்கிறது.

    இன்னல்கள்தான் சந்தோஷ கணங்களை எண்ணி மகிழவைக்கிறது.

    ஏன்னு தெரியலைங்க, இந்தக் கவிதை ஒரு சோகமான உணர்வைத் தருகிறது எனக்கு :)

    **************
    இலக்கியபீட இதழில் இடம்பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  8. அருமை

    இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்...

    மகிழ்ச்சியின் அருமை சோகத்தில்தான் தெரியும்...

    அருமையான எண்ணக் கோர்வை..(சிதறல் என்று சொல்ல மாட்டேன்)

    வாழ்துக்கள்...

    அப்புறம் நம்ம கதை எப்படி இருக்குன்னு சொல்றது.. (பி.கு. கதைய, கதையாத்தான் பார்க்கணும் சகோதரி )

    பதிலளிநீக்கு
  9. புத்தகத்திலும் படித்தேன் இங்கும் படித்தேன்! பாராட்டுகக்ள் ராமலஷ்மி!

    பதிலளிநீக்கு
  10. அருமை.
    /*பற்றிப் படர்ந்தெழும்
    வழிதேடித் திகைத்து-
    கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!*/
    உண்மை.

    கவிதையின் ஒவ்வொரு வரியும் கவனிக்க மறந்த கணங்களைக் கூறுகின்றன.

    பதிலளிநீக்கு
  11. அழகான கவிதை..எப்படித்தான் அதற்கேற்ற படங்களைத் தேடிப் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை..:-)

    /கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-/

    அருமை!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் மேடம்.

    யதார்த்தமான கவிதை!

    பதிலளிநீக்கு
  13. //கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து//

    அருமையான வரிகள் அக்கா.... உணர்ந்து தேடிப் போம்போது அக் கணங்கள் கைய விட்டுப் போய்டக் கூடாதேங்கிரதுதான் எப்போதும் என் கவலை :(((

    அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
  14. இலக்கியப்பீட இதழில் வந்த கவிதை அற்புதம்.

    உங்களை நிச்சியம் உயர்ந்த பீடத்தில் ஏற்றி வைக்கும் நிச்சியம்.

    //இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக்கணங்களை
    கவனமாய் உணர்ந்து
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!//

    போனால் வராது இன்றைய பொழுது
    என்பது போல் சந்தோஷக்கணங்களும்
    அப்படிதான்.

    பதிலளிநீக்கு
  15. //கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!//
    அழகான ஆழமான வரிகள் தோழி. அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. கவிதை(கள்) said...

    //மிக அழகாய் இருக்குங்க

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    பதிவுக்கு மட்டுமின்றி முத்துச்சரத்துக்கும் இது உங்கள் முதல் வருகை. நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  17. அபி அப்பா said...

    //வாஸ்தவம் தான்! கஷ்ட்டம் வந்தாதானே இன்பத்தை பற்றி தெரியுது. பகலில் மத்தாப்பு கொளுத்தினா என்ன பெருசா இன்பம் வந்திட போகுது. இருளில் தான் அதன் அருமை தெரியுது. வாஸ்தவமான நல்ல கவிதை தான் பிரண்ட்!!!//

    ஆம், சிலர் எல்லா இனியக் கணங்களையும் கவனித்து ரசிக்கத் தெரிந்திருக்கிறார்கள். சிலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் என சிந்திக்க வேண்டியதுதான். அழகான புரிதலுடனான கருத்துக்கு நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  18. //இருளிலேதான் அவை
    உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
    உயர்வாகத் தெரிகின்றன.//

    துவக்கமே பிரகாசிக்கிறது.

    பருவங்கள் மாறிமாறி
    வரும் உலகநியதி
    வாழ்வின்மீதான நம்
    பார்வையையும் மாற்றிடத்தான்-//

    தெளிவான சிந்தனை.

    இலக்கியப்பீடம் இதழில் கால்பதித்தமைக்கும், அது தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. பிரியமுடன்...வசந்த் said...

    ***/ //இருளிலேதான் அவை
    உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
    உயர்வாகத் தெரிகின்றன.//

    நிதர்சனம்..

    வாழ்த்துக்கள் மேடம்../***

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  20. ஆயில்யன் said...

    ***/ //பருவங்கள் மாறிமாறி
    வரும் உலகநியதி
    வாழ்வின்மீதான நம்
    பார்வையையும் மாற்றிடத்தான்///

    சிந்தனையினை மேம்படுத்திட செய்யும் வரிகள்!/***

    சிந்தனை சரிதானே:)?
    __________________________

    ***/ //சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!//

    உணர்வது - நிச்சயம் மிகப்பெரிய கொடைதான் - எத்தனையோ பேர் உணர இயலாமல் உணர முடியாமல் வாழ்வின் எத்தனை எத்தனையோ இன்ப தருணங்களை தொலைத்துக்கொண்டிருக்கின்றனர் :(/***

    ஆம் ஆயில்யன், அதில் நாமும் ஒருவராகி விடக் கூடாதே எனும் கவனம்தான். உணர்ந்து வாழத் தெரிந்தவர்கள் முன்னர் என் 'ரசிகன்' கவிதையில் சொல்லியிருந்த மாதிரி வரம் வாங்கி வந்தவர்களே!
    ____________________________

    // நிறைவான கவிதை! :)//

    நிறைவான பாராட்டு. நன்றி ஆயில்யன்:)!

    பதிலளிநீக்கு
  21. சின்ன அம்மிணி said...

    //படம் ஜொலிக்குது கவிதை மாதிரியே//

    நன்றி அம்மிணி, இதயத்தில் பிறந்த கவிதைக்கு இணையத்தில் கிடைத்தது படம்:)!

    பதிலளிநீக்கு
  22. ஆ.ஞானசேகரன் said...

    // வரிகளும், வார்த்தைகளும் அழகாய் இருக்குங்கோ>>>>//

    மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  23. வருண் said...

    //***பருவங்கள் மாறிமாறி
    வரும் உலகநியதி
    வாழ்வின்மீதான நம்
    பார்வையையும் மாற்றிடத்தான்***

    இப்படி இதுவரை நான் யோசித்த தில்லைங்க!//

    இனிமேல் யோசிப்போம்:)! எல்லோரும் நினைவில் நிறுத்திக் கொள்வோம்.

    ******************

    //ஏன்னு தெரியலைங்க, இந்தக் கவிதை ஒரு சோகமான உணர்வைத் தருகிறது எனக்கு :)//

    இன்னலைப் பற்றிய வரிகளால் இருக்கலாம்:(!

    *******************
    //இலக்கியபீட இதழில் இடம்பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  24. ஈ ரா said...

    //அருமை

    இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்...

    மகிழ்ச்சியின் அருமை சோகத்தில்தான் தெரியும்...

    அருமையான எண்ணக் கோர்வை..//

    நன்றி ஈ ரா, கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும்.

    உங்கள் போட்டிக் கதையைக் கதையாகப் பார்த்து கருத்தும் சொல்லி விட்டேன் ஈ ரா:)!

    பதிலளிநீக்கு
  25. ஷைலஜா said...

    //புத்தகத்திலும் படித்தேன் இங்கும் படித்தேன்! பாராட்டுகக்ள் ராமலஷ்மி!//

    நீங்கள் தரும் தொடர் ஊக்கமே காரணம் ஷைலஜா, மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  26. அமுதா said...

    ***/ அருமை.
    /*பற்றிப் படர்ந்தெழும்
    வழிதேடித் திகைத்து-
    கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!*/
    உண்மை.

    கவிதையின் ஒவ்வொரு வரியும் கவனிக்க மறந்த கணங்களைக் கூறுகின்றன./***

    ரசனைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  27. சந்தனமுல்லை said...

    // அழகான கவிதை..எப்படித்தான் அதற்கேற்ற படங்களைத் தேடிப் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை..:-)//

    எல்லாம் கூகுள் ஆண்டவர் அருள்தான்:)!

    *** /கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-/

    அருமை!/***

    நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  28. அமிர்தவர்ஷினி அம்மா said...

    // வாழ்த்துக்கள் மேடம்.

    யதார்த்தமான கவிதை!//

    நன்றி அமித்து அம்மா.

    பதிலளிநீக்கு
  29. தமிழ் பிரியன் said...
    // Intha kavithai engalin anubavangalai ezuthiyathu pola irukku.... :-)//

    அனுபவத்தில் பார்ப்பதும் கேட்பதும் உணர்ந்து அறிவதும்தானே கவிதைகளாகின்றன:)? கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  30. susi said...

    ***? //கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து//

    அருமையான வரிகள் அக்கா.... உணர்ந்து தேடிப் போம்போது அக் கணங்கள் கைய விட்டுப் போய்டக் கூடாதேங்கிரதுதான் எப்போதும் என் கவலை :((( /***

    உண்மைதான் சுசி, கையில் கிடைக்கையிலேயே ரசிக்கத் தெரிந்திடுவோம்.

    //அழகான கவிதை.//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  31. கோமதி அரசு said...
    //இலக்கியப்பீட இதழில் வந்த கவிதை அற்புதம்.

    உங்களை நிச்சியம் உயர்ந்த பீடத்தில் ஏற்றி வைக்கும் நிச்சியம்.//

    பாராட்டுக்கும் தங்கள் ஆசிகளுக்கும் நன்றி கோமதி அரசு.

    //போனால் வராது இன்றைய பொழுது
    என்பது போல் சந்தோஷக்கணங்களும்
    அப்படிதான்.//

    உண்மை, அழகாய் சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. அன்புடன் அருணா said...

    // பூங்கொத்தும்மா....அருமை!//

    மிக்க நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  33. ஜெஸ்வந்தி said...

    ***/ //கவனிக்க மறந்த
    இன்றின் சின்ன சின்ன
    சந்தோஷக் கணங்களை
    கவனமாய் உணர்ந்து-
    சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!//

    அழகான ஆழமான வரிகள் தோழி. அருமை. தொடருங்கள்./***

    கருத்துக்கும் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  34. //இருளிலேதான் அவை
    உயிர்ப்பாகி ஜொலிப்பாகி
    உயர்வாகத் தெரிகின்றன.//
     
    ஆரம்பமே அசத்தல். பீடா சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் போய் பிரியாணி கொடுத்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வான்.
     
    //இன்னல் எனும்ஒன்று
    கோடை இடியாகச்
    சாளரத்தில் இறங்குகையிலோ//
     
    இன்னல்கள்தான் ஆறறிவு மிருகத்தை மனிதனாக மாற்றுகிறது.
     
    //சிலிர்த்துச் சிறகடித்துப்
    பறக்கிறது வானிலே!//
     
    வானிலே பறக்கட்டும். வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  35. goma said...

    //just read sirikkum budha kavithai in youthvikatan
    congrats//

    உங்கள் கேள்வியில் பிறந்த கவிதை அது:)! மிக்க நன்றி கோமா. விகடன்.காம் முகப்பிலும் அதற்கு இணைப்பு தரப் பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. சதங்கா (Sathanga) said...

    // இலக்கியப்பீடம் இதழில் கால்பதித்தமைக்கும், அது தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும், கூடவே தொடரும் ஊக்கத்துக்கும் நன்றிகள் சதங்கா.

    பதிலளிநீக்கு
  37. தமயந்தி said...

    // வாழ்த்துக்க‌ள் அக்கா..//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமயந்தி.

    பதிலளிநீக்கு
  38. " உழவன் " " Uzhavan " said..
    //ஆரம்பமே அசத்தல்.//

    நன்றி உழவன்.

    //பீடா சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் போய் பிரியாணி கொடுத்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வான்.//

    உவமை அருமை.

    //வானிலே பறக்கட்டும். வாழ்த்துக்கள் :-)//

    கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  39. கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை!
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    //கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை!
    வாழ்த்துக்கள்//

    நன்றி சரணக்குமார், பாராட்டுக்கும் முத்துச் ச்ரத்துக்கு த்ந்திருக்கும் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  41. சிறப்பான கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //சிறப்பான கவிதை. வாழ்த்துகள்.//

    நன்றி தாமிரா.

    பதிலளிநீக்கு