செவ்வாய், 26 நவம்பர், 2013

எண்ணெழுத்து.. - ஐநூறாவது பதிவு

ஐந்தரை வருடங்கள்.. 500 பதிவுகள்..

மூன்று இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து அறுநூறு+ பக்கப் பார்வைகளை எட்டி நிற்கும் முத்துச்சரத்தின் ஐநூறாவது முத்து!

எண்ணிக்கை, கணக்கு அவசியம்தானா என்கிற கேள்வியைப் பின்னுக்குத் தள்ளுகிறது இங்கே பெறுகிற ஊக்கம். தொடர்ந்து இயங்க உரமாக இருப்பதும் அதுவே.  சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி!

***

தினமொழிகள் பத்து.. தொகுப்பது தொடர்கிறது..
எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..

1. நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போல. எல்லா நேரமும் காணக் கிடைக்காவிட்டாலும், இருக்கிறார்கள் நமக்காக எப்போதும்.

வியாழன், 21 நவம்பர், 2013

நோயல்ல.. குறைபாடே..! - "ஆட்டிசம் சில புரிதல்கள்" புத்தக விமர்சனம் - கல்கியில்..

யெஸ் பாலபாரதியின் "ஆட்டிசம் சில புரிதல்கள்" நூல் குறித்த எனது விமர்சனம் 24 நவம்பர் 2013 கல்கியில்..
 நன்றி கல்கி!
சற்றே விரிவாகப் பார்ப்போம் இங்கே...

டப்பு ஆண்டில் 88-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள நம் நாட்டில் பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலே நிலவுகிறது.

‘மனநிலை பாதிப்பு வேறு, ஆட்டிசம் வேறு என்கிற தெளிவுகூட நம்மவர்கள் மத்தியில் இல்லை’ என வருத்தபடுகிற, எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நூலாசிரியர் யெஸ். பாலபாரதி, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அவர்தம் பெற்றோர்கள் நலன் கருதி விரிவாக அலசியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே “ஆட்டிசம் சில புரிதல்கள்”!

பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரிவரப் பயன்படுத்த முடியாததால் இயல்பான நடவடிக்கைகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்டிசம், ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல எனத் தெளிவு படுத்துகிறது நூல். ஐந்து வயதை எட்டினால்தான் இக்குறைப்பாட்டை அடையாளம் காணவே முடியும் என்று சொன்ன அதே மருத்துவ உலகம் விரைவாக அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்திருக்கிறது. எவ்வளவு சீக்கிரமாக பாதிப்பைக் கண்டு கொள்கிறோமோ அத்தனை சீக்கிரத்தில் சரியான பயிற்சிகளைத் தொடங்குவதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு, முற்றிலுமாகவே ஒழுங்குபடுத்திடும் வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

ம்மைச் சுற்றியிருக்கும் எந்த குழந்தையானாலும் அவர்களிடம் ஆட்டிசம் இருக்கிறதா என அடையாளம் காண்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறோம். இதை நூலின் முக்கிய நோக்கமாகவே கருதி, இருபது வழிகளையும் படங்களுடன் வாசிப்பவர் மனதில் நிறுத்துகிறது நூல். அவற்றில் சில: ஒதுங்கி இருப்பது; பொருத்தமின்றி பொருட்களைப் பற்றுவது; கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது; மற்ற குழந்தைகளுடன் பழக ஆர்வம் காட்டாமை; தொடப்படுவதை, அணைக்கப்படுவதை விரும்பாமலிருப்பது; அச்சம் ஆபத்தை உணராதிருப்பது; ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது; சில செயல்களைச் சரியாகச் செய்தாலும் சமூகப் புரிதலற்று இருப்பது; மாற்றங்களை அசெளகரியமாய் உணருவது; வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாதிருப்பது; தேவைகளை உணர்த்தப் பெரியவர்களைக் கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுவது; அதீதப் பதட்டம்; காரணமற்ற அழுகை, சிரிப்பு; குதிப்பது, கைகளைத் தட்டுவது; வலியை உணராதிருப்பது, சுழலும் பொருட்களை இரசிப்பது, அதிலேயே ஆழ்ந்து போவது; சுட்டுவிரலால் சுட்டிக்காட்டத் தெரியாதது; பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பாராமல், காது கேளாதது போலிருப்பது போன்றன.

ஆட்டிசத்தின் வரலாறு, ஸ்பெக்ட்ரம் டிஸார்டர், எது சரி எது தவறு, சென்சரி பிரச்சனைகள், சிகிச்சை முறைகள், குழந்தைகளைக் கையாளும் முறை, பெற்றோர்/கவனிப்போரின் பங்கு, பத்தியங்கள்,ஒவ்வாமைகள் எனப் பல தகவல்களை ஆங்கில நூல்களிலிருந்தும், இணையத்திலிருந்தும் ஆய்வு செய்து மட்டுமேயன்றி நேரடியாக மருத்துவர்களையும், தெரபிஸ்டுகளையும், பாதிப்புக்குள்ளான பெற்றோரையும் சந்தித்துப் பேசி அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் தயாரித்திருக்கிறார் யெஸ்.பாலபாரதி கட்டுரைகளை.

ங்கள் குழந்தைகள் குறித்து பெருமையடையுங்கள், நாட்கள் ஓடுவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள், தேவையற்ற குற்றவுணர்வைத் தவிர்த்திடுங்கள், உங்களை நீங்களே நம்புங்கள், வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்’ போன்ற ஆலோசனைகள் உட்பட ஜீன் அவிரம் (Jene Aviram) எனும் மேலை நாட்டவர், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தையின் பெற்றோருக்குத் தந்திருக்கும் பத்துகட்டளைகளையும் தமிழில் தந்திருப்பது  நம்பிக்கையை விதைக்கிறது. அத்துடன் நின்றிடாமல், தங்கள் குழந்தையின் எதிர்காலம்  குறித்துக் கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கிற பெற்றோரின் நிலை குறித்து சங்கடப்படுகிற ஆசிரியர்  அப்படி சோர்ந்து போகத் தேவையில்லை என்பதற்காக ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்டாலும் உலகின் பார்வைத் தம் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றிச் சொல்லி மேலும் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

இந்நூல், தங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்குள்ளானதையே உணராமலிருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்கேனும் மட்டுமின்றி, சாதாரணக் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஆட்டிசக் குழந்தைகளைப் புரிந்து கொள்ள, ஒதுக்காமல் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய, அவர்களது உரிமைக்காக வாதிட..,  துணை நிற்குமானால் உள்ளபடி மகிழ்வேன் என்கிறார் நூலாசிரியர்.
*

ஆட்டிசம் சில புரிதல்கள்
பக்கங்கள்:80 விலை.ரூ.50
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் (அனைத்து கிளைகளிலும்).

தொலைபேசி எண்கள்: 044 24332424, 24332924, 24339024.
**

திங்கள், 18 நவம்பர், 2013

இரண்டு வர்ணங்கள் - நவம்பர் PiT

எளிதான அதே நேரம் சவாலான ஒரு தலைப்பைத் தந்திருக்கிறார், இம்மாதப் போட்டி நடுவரான நித்தி ஆனந்த்.

இரண்டு வர்ணங்கள். போட்டி அறிவிப்பு இங்கே.

படமாக்க சுலபமான தலைப்பே. ஆயினும் எடுக்கிற படங்களில் ஆதிக்கம் செலுத்தப் போகும் அந்த இரண்டே இரண்டு வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி இடும் வகையிலோ அல்லது ஒன்றை மற்றொன்று மெருகேற்றும் விதத்திலோ அமைவதில்தான் சுவாரஸ்யம் கூடுகிறது. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாம்.

#1 வெள்ளை ரோஜாவின் மென்மைக்கு மெருகூட்டும் இளஞ்சிவப்பு

#2 காமதேனு

வெள்ளி, 15 நவம்பர், 2013

பல பூக்களும் ஒரு சூரியனும் சில மனிதர்களும் - குங்குமம் தோழியில்.. வனிலா பாலாஜியின் ஒளிப்பட அனுபவங்கள்

ஒளியையும் நிழலையும் அழகாகக் கையாண்டு தன் படங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர் வனிலா பாலாஜி. 16 நவம்பர் 2013 குங்குமம் தோழியின் “கண்கள்” பகுதிக்காக அவர் எனக்களித்த நேர்காணல்..

நன்றி குங்குமம் தோழி:)!

பல பூக்களும் ஒரு சூரியனும் சில மனிதர்களும்

# பக்கம் 56

வியாழன், 14 நவம்பர், 2013

நம்பிக்கை நட்சத்திரங்கள் - குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

#1 நாளையத் தலைவர்கள்.. நம்பிக்கை நட்சத்திரங்கள்..

#2  வேர்களைக் காட்டித் தருவோம். சிறகுகளைச் சரியாக விரிப்பார்கள்.

#3 சந்தோஷத்தை நாடுகிறார்கள். அதே போல அன்பையும்.

#4  ஊக்கம் கொடுங்கள். குழந்தைகள் எதிலே சிறந்தவர்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியாது.

செவ்வாய், 12 நவம்பர், 2013

காட்டுத் தீ - கமலா தாஸ் கவிதை (4) - மலைகளில்..

சமீபமாக, எனக்குள் ஒரு பசியை உணருகிறேன்
காட்டுத் தீயின் பேராசையுடன்
காண்பதையெல்லாம் கபளீகரம் செய்கிற அது
ஒவ்வொன்றை அழிக்கையிலும்
அதிக வெறியுடன் அதிக பிரகாசத்துடன்
கனன்று எரிகிறது.
தள்ளு வண்டியில் அமர்ந்திருக்கும்
தலையில் முடி முளைக்காத குழந்தையை
நான் மட்டும்தான் பார்ப்பதாய் நினைக்கிறீர்கள்,
ஆனால் நீங்களும்தான்,
மரத்துக்குப் பின்னாலிருக்கும் ஒடிசலான காதலர்களே,
நீவிரும்தான்..
சூரிய ஒளியில் தலை முடிகள் மின்ன
கையில் செய்தித்தாளுடன் நிற்கும் வயதானவரே,
நீவிரும்தான்..

வியாழன், 7 நவம்பர், 2013

கதை நேரங்கள் - தினமணி தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..

சுவாரஸ்யங்களுக்குக் குறைவில்லாமல்
தத்தமது அனுபவங்களைக் கலந்து
சொல்லி வந்தார்கள் கதைகளை
உற்சாகமாய் உறவுகள்
உச்சுக் கொட்டும் குழந்தைக்கு.

மாமா அத்தைகளின் கதைகளில்
சாகசங்களும் திரும்பங்களும்
அதிகமாய் இருந்தன.

அன்பாலும் பரிவாலும்
நெய்யப்பட்டப் பாசவலைகளாகப்
பாட்டிகளின் கதைகள்.

குடும்பத்தின், நாட்டின், உலகின்
வரலாற்றுக்கு முக்கியத்துவம் தந்த
தாத்தாக்களின் கதைகளில்
அவர்கள் ஆற்றிய பங்கும்
அவசியம் இடம் பெற்றிருந்தன.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

அடை மழை (சிறுகதை) - ‘தி இந்து’ தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..

க்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.

“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா குட்டி?” புன்னகைத்த செல்லம் “இதையும் சேத்துக்க” என ஒரு காலிஃப்ளவரை தூக்கிக் கூடையில் போட்டார்.

கிடுகிடுவெனெ இருபது சாமான்களுக்கும் விலையைப் போட்டுக் கூட்டி, ‘சரக்’ எனக் கிழித்து ஆறுமுகம் நீட்டிய துண்டுக் காகிதத்தை ‘வெடுக்’ எனப் பிடுங்கினார் பின்னாலேயே வந்து நின்ற செல்லத்தின் கணவர் சுந்தரம்.


“கம்ப்யூட்டரை விடல்லா வேகமாப் போடுத பில்ல? இரு.. இரு கூட்டிப் பாக்குறேன்” என்றபடி எண்கள் மேல் குறும்பாகக் கண்களை ஓட்டத் தொடங்கினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin