ஞாயிறு, 13 மே, 2012

வைரங்கள் - பண்புடன் இதழில்..


சிதறிக் கிடந்த
நட்சத்திரங்களின் மீது
ஏறி ஏறி விரைகிறான்
பாலாய்ப்
பொழிந்து கொண்டிருந்த
பிளாட்டினப் பந்தை
எட்டிப் பிடிக்க.

கால் பதித்துக் கடக்கிற
ஒவ்வொரு விண்மீனும்
அந்நிலவினும் பிரகாசமான
பேரொளி வைரங்களாக
மின்னிக் கொண்டிருந்ததை

நின்று கவனிக்கவோ
திரும்பிப் பார்க்கவோ
நேரமின்றி.
***

11 மே 2012 பண்புடன் இணைய இதழில்.., நன்றி பண்புடன்!

படம்: கவிதையுடன் வெளியானது.

30 கருத்துகள்:

  1. வித்தியாசமாக இருக்கிறது இந்தக் கவிதை ...!

    பதிலளிநீக்கு
  2. பிளாட்டினப் பந்து ...நவீன கற்பனை..அருமை ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  3. "ஒரு குறிப்பிட்ட இன்பத்தையே நிலையாக நாடுபவன் அந்த இன்பம் கிடைக்காது என்பதோடு மற்ற இன்பங்களைத் தேடும் வாய்ப்பையும் இழக்கிறான்" என்று சின்ன வயதில் தமிழ்வாணன் பொன்மொழியாக கல்கண்டு இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. நின்று ரசிக்க நேரமில்லாமல்தான் மனிதன் அலைகிறான். அருமையான வரிகளுடன் நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  5. அவசர உலகை சின்ன வரிகளில் அடக்கிய கவிதை.அழகு !

    பதிலளிநீக்கு
  6. கவிதை உணர்த்திய பொருள் பிரமாதம்! வார்த்தைப் பிரயோகங்களும் வித்தியாசமாக அமைந்து ரசிக்க வைத்தன!

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசம் என்றாலும் நிதர்சனம்..அருமை..வாழ்த்துகள் ராமலக்ஷ்ம்

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை...வித்தியாசமான சிந்தனை....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  10. ப்ளாட்டின நிலவா:)

    வழியில் கிடக்கும் அழகை மறந்து
    எட்டாத ஒன்றை விரும்பும் மனித மனம்.
    அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. வரலாற்று சுவடுகள் said...

    //வித்தியாசமாக இருக்கிறது இந்தக் கவிதை ...!//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சக்தி said...

    //பிளாட்டினப் பந்து ...நவீன கற்பனை..அருமை ராமலக்ஷ்மி//

    நன்றி சக்தி.

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம். said...

    //"ஒரு குறிப்பிட்ட இன்பத்தையே நிலையாக நாடுபவன் அந்த இன்பம் கிடைக்காது என்பதோடு மற்ற இன்பங்களைத் தேடும் வாய்ப்பையும் இழக்கிறான்" என்று சின்ன வயதில் தமிழ்வாணன் பொன்மொழியாக கல்கண்டு இதழில் படித்தது நினைவுக்கு வருகிறது.//

    அழகான பொன்மொழி. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. Rathnavel Natarajan said...

    //அருமை.
    வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. விச்சு said...

    //அருமையான வரிகளுடன் நல்ல கவிதை.//

    நன்றி விச்சு.

    பதிலளிநீக்கு
  16. ஹேமா said...

    //அவசர உலகை சின்ன வரிகளில் அடக்கிய கவிதை.அழகு !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  17. கணேஷ் said...

    //கவிதை உணர்த்திய பொருள் பிரமாதம்! வார்த்தைப் பிரயோகங்களும் வித்தியாசமாக அமைந்து ரசிக்க வைத்தன!//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  18. Lakshmi said...

    //கவிதை அழகு. வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பாச மலர் / Paasa Malar said...

    //வித்தியாசம் என்றாலும் நிதர்சனம்..அருமை..வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  20. Nithi Clicks said...

    //கவிதை அருமை...வித்தியாசமான சிந்தனை....வாழ்த்துக்கள்//

    நன்றி நித்தி.

    பதிலளிநீக்கு
  21. சுசி said...

    //நிஜம் அக்கா..//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  22. சே. குமார் said...

    //அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  23. வல்லிசிம்ஹன் said...

    //ப்ளாட்டின நிலவா:)

    வழியில் கிடக்கும் அழகை மறந்து
    எட்டாத ஒன்றை விரும்பும் மனித மனம்.
    அருமை ராமலக்ஷ்மி.//

    காலத்துக்கேற்ற கற்பனை:)! நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  24. கையிலிருக்கும் பொருளின் அருமை அறியாது ஓடிக்கொண்டிருக்கும் அவசர உலகின் நிலையை உணர்த்தும் அருமையான கவிதை.

    "ப்ளாட்டினப்பந்து" அருமையான கற்பனை :-)

    பதிலளிநீக்கு
  25. @ அமைதிச்சாரல்,

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  26. "இருக்குறதை விட்டுட்டு, பறக்கறதை புடிக்க நெனக்கிறான்" என்று கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள். அது நினைவுக்கு வருகிறது. நல்ல வார்த்தைப் புனையல் ராமனக்ஷ்மி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin