புதன், 2 ஏப்ரல், 2014

நாம் என்ன செய்ய முடியும்? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (4)

இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில்
சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல்
மொத்தத்தில் அது ஒரு ஆற்றல்
அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக
எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக.
தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன
முரட்டுத்தனமும், சுயநலமும்,
நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும்.

நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை?
எதுவும் செய்ய முடியாது.

முடிந்தவரை விலகி இருப்போம்
துஷ்டரை, விஷமிகளை, முட்டாள்களைக் கண்டது போல்.
ஆனால் ஜாக்கிரதை, நம்மிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள
சட்டங்கள் இயற்றியிருக்கிறது மனிதம்
எந்தக் காரணமும் இல்லாமல் அது நம்மைக் கொல்லக் கூடும்
அதனிடமிருந்து தப்பிக்க சூட்சமம் வேண்டும்

தப்பிக்கிறார்கள் வெகு சிலர்

நாம் தப்பிப்பது நம் கையில்
சரியான திட்டம் வேண்டும்

தப்பித்த எவரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை
உயர்ந்த, புகழ்பெற்ற மனிதர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன்
அவர்களாலும் தப்பிக்க முடியவில்லை
மனிதத்துக்கு மட்டுமே அவர்கள்
உயர்ந்தவர்களாய் புகழ் பெற்றவர்களாய் இருக்கிறபடியால்.

என்னாலும் தப்பிக்க முடியவில்லை

ஆனால் மறுபடி மறுபடி முயன்று கொண்டே இருப்பதில்
நான் தோற்றுப் போகவில்லை.

நம்புகிறேன் என் மரணத்துக்கு முன்னால்
அடைந்து விடுவேன் என் வாழ்க்கையை.
*

மூலம்:
What can we do?
by
Charles Bukowski



**

படங்கள் நன்றி: இணையம்

26 ஏப்ரல் 2014, நவீன விருட்சத்தில் வெளியான தமிழாக்கக் கவிதை. நன்றி நவீன விருட்சம்!
*** 

16 கருத்துகள்:

  1. அற்புதமான கவிதை
    கருத்தும் உணர்வும் சிறிதும் மாறாது
    மொழிமாற்றம் செய்தவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. புரிவது போலத்தான் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  3. துஷ்டரை கணடால் விலக வேண்டும்
    வேறு என்ன செய்ய முடியும்.

    பதிலளிநீக்கு
  4. /// நாம் தப்பிப்பது நம் கையில்
    சரியான திட்டம் வேண்டும் ///

    அருமை... உண்மையும் கூட...

    தமிழாக்கத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  5. @கோமதி அரசு,

    மனிதம் அற்றுப் போய் விட்டதை மறைமுகமாகச் சாடுகிறார் கவிஞர். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை! கடைசி இரு வரிகளும் அற்புதம்!

    பதிலளிநீக்கு
  7. கவிதையோடு பயணித்துப் புரிந்துகொண்டு, நன்றாக தமிழாக்கம் செய்துள்ளீர்கள். நவீன விருக்ஷத்திலும் நேற்று பார்த்தேன். நன்றிகள் பல.
    -ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  8. கவிதை சொல்லும் விஷயம் மிகச் சிறப்பு. ரசித்தேன்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  9. வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin